முற்போக்கு பேசிவந்த கமல்ஹாசன் தற்போது ஊழலுக்கு எதிரான அவதாரம் எடுக்கப் போவதாகவும் அதுவும் அரசியல் அவதாரமாக இருக்கும் என ஊடகங்களில் முழங்கி வருகிறார். அவரது ஊழல் ஒழிப்பு என்பது மாநில அளவில் மட்டுமே இருக்குமாம். அதுவும் இந்த ஊழலை ஒழிப்பதற்காக  பி.ஜே.பி, காங்கிரஸ்ஸுடன் தேவைப்பட்டால் கைகோர்ப் பாராம்!

நல்லது, ஊழல் ஒழிவதில் யாருக்கும் வருத்தமோ கவலையோ இருக்கவே இருக்காது. மாறாக மகிழ்ச்சியே. அதேசமயம் அவரது கூற்று ஊழலை எதிர்க்கிறதா? அல்லது ஊழல் என்ற சாக்கில் பார்ப்பன எதிர்ப்பை முனை மழுங்க வைக்கும் யுக்தியா? (குயிக்தியா?) என்பதைச் சமூகக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்.

“தேசியம் என்பதற்கு அரசியலைச் சம்பந்தப்படுத்திய கருத்தும் இந்தியாவின் பழைய நாகரீகத்திற்கும், பழக்கவழக்கத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறு இல்லை.”

- தோழர் பெரியார், குடி அரசு 19.03.1933

“இன்று இந்திய யூனியனின் முக்கியக் கொள்கைகள் என்னவென்றால், சாதி காப்பாற்றப்பட வேண்டும்;மேல் சாதியான் மேல் பதவியில் இருக்கும்படியான தன்மைகள், முறைகள், பரம்பரை பழக்கவழக்கங்கள் இவை தவிர, யூனியனில் வேறு எந்த, மற்ற நாடுகளில் இல்லாத சிறப்பான, குறிப்பான ‘நன்மைகள்’ இருக்கின்றன?”

- தோழர் பெரியார், விடுதலை  09.06.1972

மாநில உணர்வு என்பது அடிப்படையில் மனித உரிமை சார்ந்தது. நதி நீர்ச் சிக்கல்கள், மொழி, கனிமவள உரிமை, கல்வி உரிமை, மருத்துவ உரிமை,…..போன்ற அடிப்படை உரிமைகள் சார்ந்தது. எத்தனை பித்தலாட்டங்கள் செய்தாலும் மாநிலக் கட்சிகளின் குரல்கள் இதனடிப்படையிலேயே இருக்கும்.

மாறாக தேசியக் கட்சிகளின் குரல்கள் மாநில உரிமைக்குரலை நசுக்குவதாகவே இருக்கும். நுழைவுத் தேர்வு, நீட் போன்ற தகுதித் தேர்வு, சமஸ்கிருதம் கலந்த இந்தித் திணிப்பு, தேசிய நதி நீர் ஆணையம் என்கிற பேரால் இரு தேசிய இனத்துக்குள் இருக்கும் சிக்கலை மேலும் குழப்புவது, ஒரே கல்வி என்கிற பெயரில் கல்வி உரிமையில் ஆதிக்கம் செய்ய முனைவது,…போன்ற  அடிப்படையிலேயே இருக்கும்.

அதாவது தேசியக் கட்சிகள் பார்ப்பன நிலையிலும், மாநிலக் கட்சிகள் சூத்திர நிலையிலும் இருக்கும். சூத்திரனின் குற்றேவலில் குறை கண்டுபிடித்து மாநில உரிமைகளைப் புறந்தள்ளி சூத்திர ஊழலை முன்னிறுத்தி மேலும் பார்ப்பன அடிமையாக்கும் முழக்கமே பார்ப்பனக் கமல் ஹாசனின் ஊழல் ஒழிப்பு முாக்கம்!

என்னவோ! தேசியக் கட்சிகள் யோக்கியம் போலவும் இந்த சூத்திர ஊழலை ஒழிக்க அந்த பா.ஜ.க.,காங்கிரஸ் யோக்கியர்களுடன் கை கோர்ப்பேன் எனக்கூறி பெரியாரிய மண்ணிலேயே ‘பெரியவா’ போலப் பேசுகிறார். ஹலோ! கமல், நீங்கள் மறைக்க விரும்பும் விசயம் ஊழலின் ஊற்றுக் கண்ணே; தேசியக் கட்சிகள்தான் என்பது!

