1) ஆருத்ரா நிறுவனம் 2400 கோடி வரை மோசடி செய்துள்ளது. ஒரு லட்சத்து 9255 பேர் முதலீடு செய்துள்ளனர். அதிகமான வட்டி தருவதாக கூறி முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

• தமிழ்நாட்டையே உழுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்த ஹரீஷ், ஆருத்ராவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

• ஹரீஷ் மாநில பதவி பெறுவதற்கு, பாஜகவில் சிலருக்கு மோசடி செய்த பணத்தில் இருந்து லஞ்சம் கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

• “ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகின்றனர். பணத்தை பெற்றுக் கொண்டு பொறுப்பு போடுகிறார்கள்” என்று கூறி பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ண பிரபு (13.04.2023) அன்று ராஜினாமா செய்துள்ளார்.

• மேலும் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ், ராணிப்பேட்டை மாவட்ட பாஜக செயலாளர் டாக்டர் சுதாகர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

2) பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது மகன் நயினார் பாலாஜி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக திருநெல்வேலியில் கடந்த ஆண்டு (2022) பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

• மோசடியாக செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு 100 கோடி ஆகும். வாரிசு இல்லாத நிலத்தை அபகரித்துள்ளனர். அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

3) கோவையில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2019 ஆம் ஆண்டு, ரூ. 28 இலட்சம் பாஜகவை சேர்ந்த நபர் மோசடி செய்துள்ளார். அந்த பாஜக பிரமுகர் உத்திரப்பிரதேசத்தின் மாநில பொறுப்பாளர். காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

4) விருதுநகர் மாவட்ட மேற்கு மாவட்டத் தலைவர் சுரேஷ் குமார் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 2017 ஆம் ஆண்டு 11 இலட்சம் மோசடி செய்துள்ளனர்.

• இருவரும் மோசடி செய்தது, பாஜகவின் சிவகாசி மாநகரத் துணைத் தலைவராக பதவி வகித்த பாண்டியன் என்பவரைத் தான். பாண்டியன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் அளித்தும் பணம் கிடைக்கவில்லை.

• எனவே, பாண்டியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் விருதுநகர் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் சுரேஷ் குமார் மற்றும் கலையரசன் இருவரும் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

5) திருச்சியில், எல்ஃபின்(ELFIN) என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்த ராஜா பாஜகவைச் சேர்ந்தவர். ஆருத்ராவிற்கு முன்னோடியாகவே இந்த மோசடி உள்ளது. பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். புகார்களை அடுத்து ராஜா மற்றும் அவரது தம்பி ரமேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

• 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது இவரது காரில் இருந்து 2 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக பிடிபட்டது.

6) மயிலாடுதுறை மாவட்ட பாஜக கைத்தறி இணை செயலாளர் விஜயன் என்பவர், 6.70 இலட்சம் மோசடி. ஒன்றிய அரசு நிறுவனமான ONGC இல் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

7) பாஜக மாநில யுவ மோர்ச்சா மாநில செயலாளர் ராகுல் தினேஷ் சுரானா, சுரானா என்ற நிறுவனத்தை நடத்தி 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்து கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு கைதாகினார். தங்கங்களை முறைகேடாக கடத்தியது தெரியவந்துள்ளது.

• வெளிநாடுகளில் சட்ட விரோத முதலீடு, வரி எய்ப்பு, ஜி.எஸ்.டி முறைகேடு, வங்கிகளில் வாங்கிய பணத்திற்கும் வட்டி கட்டாமல் மோசடி என சுரானா நிறுவனம் ஈடுபடாத மோசடிகளே இல்லை.

8) பாஜகவைச் சேர்ந்த யூ டியூபர் கார்த்திக் கோபிநாத், பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலை சீரமைப்பதாக கூறி இணையத்தில் 38 இலட்சம் ரூபாய் நிதி வசூலித்து மோசடி செய்துள்ளார். கடந்த வருடம்(2022) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

9) தமிழ்நாடு பாஜக விழுப்புரம் மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் சங்கரன். இவர் அரசு ஆசிரியராகவும் பணியில் இருந்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மின்சாரத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 70 இலட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

10. டெல்லி துவாரகா – குருகிராம் கேர்கி தவுலா சுங்கசாவடி இடையே 19.06 கிமீ நீள விரைவுச்சாலை அமைக்க திட்டம்.

11. திட்டத்துக்கு தேவையான நிலத்தை அரியானா மாநில அரசு இலவசமாக வழங்கியுள்ளது,

12. பொருளாதார விவகார ங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கிமீக்கு ரூ.18.20 கோடி வீதம் ரூ.529 கோடியில் திட்டத்துக்கு அனுமதி

13. கடந்த 2019-ல் திட்டப்பணிகள் தொடங்கியது.

14. திடீரென கிமீக்கு ரூ.250.77 கோடி வீதம் ரூ.7287 கோடி செலவிட ஒன்றிய நெடுஞ்சாலை துறை திட்டம்.

15. ரூ.6758 கோடி முறைகேட்டை சிஏஜி அம்பலப்படுத்தியுள்ளது.

தொகுப்பு : மனோஜ்

(தொடரும்)

Pin It