வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி , வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு “ ஒரு தீண்டாமைத் தேர்வு .

தரவுகளின் அடிப்படையாயினும் நியாயத்தின் அடிப்படையாயினும் ஒடுக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்க மாணவர்களின் கனவுகளை நீட் தேர்வு கலைத்து விட்டது .

ஆண்டுக்கு இலட்சங்களில் புழங்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னப்போது மருத்துவத் துறைக்கு தகுதி வேணாமா பொடலங்கா வேணாமா என்று கேட்ட வஞ்சகர்களுக்கு இதோ சில தகவல்கள்:

ஏழை மக்களை மட்டும் நீட் தேர்வு பாதிக்க வில்லை நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளையும் பாதித்துள்ளது. இரண்டு ஆண்டு நீட் தேர்வுக்கு தயாரானவர்களும், CBSE பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தவர்களில் 2017-18இல் பள்ளி படிப்பை முடித்தவர்கள் - 1277.

தனியார் மருத்துவ கல்லூரியில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைத்தவர்களில் 2017-18இல் பள்ளி படிப்பை முடித்தவர்கள் - 557

மொத்தம் (1277 + 557 ) = 1834

இரண்டு ஆண்டு காத்திருந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதியா?

இது தமிழகத்திற்கான பிரச்சனையா? அல்லது இந்தியாவின் பிரச்சனையா? இந்தியா முழுக்க நீட் தேர்வால் அனிதாக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

2014 முதல் 2017 வரை நீட் வருவதற்கு முன்னர் CBSE மாணவர்களின் மொத்த தேர்ச்சி எண்ணிக்கை :

அரசாங்க மருத்துவக் கல்லூரிகளில் = 14

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் :

2+ 2 + 21 = 25

மொத்தம் - 39

ஆக நீட் கோச்சிங் என்னும் ஸ்பெஷல் கோச்சிங் இல்லாமலும் CBSE பாடதிட்டத்தில் படித்து தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரியில் கிடைத்த மொத்த இடம் 39.

2017-2018இல் மட்டும் CBSE பாடத்திட்டத்தில் படித்து கூடுதலாக நீட் கோச்சிங் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை : (நீட் தேர்வுக்குப் பிறகு)

அரசு மருத்துவக் கல்லூரிகளில் = 611

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் = 283

தனியார் மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை : (நீட் தேர்வுக்கு முன்)

2014 -2015 : 798

2015 -2016 : 657

2016-2017 : 1173

நீட் தேர்வுக்குப் பிறகு

2017-2018 : 03 (பெரும் சரிவு)

அரசாங்க மருத்துவ கல்லூரியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை : : (நீட் தேர்வுக்கு முன்)

2014 -2015 : 2226

2015 -2016 : 2247

2016-2017 : 2321

நீட் தேர்வுக்குப் பிறகு

2017-2018 : 20 (பெரும் சரிவு)

நீட் கோச்சிங் வாய்ப்பு எல்லா மாணவர் களுக்கும் கிடைக்குமா?

ஆக வர்க்க பார்வையில் பார்த்தாலும் சரி, வருண பேத பார்வையில் பார்த்தாலும் சரி “நீட் தேர்வு” ஒரு தீண்டாமைத் தேர்வு, மோசடி தேர்வு.

ஆதாரங்கள் மறுமொழியில்.

Pin It