அப்படியே மெதுவாக தேசியக் கட்சிகளின் ஊழல் பட்டியலைக் கிடைத்தவரைப் பார்ப்போமா? அதுவும் அவர்கள் செய்த ஊழலின் தற்போதைய மதிப்புடன்?

1.  1948 ஜீப் ஊழல் – வி.கே.கிருஷ்ணமேனன். ஊழல் பண மதிப்பு ரூ- 80 லட்சம். தற்போதைய மதிப்பு – ரூ-  213 கோடி,

2.  1949 ராவ் சிவ் பகத்சிங்  அர்ஜுன் சிங்கின் அப்பா. பண மதிப்பு ரூ- 25,000. தற்போதைய மதிப்பு – ரூ-  67,64,646,

3. 1951 சைக்கிள் இறக்குமதி ஊழல் S.A.வெங்கட்ராமன் Secretaray,Ministry of Commerce and Industry,,

4. 1956  BHU பண மோசடி வழக்கு. பணமதிப்பு ரூ-50 லட்சம். தற்போதைய மதிப்பு ரூ- 133,31,41,120

5. 1958 முந்திரா ஊழல். இந்திரா காந்தி. பண மதிப்பு ரூ- 1.2 கோடி.தற்போதைய மதிப்பு ரூ-319,95,38,687,

6. 1960 தேஜா லோன் ஊழல். ஜெயந் சர்மா தேஜா.பண மதிப்பு ரூ-22 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 5001,17,90,808,

7. 1964 கைரான் வழக்கு பிரதாப் சிங்,

8. 1971 நாகர்வாலா ஊழல். இந்திரா காந்தி,வெங்கட் பிரகாஷ் மல்கோத்ரா.பண மதிப்பு ரூ- 60 லட்சம். தற்போதைய மதிப்பு ரூ- 77,06,36,356,

9. 1974 மாருதி ஊழல். இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி,

10. 1976 KUO எண்ணை ஊழல்.இந்திரா காந்தி.பண மதிப்பு ரூ- 2.2 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 129,50,99,106,

11. 1980 THAL Vasit Project.. பெட்ரோலிய செக்ரெட்டரி,  எச்.என்.பகுகுணா, என்.என்.கபாடியா பெட்ரோலியத் துறை அமைச்சர்,  பி.சி.சேத்தி, கே..உண்ணிக்கிருஷ்ணன்,

12. 1986 ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல் ஊழல்

13. 1990 ஏர்பஸ் ஊழல் பண மதிப்பு ரூ-2.5 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 19,86,92,403,

14. 1992 ஹர்சத் மேத்தா ஊழல். ஹர்சத் மேத்தா.பண மதிப்பு ரூ- 5,000 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 29338,94,87,097,

15. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல். பண மதிப்பு ரூ- 4,200 கோடி. தற்போதைய மதிப்பு ரூ-23229,70,86,615,

16. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ- 5000 கோடி தற்போதைய மதிப்பு  ரூ.27169,87,25,991,

17. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ. 400 கோடி தற்போதைய மதிப்பு ரூ.2173,59,01,131,

18. 1995 - காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ. 400 கோடி தற்போதைய மதிப்பு ரூ. 2173,59,01,131,

19. 1995 மேகாலயா காடு பாதுகாப்புத் திட்டம். பண மதிப்பு ரூ-300 கோடி.தற்போதைய மதிப்பு ரூ-1630,19,32,206,

20. 1995 Preferential allotment யடடடிவஅநவே திட்டம். பண மதிப்பு ரூ-5000 கோடி. தற்போதைய மதிப்பு ரூ-27169,87,25,991,

21. 1995 Yuoslav Dinar  திட்டம். பண மதிப்பு ரூ-400 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 2173,59,01,131,

22. 1995 லக்குபாய் பதக் ஊறுகாய் ஊழல். நரசிம்மராவ்,

23. 1996 தொலைத்தொடர்பு ஊழல். சுக்காராம்,

24. 1996 யூரியா பேர ஊழல் சி.எஸ்.ராமகிருஷ்ணன் M.D.,National Fertiliser and group of businessmen, நரசிம்மராவ்.பண மதிப்பு ரூ-133 கோடி. தற்போதைய மதிப்பு ரூ- 655,48,91,112,

