மேஜை மீது நாணயத்தை வைத்து அதன்மீது சீட்டை வைத்து மூடியபின்  நாணயம் மாயமாய் வேறு இடத்திற்கு வருதல்

தேவையானப் பொருட்கள்

நான்கு ஒரேமாதிரி நாணயம் மற்றும் நான்கு சீட்டு

மேஜிக் செய்யும் முறை

மேஜை மீது நான்கு இடங்களில் நான்கு ஒரேமாதிரி நாணயம் வைத்து விடவும். தனித்தனியாக நான்கு சீட்டுக்களை அதன் மீது வைத்து மூடவும்.

ஒவ்வொரு சீட்டின் கீழ் ஒரு நாணயம் இருப்பதை  பின் தனித் தனியே எடுத்துக் காட்டி உறுதி செய்யவும்.

மந்திரம் போடுவது போல் கைகளை ஆட்டி அசைத்து முணுமுணுத்து சீட்டுகள் மீது கையை அமைக்கவும். பின்னர் சீட்டை எடுத்து காட்டும் போது அந்த இடத்தில் நாணயம் இருக்காது. வேறு சீட்டை எடுத்துப் பார்த்தால் அங்கே இரண்டு நாணயங்கள் ஓரிடத்தில் இருக்கும்.

இப்படி மாற்றி மாற்றிச் செய்ய நான்கு நாணயங்களும் ஓரிடத்தில் இருக்கும்.

மேஜிக் இரகசியம்

முதல் கார்டு வைக்கும் போது அடியில் உள்ள நாணயத்தை லாவகமாகச் சீட்டோடு எடுத்துக் கொள்க இதேபோல் மற்றவற்றையும் வேகமாக கார்டை மாற்றி மாற்றி வைத்து பார்வையாளரை ஆச்சரியத்தில் அசத்துங்கள். இதை நீங்கள் தனியே பலமுறை செய்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.                                       

Pin It