ஒரு காலத்தில் பண் டிகை காலங்களில் மட்டும் வெடித்த பட் டாசுகள் பின்னாளில் அரசி யல்வாதிகள் கைக்கு மாறி, மாநில முதல்வர் முதல் ஏரியா கவுன்சிலர் வரை வரவேற்புக்கு அச்சாரமாக ஆகிவிட் டது. தமது தலைவரை வரவேற்க பல மீட்டர் நீளம் உள்ள சரவெ டிகளை தொண்டர்கள் வெடிக்கச் செய்கிறார்கள். இதனால் அப்ப குதி குப்பை கூளமாக காட்சிய ளிப்பதுடன், காற்றும் மாசுபட்டு மக்களுக்கும் பெரும் இடைஞ்ச லாக ஆகிவிடுகிறது. ஆனால் தொண்டர்களோ- தலைவர்களோ இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் சற்றே வித்தியாசமாக பட்டாசு வெடித்த தனது கட்சியினருக்கு தண்டனை வழங்கியுள்ளார்.

பாமகவின் மாவட்ட பொதுக் குழு கூட்டத்திற்கு வந்த ராம தாசை கட்சி நிர்வாகிகள் பட்டாசு களை வெடித்து வரவேற்றுள்ள னர். "பட்டாசுகளை வெடித்து, காசை கரியாக்கியது யார்?' எனக் கேட்ட ராமதாஸ், "பட்டாசு வெடித்ததற்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் தான் கூட்டத்தில் பேசுவேன்' என கூறி, அதை பெற்றுக் கொண்ட பிறகே அவர் கூட்டத்தில் பேசினார் என்று செய்திகள் கூறுகின்றன. ராமதாசின் இந்த கடுமையான நடவடிக்கை அவரது கட்சியினரை பக்குவப்படுத்தும். இனி மேல் பட்டாசு வெடிப்பதிலிருந்து அவர்களை தடுக்கும். இதே வழி முறையை மற்ற கட்சிகள் பின் பற்றி காசைக் கரியாக்கும் செயலை தடுக்கலாமே?

Pin It