periyar annaaசர்.பி. ராஜகோபாலாச்சாரியார் பெங்களூரில் காலமானதாகக் கேட்டு வருத்தமடைகிறோம்.

அவர் வித்தியாசம் பாராட்டாதவர். மூடக் கொள்கைகளில் நம்பிக்கையில்லாதவர். உத்தியோகத்திலும் கூடுமானவரை யோக்கியமாய் நடந்து கொண்டவர். பார்ப்பனரல்லாதார் அநேகரின் அன்புக்கும் விஸ்வாசத்திற்கும் பாத்திரமாயிருந்தவர். உத்தியோக முறையில் பார்ப்பனரல்லாதாருக்கு சிறிதாவது நன்மை செய்த பார்ப்பனர் இருப்பாரானால் அதில் ஸ்ரீமான் சர். பி. ராஜ கோபாலாச்சாரியாரே முதன்மையானவர். அவரது குடும்பத்திற்கு நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - இரங்கலுரை - 04.12.1927)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.