கீற்றில் தேட...

நீட் தேர்வை திணித்து சமூக நீதியின் குரல்வளையை நெரிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சி இப்போது எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர்களுக்கு மற்றொரு கடினமான தேர்வை திணிக்க முன்வந்திருக்கிறது. இந்த தேர்வுக்கு பெயர் National Exit Test, இதன்படி விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், அப்படி தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவர் சேவை செய்ய முடியும். ஏற்கனவே நீட் தடையை கடந்து மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று அதற்குப் பிறகு மருத்துவம் படித்து அதற்குப் பிறகும் அவர்கள் மருத்துவத்தில் சேவை செய்வதற்கு பத்தாண்டுகளுக்குள் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும்.

கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிக்கிறார்கள், ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார், பிறகு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுகிறார். இப்பொழுது நெக்ஸ்ட் தேர்வு எழுதினால் தான் அவர்கள் மருத்துவராக பணியாற்ற முடியும், அதே போல் பல் பட்டப்படிப்புகளுக்கும் நெக்ஸ்ட் தேர்வு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை இராசேந்திரன்