periyar 480“பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கடைத் தேறலாம் - சற்றேனும் ஏறுமாறாய் இருப்பாளே யாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்ளு”

என்று “நீதி நூல்கள்” முறையிடுகின்றன. இதைச் சொன்னது சுயமரியாதைக்காரர்களல்லவே. இப்பொழுது சுயமரியாதைக்காரர்கள் ஏறுமாறாய் இருக்கும் “விரதை”களை விட்டுவிட்டு சன்யாசம் கொள்ளு என்பதற்குப் பதிலாக, "வேறு ஒரு பெண்ணை கொள்ளு. சன்னியாசம் கொள்ளாதே" என்கிறார்கள். இதனால் புருஷனின் சன்யாசம் மாறிற்றேயொழிய பெண்ணின் விரதத்திற்கு யாதொரு மாறுதலும் ஏற்படவில்லை. இதற்காக ஏன் சிவநேயர்கள் வேப்ப எண்ணை குடிக்க வேண்டும்?

(குடி அரசு - விமர்சனம் - 14.12.1930)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.