25. 1996 ஹவாலா ஊழல். எஸ்.கே.ஜெயின், எல்.கே..அத்வானி, வி.சி..சுக்லா, சி.கே..ஜாஃபர் செரிஃப், ஆசிஃப் முகமதுகான், மதன்லால் குரானா, கல்பத் ராய், என்.டி. .திவாரி

26. 1997 - எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ. 374 கோடி தற்போதைய மதிப்பு ரூ.2012,95,11,326,

27. 1997 சி.ஆர். பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ. 1200 கோடி தற்போதைய மதிப்பு ரூ.6458,66,78,373,

28. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ. 8000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.50296,16,78,793,

29. 2001 யு.டி.ஐ. ஊழல் - ரூ. 4800 கோடி தற்போதைய மதிப்பு ரூ.28388,09,37,921,

30. 2001 பங்குச்சந்தை ஊழல்கள். கேதன் பராக். பண மதிப்பு ரூ-1,15,000 கோடி.தற்போதைய மதிப்பு ரூ- 680131,39,67,091,

31. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ. 1250 கோடி தற்போதைய மதிப்பு ரூ.7392,73,32,087,

32.  2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலக அளவில் ஊழல் - ரூ. 1 பில்லியன் வரை தற்போதைய மதிப்பு ரூ.591,41,82,498,

33. 2002 கார்கில் யுத்த ஊழல்.  சவப்பெட்டி ஊால்,

34. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ. 600 கோடி தற்போதைய மதிப்பு ரூ.3548,51,20,419,

35. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ. 1200 கோடி தற்போதைய மதிப்பு ரூ.5449,49,96,367,

36. 2003 பத்திர ஊழல் (Stamp Paper) அப்துல் கரீம் தெல்கி.பண மதிப்பு ரூ-30,000 கோடி. தற்போதைய மதிப்பு ரூ-136237,50,10,899,

37. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ. 146 கோடி தற்போதைய மதிப்பு ரூ.530,41,69,101,

38. 2005 - ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ. 18, 979 கோடி தற்போதைய மதிப்பு ரூ.68950,70,66,367,

39. 2005 நட்வர் சிங்கின் Oil for Food,

40. 2006 பஞ்சாப் சிட்டி சென்ட்டர் ஊழல் - ரூ. 1500 கோடி தற்போதைய மதிப்பு 4541,24,92,734,

41. 2006 தாஸ்காரிடார் ஊழல் ரூ. 175 கோடி தற்போதைய மதிப்பு ரூ.529,81,16,523,

42. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ. 50,000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.101724,00,00,000,

43. 2008 சத்யம் ஊழல் - ரூ. 10, 000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.20344,80,00,000,

44. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் –தற்போதைய மதிப்பு ரூ. 513 கோடி1043,68,82,400,

45. 2008 ராணுவ ரேசன் ஊழல் - ரூ. 5000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.10172,40,00,000,

46. 2008 - ஸ்டேட் பாங்க் ஆப் செளராஸ்ட்ரா ஊழல் - ரூ. 95 கோடி தற்போதைய மதிப்பு ரூ.193,27,56,000,

47. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ. 2500 கோடி தற்போதைய மதிப்பு ரூ.4884,65,53,478,

48. 2009 ஒரிசா சுரங்க ஊழல் - ரூ. 7000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.12277,03,39,566,

49. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ. 37000 கோடி தற்போதைய மதிப்பு ரூ.64892,89,55,871,

50. 2010 எல்.ஐ.சி. வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல்

51. 2010 மும்பையில் ராணுவ வீரர்களுக்கு அடுக்குமாடிக்  குடியிருப்பு ஆதர்ஷ் ஊால்

52. 2010 புதுடெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற ஊால்.

53. 2010 ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல்

54. 2012- வக்பு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 200000 கோடி

55. 2012 இந்திய நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு ஊழல் - ரூ. 185591 கோடி

56. 2012 உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்ட ஊழல்- ரூ. 10000 கோடி

57. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊால்.

58. தங்க நாற்கரச் சாலை அமைக்கும் திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊால்.

59. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும் சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ரூ 75,000/- கோடி ஊழல்.

60. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதற்கு ஆதரவாகச் செயல்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மாசுவராஜ் பெற்றது ரூ 1500 கோடி ஊால்.

61. அனைத்திற்கும் மேலாக நரேந்திர மோடி முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் அலுமினா சுத்திகரிப்பு ஆலைக்கு நிலம் குத்தகைக்கு வழங்குவதில் செய்த நிதி மோசடி ஊழல்.

கொள்முதல் முதற்கொண்டு,சாதனங்கள் உற்பத்தி வரையிலான எந்த விசயமும் கேள்விக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்ற சூழ்நிலையை அதாவது தேச பக்தி,தேசப் பாதுகாப்பு என்ற போர்வையில் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை. ஆம் அதுதான் பாதுகாப்புத் துறை!

1. ரூ.3,600 கோடிகள் மதிப்புக் கொண்ட இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் உலங்கு ஊர்தி (ஹெலிகாப்ட்டர்) உடன் படிக்கையில் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த அய்யத்தை அடுத்து அந்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டது,

2. BEML என்ற பொதுத் துறை நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் டாட்ரா டிரக் எனும் அனைத்து தரைப்பகுதிக்களுக்குமான தரைப்படை போக்கு வரத்து வாகனம் வாங்குவதில் கடந்த 14 ஆண்டு களாக குறைந்தது ரூ.750 கோடிகள் லஞ்சமாகவும், முறைகேடான தரகுத் தொகையாகவும் விழுங்கி விட்டனர் என்பதால் அந்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டது.

3. HDW நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் நடை பெற்ற போது கடற்படையின் அட்மிரலாக இருந்தது எஸ்.எம்.நந்தா.அவர் பதவி ஓய்வுக்குப் பின் க்ரெளன் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தின் அதிகாரியானார். அந்தக் க்ரெளன் என்பது ஒரு கேடு கெட்ட ஆயுத நிறுவனம்.அது நந்தாவின் மகனான சுரேசு நந்தாவின் ஆயுத வணிக நிறுவனம். அவர் பாராக் ஏவுகணை ஊழல் தொடர்பாகச் சோதனைக்கு ஆளானவர்.

4. ஊழலுக்குப் பின் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டாட்ரா வாகனத்துக்கான தடையை அப்போதையப் பாதுகாப்புத் துறையின் அமைச்சர் மனோகர் பாரிக்கர் இரத்து செய்கிறார். ஊழலுக்கு சில சில்லறை அதிகாரிகள்தான் காரணம் எனக் கூறி அனுமதிக்கிறார். இந்திய இராணுவத்துக்கு இந்நிறுவனம் வழங்கும் சரக்குந்துகள் ‘தரங் குறைந்தவையாக’ இருந்ததாகவும், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு கையூட்டு அளிக்க அந்நிறுவனம் முன்வந்ததாகவும் ஓய்வு பெற்ற தரைப்படைத் தளபதியான வி.கே.சிங் 2012 ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டிய பின்புதான் இந்தத் தடை விதிக்கப்பட்டது. அந்த வி.கே.சிங் தற்போதைய அமைச்சரவையில் உள்ளார்,

5. பிரஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியன்ஸ், 1000 கோடி டாலர்களுக்கு(நம் பண மதிப்பில் ரூ.50,000 கோடி)புரிந்துகொள்ளும் திறனுள்ள தொழில் நுட்பப் பரிமாற்றத்துடன் (TOT) ரஃபேல் போர் விமானங்களை (126 விமானங்கள் 18 விமானங்கள் பறக்கும் நிலையிலும் மீதம் 108ம் ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல் நிறுவனத்தில் வைத்து தயாரிப்பதற்குத் தொழில் நுட்பம் மற்றுமாலோசனை வழங்க வேண்டும்) வழங்க முன்வந்தது.

