குன்றின்மீது நின்று கண்டேன்
கோலம்! என்ன கோலமே!
பொன் ததும்பும் 'அந்திவானம்'
போதந் தந்த தேடி தோழி! (குன்றின்)
முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வர்; அஃது
குறுகும் கொள்கை அன்றோ தோழி! (குன்றின்)
கண்ணும் நெஞ்சும் கவருகின்ற
கடலை, வானைக், கவிஞர் அந்நாள்
வண்ண மயில்வே லோன்என் றார்கள்.
வந்ததே போர்இந்-நாள்-தோழி! (குன்றின்)
எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ!
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில் வெற்பும் நன்-றே-தோ-ழி! (குன்றின்)
பண்ண வேண்டும் பூசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ண வேண்டும் சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண்-டார்-தோ-ழி (குன்றின்)
அன்பு வேண்டும் அஃது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்!
வன்பு கொண்டோர் வடிவு காட்டி
வணங்க என்று சொல்-வார்-தோ-ழி! (குன்றின்)
என்பும் தோலும் வாடு கின்றார்
'ஏழை' என்ப தெண்ணார் அன்றே!
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ-ழி-வா-ழி! (குன்றின்)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு
- சட்டமா? நம்பிக்கையா?
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?
- திருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு
- நெல்லுக்கான ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.3000 என அரசு நிர்ணயிக்க வேண்டும்
- ஈரோட்டில் தொழிலாளர் மீட்டிங்குகள்
- பரந்த பார்வைக்குள் பொடி விஷயம்!
- குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- விவரங்கள்
- எழுத்தாளர்: பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
காட்சி இன்பம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.