tamil illakiyum 450நிர்வாகம், அலுவலகம் போன்றவற்றில் மேலாண்மை பற்றியே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. சொல்லப் பட்டிருக்கிறது. மேலாண்மை பற்றி எங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆய்வு நோக்கில் தேடிக்கண்டுபிடித்து தொகுக்கும் பணியினை பலர்  செய்திருக்கிறார்கள்.  ஆனால் வேளாண்மை  மேலாண்மை  முதல் நேர மேலாண்மை வரைக்கும் பல வகையாகப் பிரித்தும் அவற்றின் இலக்கிய அம்சங்களை அலசி நூற்றுக்கும் மேற்பட்ட உட்தலைப்புகள், முந்நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள், நூற்றுக்கணக்கான வரலாற்று மற்றும் உண்மை வாழ்க்கைச் சம்பவங்கள், ஆயிரக் கணக்கான இலக்கியக் குறிப்புகளைக் கொண்டும் இந்நூல் விரிவடைந்துள்ளது. இதை முதன்மைப் படுத்துவதில் எழுத்தாளர் என்ற வகையில் இறையன்பு அவர்களின் அக்கறை புதிய கோணங்களில் இயல்புவாத அணுகுமுறையாக அமைந்திருக்கிறது. 

இலக்கியத்தில் மேலாண்மையை சமகாலத்தில் பயன்படுத்திக்  கொள்ளும் கார்ப்பரேட்தனங்கள், தளங்கள் மற்றும்  Literary based Business Model உருவாகி வளர்ந்து வரும் சூழலில் சிதறு தேங்காயாய் இருக்கும் பொதுமக்களை ஒன்றிணைக்கவும் நம்பிக்கையோடு அடுத்த அடிகளை எடுத்து வைக்கவும் மேலாண்மை விசயங்களுக்கு இருக்கும் முக்கிய வழிகாட்டி இலக்கியம்தான் என்பதை இந்நூலில் நிரூபணமாக்கியிருக்கிறார். அரசு நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவங்களும் நவீன இலக்கியப் படைப் பாளியாக தன்னைக் கட்டமைத்துக் கொள்பவருமான இறையன்பு அவர்கள் அந்த நவீன படைப்புகள் மரபி லிருந்தே ஊற்றெடுப்பதையும் பல்வேறு உதாரணங்கள் மூலம் நிறுவி இருக்கிறார். இலக்கியத்தையும் மேலாண்மையையும் இணைத்துக் காணும்  இந்நூலின் போக்கு சாதாரண வாசகனையும்  சுவாரஸ்யமான வாசிப்பிற்கு இட்டுச் செல்லும்.

என்னுடைய கையெழுத்து எதையாவது பார்த்து எழுதும்போது கிறுக்கலாக இருக்கும். நானாக எழுதும் போது சற்றுத் தெளிவாக இருக்கும். என் கையெழுத்தில் இருந்துதான் மற்றவர்களை நகலெடுப்பது கிறுக்குத் தனம் என்று கற்றுக் கொண்டதை சொந்த அனுபவங்களை முன்வைத்துத் தனித்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவே மனிதன் தன்னைக் கூட்டுப் பொறுப்பு கோரும் சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ள மேலாண்மை பயிற்சி அமைய வேண்டும்  என்பதை வலியுறுத்தி பதிவு களாக்கியுள்ளார்.  அதில் அறிவையும் பண்பாட்டையும் முதலாளிகளும் தொழிலாளிகளும்  வளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து தனது பேச்சிலும் வலியுறுத்தி வருபவர் அதை இலக்கியப் பிரதியாக இந்நூலைத் தந்துள்ளார். அது தரும் ஒளியும் உற்சாகமும் மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கான ஆதாரமாக இருப்பதை இந்நூல் காட்டுகிறது.

இலக்கியம் சரித்திரம் குறித்த அவதானிப்புகள்  வழக்கமான பாணி, பணியிலிருந்து  சற்று விலகி இளைப் பாறும் தன்மை கொண்டிருப்பதைத் தொடர்ந்து காட்டி வருகிறார். இலக்கியம் என்பதை இந்தியச்சூழல் என்பது மட்டுமில்லாமல் வெகுவாக விரிவுபடுத்தி ஆங்கில, அராபிய, சீன, பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஜென் என்று கால்களைப் பதித்திருக்கிறார். நீதி நூல்கள், ராஜநீதி நூல்களும் இலக்கியமாகப் பார்க்கும் இவரின் நோக்கில் சற்று சர்ச்சை இருந்தாலும் வாசிப்பிற்கும் மனதை வழிநடத்தவும் பல கோணங்களை அவற்றி லிருந்து பெற முடிவதை விளக்குகிறார். நடைமுறை களை எளிமையாக்குகிறோம் என்று சிக்கலாக்கிக் கொள்கிறதிலிருந்து விடுவித்துக் கொள்ள பல வழிகளின் திறப்புகளை இந்நூல் காட்டுகிறது. பெரும் பேச்சாளர் களைப் போல் மேடைகளில் உரத்துப் பேசுபவரல்ல இவர். இந்நூலில் உருவாகியிருக்கும் குரலும் அவ்வாறானதே.

ஆனால் ஓங்கி ஒலிப்பதை அழுத்தமாக ஒலிப்பது என்பதாய் அதை விரிவான தகவல்கள், மேற்கோள்கள் மூலம் எடுத்துக் கூறியிருக்கிறார். மேலாண்மையை உருவாக்குவது, அதற்கான பல்வேறு முயற்சிகள், நோக்கமே கட்டளைக்கல்லாக அமைவது என்று நிறைய அடையாளங்களைச் சுட்டுகிறார். இன்றைய வாழ்வியலை சிரமத்துக்குள்ளாக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து நுகர்வு உலகத்தில் இருந்து மனிதனைத் தளர்த்தும்  யோசனைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. இழப்புகள் கூட அனுபவங்களாகி வழிநடத்துகின்றன இவரின் வார்த்தைகளில். இலக்கியம் என்ற கலை டாஸ்கோப்பின் மூலம் மேலாண்மை சார்ந்த கொள் கையை, கட்டமைப்பை நிறுவும் ஒரு முயற்சி இந்நூலில் வெற்றி காணப்பட்டிருக்கிறது. தனிமனித கம்பீரமும் எளிமையும் இதிலிருந்து உருவாவதை கற்பனைத்துக் கொள்ளலாம். மேலாண்மையைத் தாண்டிய மனித நேயத்துடனும் மேன்மையான இலக்கிய நெறிகளை அடுத்த நோக்கில் பார்ப்பதற்கான அடுத்த முக்கியப் படிக்கல்லாகவும் இந்நூலைக் கொள்ளலாம். இந்த

தனிமனித மேலாண்மை என்பதை சற்று வெகுஜனத் திரளுக்கு நகர்த்திக் கொண்டு போய் விரிவுபடுத்தி  அறம் சார்ந்த அரசியல் சக்தியாக மாற்ற முயன்றால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அடுத்த தளத்தில் நிறைய சிந்தனைகளைத் தருகிறது இந்நூல்.

இலக்கியத்தில் மேலாண்மை

ஆசிரியர்: வெ.இறையன்பு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,

அம்பத்தூர், சென்னை - 600 098

தொடர்புக்கு : 044 - 26251968

விலை: ` 1300/-

Pin It