ஆனால் ஒப்பந்தப் புள்ளியைப் பெற்ற பின்,அந்நிறுவனம் விலையை 3000 கோடி டாலருக்கு (நம் பணமதிப்பில் ரூ.1,50,000 கோடி) உயர்த்தியது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சகம் அதைப் புறக் கணிக்கக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.அதை விடக் கொடுமை இந்த ஒப்பந்தத்தை ஃபிரான்ஸ் சென்ற பாரதப் பிரதமர் மோடி இரத்து செய்து விட்டு தற்போது 36 ஜெட் போர் விமானங்களை 7.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

6. இப்புதிய ஒப்பந்ததில் ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல் கழற்றிவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை  டசால்ட் ஏவியன் நிறுவனத்துடன் கூட்டாளி ஆக்கியுள்ளது,

7.   2012ல் ஒரு ஜெட் 526.10 கோடி.மோடியின் ஒப்பந்தத்தில் ஒரு ஜெட்டின் விலை 1570.80 கோடி,

8.   விமானந்தாங்கி போர்க் கப்பல்களான ப்ராஜக்ட்15 (டிஸ்ராய் ரக போர்க் கப்பல்கள்), ப்ராஜக்ட் பி-115(போர்க் கப்பல்) மற்றும் ப்ராஜக்ட்  பி-17(போர்க் கப்பல்கள்) இவற்றை ஒரு கப்பலுக்கு ரூ.93 கோடி தொடக்கத்தில் உத்தேசிக்கப்பட்ட இரகசிய சாதனத்தின் விலையானது இறுதியாக ஒரு கப்பலுக்கு ரூ.707 கோடி என உயர்ந்தது,

9.  டையோ கிரிஸ்டல் எனும் கடற்படை சாதனம் ரூ.35 லிருந்து ஒரு வாரத்திலேயே ரூ.17,305 க்கு விலை கொடுத்து வாங்கியது,

10. எலக்ட்ரிக் ரிலே என்ற ரூ.95 மதிப்புள்ள சாதனத்துக்கு ரூ. 11,192 விலையாகக் கொடுக்கப் பட்டது,

11. பேலன்சிங் பிஸ்ட்டல் என்ற கருவி ரூ.1,475 க்கு வாங்கப்பட்டு பின் அதே கருவியின் மற்றொரு வகை ரூ.46,750 க்கு வாங்கப்பட்டது.

இதில் என்ன கொடுமையான உண்மை என்றால் மத்திய அரசில் உள்ள 55 துறைகளில் அமைச்சரகங்களில் நாட்டின் போக்கை திட்டமிடும் அதிகாரம் மிக்க 74,866 பதவிகளில் 51,762 பதவிகளில் பார்ப்பனரே! அதாவது 70 சதம் பார்ப்பனரே! இத்தனைக்கும் இடஒதுக்கீடு 50 சதம் இருந்தும் அதைப் புறக்கணித்து அதிகாரம் செய்கிறது அக்கிரகாரம்!

நமது உளவுத்துறையில் பெரும்பாலும் பார்ப்பனர்களே! இந்த உளவுத்துறைக்கு ஏரளமான பணம் அமெரிக்காவிலிருந்து வருகிறது. இதனைத் தமிழகக் காவல் துறையில் பணியாற்றிய திரு.மோகன் தாஸ் கூறியுள்ளார். இந்தத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் பிள்ளைகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். சிலரின் குடும்பம் அமெரிக்காவில் உள்ளது. சிலருடைய பிள்ளைகள் அமெரிக்காவில் குடியுரிமைக்கானப் பச்சை அட்டை பெற்றுள்ளனர்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஊழல்கள் நடைபெற்றால் ஒப்பந்தங்கள்தான் இரத்து செய்யப்படுகிறதே ஒழிய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் காணோம்ம்ம்ம்ம்ம்ம்!!!

ஊழல் செய்வதில் மட்டுமல்ல; ஊழல் சேற்றை வாரி இறைப்பதிலும் தேசியக் கட்சிகளே முதலிடம்.

1. முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் வளர்ச்சி பிடிக்காமல் அவர் மீதும் அவர் மகன் மீதும் போலியான ஊழல் குற்றச்சாட்டைக் கூறி அவருக்குக் களங்கம் ஏற்படுத்த ஒரு பெரும் பார்ப்பனக் கூட்டமே மோசடி செய்து அம்பலப் பட்டுப் போனது!!

2.  அதுதான் செயிண்ட் கிட்ஸ் மோசடி வழக்கு!

