‘தினமலர்’ நாளேடு எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் வெற்றிக்கு யாகம் நடத்திய செய்தியை ‘டீ கடை பெஞ்ச்’ பகுதியில் வெளியிட்டு யாகத்தையும் கிண்டலடித்துள்ளது.

“முதல்வர் வீட்டில் சிறப்பு யாகம் பண்ணிருக்காவ வே...” என, கடைசித் தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

“என்ன விஷயம் பா...” எனக் கேட்டார், அன்வர்பாய்.

“தேர்தல் பிரசாரம் முடிந்ததால், முதல்வர் இ.பி.எஸ்., சேலத்தில் உள்ள, தன் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில், ஓய்வு எடுக்குறார் வே...”

“இந்நிலையில, தமிழ் புத்தாண்டன்று, அவர் வீட்டுல, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, சிறப்பு ஹோமம் நடத்திருக்காவ... தேர்தல் முடிவு, தங்களுக்கு சாதகமாக வரணுமுன்னு தான், இந்த ஹோமம் நடத்தினதாக பேசிக்கிறாவ வே...”

“இதுல, முதல்வரின் குடும்பத்தினர் மட்டும் கலந்துருக்காவ... ஹோமத்தை, திருவண்ணாமலையை சேர்ந்த ஜோதிடர் முன்னிலையில், சேலம் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் நடத்தியிருக்கார் வே...”

“ஹோமம் செஞ்சதால, மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமையுமுன்னு, முதல்வர், இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில இருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.

“அப்புறம் எதுக்கு, வேகாத வெயில்ல பிரசாரத்துக்கு போகணும்...” என்றபடியே அந்தோணிசாமி நடையை கட்ட, நண்பர்களும் சிரித்தபடியே பின் தொடர்ந்தனர்.

- ‘தினமலர்’ ஏப்.17

Pin It