தீபாவளிப் பண்டிகை என்பது அர்த்தமற்றதென்றும், அதற்கு ஆதாரமான கதைகள் பொய்யும் புளுகும் ஆபாசமுமானதென்றும், அதற்காக பண்டிகை கொண்டாடுவது பார்ப்பனனுக்கு நம்மை அடிமை ஆக்கவும் பார்ப்பனனின் ஆதிக்கத்தை பலப்படுத்தவும் ஏற்படுத்தப் பட்டதென்று சொல்லி வந்திருக்கின்றோம்.
அன்றியும் புராணங்களை பொய்யென்றும் ஆபாசமென்றும், பார்ப்பன சூக்ஷி என்றும் தீர்மானித்துவிட்ட மக்கள் மறுபடியும் அதே புராணக் கதையாகிய தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதென்பதும், பட்டாசு வாங்கி சுடுவதென்பதும், அறியாமையும் மூட நம்பிக்கையும், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு விரோதமுமாகும்.
உஷார்! உஷார்!! உஷார்!!!
(குடி அரசு - அறிவிப்பு - 20.10.1929)