தஞ்சை பிராமணரல்லாதார் மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தணிகாசலஞ் செட்டியாரவர்கள் தமது அக்கிராசனப் பிரசங்கத்தில் தாம் சென்னை நகரசபையில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனதற்கு காரணம் கூறு கையில், தம்முடைய வண்டியில் 649 ஓட்டர்கள் போனதாகவும், 358 ஓட்டுகள் தான் தமக்குக் கிடைத்ததாகவும், அவர்களில் 108 பேர்கள்தான் பிராமணர் களென்றும், பெரும்பாலோர்கள் தமக்கு ஓட்டுக் கொடுக்கவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு தேர்தலில் நிற்கும் ஓர் பார்ப்பனரல்லாதார் எப்படி பிராமணர்களுடைய ஓட்டுகளை எதிர்பார்க்கலாம்? ஆகையால், பிராமணர்களுடைய ஓட்டுகளை எதிர்பார்த்தது முட்டாள் தனமா? இவருக்கு ஓட் செய்வதாய் சொல்லி இவர் வண்டியிலேயே வந்து மற்றொருவருக்கு ஓட்டு செய்திருந்தால் அது அயோக்கியத்தனமா? என்பதை வாசகர்களே கவனிக்கவேண்டும்.

(குடி அரசு - குறிப்புரை - 30.08.1925)

Pin It