முதல்வரிடம் கோரிக்கை வைத்த சிறைவாசிகள்

அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகச் சிறைகளில் எட்டாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலைச் செய்து வருகிறது தமிழக அரசு. இவ்வாறு விடுதலை செய்யப்படும்போது முஸ்லிம் சிறைவாசிகள் விஷயத்தில் மட்டும் தமிழக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாரபட்சம் காட்டி வருவதாக முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் வருத்தம் உண்டு.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டு விசாரணைக் கைதிகளாக இருக்கும் பலர் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலடைபட்டிருக்கின்றனர். இவர்கள் விஷயத்தில் தமிழக அரசு பாரபட்சமாகவே நடந்து வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளை (அரசானை எண் 1326) 12-09-2007 அன்று விடுதலை செய்வதாக அறிவித்தது அரசு. அதன்படி விடுதலை செய்யப்பட்டவர்களில் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

இதேபோல 2009ம் ஆண்டு அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு 10 ஆண்டுகள் ஆயுள் தன்டனை முடித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய (அரசாணை எண் 792) 14-09-2009 அன்று அறிவித்தது அரசு. இதில் சில முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்பட்டா லும் பலர் விடுவிக்கப்படாமல் இருந்தனர்.

பின்னர், திமுக அரசு கோவையில் நடத் திய செம்மொழி மாநாட்டிலும் எட்டாண் டுகள் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறி விக்கப்பட்டிருந்தது. ஆயினும் அம்மாநாட்டையொட்டியும் முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இது செம்மொழி மாநாட்டுக்கு ஏற்பட்ட கறை என்று அப்போது சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

கோவை சிறையில் இருக்கும் அபுதாஹிர், ஜாஹிர் உசேன் என்ற இரண்டு கைதிகள், "எங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கா விட் டால் கருணைக் கொலையாவது செய்து விடுங்கள் என்று தமிழக அரசுக்கு கடிதம் கூட எழுதியிருந்தனர். (இக்கடி தத்தை செப். 11-17, 2010 தேதி யிட்ட மக்கள் ரிப்போர்ட்டில் பிர சுரித்திருந்தோம்.) எட்டாண்டு காலம் சிறை வாசம் அனுபவித்த முஸ்லிம் கைதிகளை பொது மன் னிப்பு அல்லது கருணை அடிப்ப டையில் விடு விக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளும், சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் கூட ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசை வலி யுறுத்தியே வந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து குறிப் பிட்ட முஸ்லிம் கைதிகள் விஷயத்தில் அரசு பாரபட் சம் காட்டியே வருகிறது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றிருக்கும் ஜெயல லிதா அரசாவது தங்களது வேதனையை உணர்ந்து விடுதலை செய்யும் என்ற எதிர் பார்ப்போடு இருக்கும் முஸ்லிம் சிறைவாசி கள், கடந்த 1ம் தேதி கோவை சிறையை பார் வையிடச் சென்ற சட்டம் மற் றும் சிறைத்துறை அமைச்சர் சுப்பையாவைச் சந்தித்து தமி ழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அமைச்சர் சுப்பையாவைச் சந்தித்த கோவை சிறைவாசிக ளான அல் உம்மா பாட்ஷா பாயும், தாஜுதீனும் ஒட்டு மொத்த சிறைவாசிகளின் சார் பில் கோரிக்கை கடிதத்தை வழங்கியுள்ளனர். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தற்கு வாழ்த்துக் கூறி தொடங் கும் அக்கடிதத்தில், ""10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அனை த்து ஆயுள் தண்டனைக் கைதிகளையும் சாதி, மத பேதமோ, வழக்கு வித்தியாசமோ பாராமல் உதவிட வேண்டும் என அனைத்து சிறை வாசிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந் தமில்லாமல் சந்தர்ப்பச் சூழ்நிலைகள் காரண மாக கைது செய்யப்பட்டு தண்டனை அனுப வித்து வரும் எங்களுக்கு, விடுதலை மறுக் கப்படுவதோடு, வேறு இரு விஷயங்களிலும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று, மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்த மற்ற ஆயுள் கைதிகளுக்கு பரோல் வழங்கப்படும்போது வழிக்காவல் இல்லாமல் இரவு வீட்டில் தங்க அனுமதியளிக்கப் படுவதுபோல் எங்களுக்கும் பரோலின்போது அவ்வாறே அனுமதி வழங்கி சமநீதி காக்கப் பட வேண்டும்.

மற்றொன்று, ஏழு ஆண்டுகள் கழித்த மற்ற ஆயுள் சிறைவாசிகளுக்கு குற்றக் காவலர் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இரவு லாக்கப் செய் யப்படுவதில்லை. இது ஆங்கி லேயர் காலந்தொட்டு நடந்து வரும் முறை. இது மிகச் சிறந்த முறையில் சிறையை நிர்வகிக்க உரிய நடைமுறையுமாகும். கைதிக ளின் தற்கொலை நிகழ்வுகளைத் தடுக்கவும், நீண்ட கால சிறைவா சத்தால் கைதிகளுக்கு ஏற்படு கின்ற மன இறுக்கத்திலிருந்து விடுபடவும், மனநிலை பாதிக்கப் படாமல் இருக்கவும் இந்த நடை முறை அமையும்.

ஆனால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை கழித்த பின்பும், இந்த நடைமுறை எங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுவதில்லை. இது மாபெரும் அநீதியாகும். ஆகவே உங்கள் ஆட்சியிலா வது இதனை சீர்படுத்தி அனைவ ரும் சமமாக நடத்தப்பட ஆவண செய்ய வேண்டும்.

10 ஆண்டுகள் சிறையில் கழித்த அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளையும் நிச்சயமாக நீங்கள் விடுதலை செய்வீர்கள் என்று நம்புகிறோம்'' என்று குறிப்பிடப் பட்டுள்ளது. நீண்டகால சிறைவாசம் சிறை வாசிகளின் மனநிலையில் பெரும் மாற்றங்களைப் ஏற்படுத்தியிருக் கிறது. சிறைவாசம் அவர்களுக்கு பல படிப்பினைகளையும் தந்தி ருக்கிறது. இவற்றை கடந்த காலங்களில் விடுதலையான முஸ்லிம் சிறைவாசிகளின் வாக்கு மூலங்களும், நேர்காணல்களும் நமக்கு உணர்த்துகின்றன.

இதனை தமிழக அரசும் புரி ந்து கொண்டு 8 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகச் சிறைகளில் வாடும் கைதிகள் அனைவரை கருணை அடிப்படையில் விடு விக்க அரசு முன் வர வேண்டும். சிறை என்பது தண்டனைக் கூடம் மட்டுமல்ல.... அது மனித வாழ்வை பண்படுத்தும் பயிற்சிக் கூடமும்தான் என்பது ஆள்வோர் அறியாததல்ல.

- பைஸ்

Pin It