3.  பி.வி..நரசிம்மராவ் பார்ப்பனர், கே.கே..திவாரி பார்ப்பனர், சந்திராசாமி தரகுப் பார்ப்பனர் (ராஜீவ் கொலையில் பலத்த சந்தேகத்துக்கு உள்ளானவர் ), சந்திராசாமியின் கையாள் மாமாஜி – பார்ப்பனர், கல்பனாத்ராய் – பார்ப்பனர் ( நாடாளு மனற உறுப்பினராக இருந்து பிறகு அமைச்சராகிச் சர்க்கரை ஊழலில் மாட்டி சிறைப்பட்ட வர்ணாஸ்ரம வெறியர்,இதில் இன்னொரு உண்மை இவர் தாவூத் இப்ராகிம் என்ற இன்னும் இந்திய அரசால் தேடப்படும் குண்டு வெடிப்புக் குற்றவாளியின் நண்பர் ), ரத்தினாகர் பாண்டே – பார்ப்பனர், வர்மா – பார்ப்பனர் ( செயலாக்கப் பிரிவு அதிகாரி )!!

4.   இந்தப் பழி போடும் பொய் வழக்குக்காகப் பார்ப்பன சுப்பிரமணி ஸ்வாமியும் உடந்தை (இவருக்கும் ராஜீவ் கொலைக்கும் மிகுந்த நெருக்கம் இருப்பதாக இவரோடு இருந்த திருச்சி வேலுச்சாமி அவர்கள் புத்தகமே வெளியிட்டுள்ளார்)!!

5.   இம் மோசடி மீது வழக்குப் பதிந்து நேர்மையாக செயல்பட்ட என்.கே..சிங் எனும் சி.பி.அய். அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து வழக்கின் முக்கிய காலகட்டத்தில் பணிமாற்றம் செய்து இடைஞ்சல் கொடுத்தனர்!

தேசியக் கட்சிகளென்றாலே ஊழல் பித்தலாட்டம் இவற்றின் மொத்தக் குத்தகைதாரர்களாவர்

மேற்கண்ட ஊழல்கள் தவிர மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெரு நிறுவனங்கள் முதலியவற்றுடன் தொழில் ணபுரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும்போது இந்தியாவின் பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர்அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மதிப்பீட்டுத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு (ஏறக்குறைய 25 சதம்) லஞ்சமாக பெறுகின்றனர். பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், நபார்டு சாலை மேம்பாட்டுத் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் முதலியவைகளிலும் மேற்கண்ட நபர்கள் லஞ்சம் பெறுகின்றனர்.

இந்தியாவில் லஞ்சத்திலும், ஊழலிலும் புரளும் பணத்தைக் கொண்டு இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தரமான மருத்துவ மனைகள் அமைக்க முடியும். சுத்திகரிப்பு செய்து நீர்ப்பாசனத்தை பெருக்கி விவசாயத்தை மேம்படுத்த முடியும். விவசாயிகளின் விவசாயக் கடன்களையும், மாணவர்களின் கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும். இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்குக் இலவசக் கல்வி அளிக்க முடியும்.இந்தியாவில் உள்ள வீடற்ற ஏழை மக்களுக்குத் தரமான பாதுகாப்பான வீடு கட்டி வழங்கு முடியும். இந்தியாவில் உள்ள அனைத்த கிராம, நகர மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும். அண்மையில் பி.பி.சி தொலைக்காட்சி நடத்திய ஆய்வில், ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது

ஊால்களை மாநிலங்களில் முதலில் தொடங்கியதே தேசியக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான்.பின்னர் படிப்படியாக மற்ற மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியைப் பார்த்து ஊழலைத் தொடங்கின.அதுவும் 1970 களில்!. வாய்ப்பாகக் தேசியக் கட்சிகளும் இதனை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டுப் பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடி ஊடகங்களில் மெதுவாக ஊழல் என்பதே மாநிலக் கட்சிகளால்தான் என்ற கருத்துருவாக்கத்தை உண்டாக்கினர்.பார்ப்பன மயமான வருமான வரித்துறையால் மிரட்டப்பட்டுப் பார்ப்பன மயமான ஆடிட்டர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

இப்படிப் பச்சையாக தேசியக் கட்சிகளின் ஊழல்மயத்தை மறைத்துவிட்டு அவர்களோடு கூட்டுச் சேர்ந்து ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் கமல் அவர்களே! பார்ப்பனர் பூணூல் அணிந்தாலும் அணியாவிட்டாலும் பார்ப்பனர் பார்ப்பனரே! பார்ப்பனரே!!  பார்ப்பனரே!!!!

Pin It