சித்திரை முதல் நாள், தமிழ்ப்புத்தாண்டு ! ‡ இது சரியா?
ஒரு கேவலமான கதை :
கிருஷ்ண ' பகவான் ' 60,000 இளம் பெண்களுடன் கூட சல்லாபித்துக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த நாரதனுக்குக் கிருஷ்ணன் மேல் காமம் ஏற்படுகிறது. இதை அறிந்த கிருஷ்ணன், நாரதனை யமுனை ஆற்றில் மூழ்கி எழச் சொல்கிறான். கிருஷ்ணன் சொற்படி ஆற்றில் மூழ்கி எழும்போது பெண்ணாக உருமாறுகிறான் நாரதன். பெண் உருவத்தில் இருக்கும் நாரதனுடன், கிருஷ்ணன் 60 ஆண்டுகள் கலவியில் கூடி 60 பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றான். அவர்களின் பெயர்கள் வருமாறு:
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கிரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷி, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வஜித், சர்வதாரி, விரோதி, விகர்தி, கா, நந்தன, விஜய, ஜெய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பரபவ, பிலவங்க, கீலக, செளமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்ச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரெளத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, ரத்தா´, குரோதன, அக்ய ‡ ஆகிய 60 பேர்கள்.
ஓர் ஆண், பெண்ணாக மாற்றுருவம் ஏற்க இயலாது. வாதத்திற்காக ஏற்றாலும் இரண்டு ஆண்களின் புணர்ச்சியால் குழந்தை பெற இயலாது என்பது அறிவியல்.
இவ்வாறிருக்க கிருஷ்ணன் ‡ நாரதனின் ஓரினச் சேர்க்கையால் 60 பிள்ளைகளைப் பெற்றதாகவும், அந்த 60 பேர்களின் பெயர்களில் ஒவ்வொரு ஆண்டும் அழைக்கப்படுவதாகவும், 60 ஆண்டுகள் முடிந்தவுடன், மீண்டும் தொடக்கத்தில் இருந்து பிரபவ முதல் அக்ய வரை ஆண்டுகள் பிறப்பதாகவும், இந்த 60 பேரும் பிறந்த மாதம் சித்திரை மாதம் என்பதால், சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது ‡ ஆரியக் கலாச்சாரக் கதை.
தெரிந்தோ, தெரியாமலோ, பகுத்தறிவாளர்களைத் தவிர ஏனைய அனைத்துத் தமிழர்களும் இதையே நம்பினார்கள். சித்திரை மாதம் ஒரு தமிழ்ப்புத்தாண்டு, தை மாதம் ஒரு தமிழ்ப்புத்தாண்டு என இரண்டு தமிழ்புத்தாண்டுகளை இவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள் என்றால் இவர்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சுழற்சி முறையில் 60 ‡60 ஆண்டுகள் என்று சொல்லிக்கொண்டு இருந்தால், 500 ‡ 1000 ‡ 2000 ‡ 3000 ஆண்டுகள், கி.பி ‡ கி.மு என்று கணக்கிட்டுப் பேசும் வரலாறை எப்படி இந்த 60 ஆண்டுகளில் வைத்து ஆய்வு செய்ய முடியும்?
வரலாற்றுக்கும், 60 சித்திரைப் புத்தாண்டுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது மட்டுமன்று, சித்திரைப் புத்தாண்டு என்பது தமிழர்களையும், தமிழர் பண்பாட்டையும் கேவலப்படுத்தும் ஒரு பார்ப்பனிய ஆயுதம் என்பதை தமிழர்கள் உணரத் தவறிவிட்டார்கள்.
அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்கள், இனிவரும் காலங்களில் தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு ‡ சித்திரை அல்ல என்று அரசாணை வெளியிட்டுப் பார்ப்பனிய ஒரினச்சேர்க்கை ஆண்டுக்குத் தடைவிதித்தார்.
இந்தத் தடையால், தைத்திங்கள் முதல் நாள், தமிழர்களின் புத்தாண்டில் மகிழ்ச்சி பொங்கி ' பொங்கலாக ' வழிந்தோடுகிறது!
கவியரசர் கண்ணதாசன் சொல்வது போல, மார்கழிக்குப் பெண்ணாக, மாசிக்குத் தாயாக, சீர்கொழிக்க வந்ததுதான் தைப்பொங்கல் ‡ தமிழர் புத்தாண்டு !
உழைப்புக்கு உருவகம் தருவது தைப்புத்தாண்டு. மடமைக்கு உருவகம் தருவது சித்திரை ஆண்டு. இதை ' உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் ' என்று தைப்பொங்கலை வாழ்த்தியும், ' வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் ' என்று சித்திரை ஆண்டுப் பார்ப்பனியத்தைச் சாடியும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பாடியிருக்கிறார்.
" உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் " என்ற வள்ளுவரின் பாடல், உழவர்களுக்கான புகழ்ச்சி மட்டுமன்று, தமிழ்ப்புத்தாண்டுக்கான வாழ்த்தும் ஆகும்!
தமிழர்களின் பண்பாடு ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்பு என்பதை " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற புறப்பாட்டு உறுதிசெய்கிறது.
தமிழர்களின் பண்பாடு சுரண்டலைத் தகர்க்கிறது என்பதற்குப் " பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் " என்ற குறட்பாவே சான்று.
தமிழர்கள் பகுத்தறிவாளர்கள் என்பதை " எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் ", " எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு " என்ற வள்ளுவரின் வாய்மொழி முரசொலிக்கிறது.
கடவுள், கோயில், பூசை புனஸ்காரங்களை அடியோடு தூக்கி எறிகிறது புத்தாண்டு தைப்பொங்கல்!
ஆடி மாதத்தில் விதைத்த நெல் விளைந்து பயிராகி, மார்கழியில் அறுவடை செய்து, தை முதல் நாளில் உலகை ஒளியூட்டி, பயிர் செழித்து வளர ஒளிதந்தப் பகலவனுக்கு நன்றி கூறும் வகையில் " உதய சூரிய " நேரத்தில் மஞ்சள் கட்டப்பட்டப் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லப்பாகிட்டுப் பொங்கிக், குலவை ஓசையுடன் புத்தாடை புனைந்து, கரும்பு, பலகாரங்களுடன் உணடு மகிழ்ந்து உறவினர்களுடன் உறவு பேணும் இந்நாளில் தமிழர்கள் கடவுளை வணங்கவில்லை ; பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்துப் பூசை புனஸ்காரங்கள் செய்யவில்லை என்பதே தமிழர்களின் சுயமரியாதை ; அதுதான் தைப்பொங்கல்!
இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கவும், தமிழர்களின் பண்பாட்டைச் சீரழிக்கவும் நுழைந்த பார்ப்பனச் சித்திரைப் புத்தாண்டு ‡ சங்கராந்தி என்பவைகள் !
இவைகளின் மூலம் தமிழர்களிடையே ஆரிய கலாச்சாரத்தை நுழைத்து, அதில் ஆரிய ஆதிக்கத்தை மேல் நிறுத்தித் திராவிடச் சரிவைக் கீழ்நிலையாக்க எடுக்கும் முயற்சி என்பதைத் தமிழர்கள் உணராமல் இருந்தாலும், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் ஓயா உழைப்பு இன்று பார்ப்பனிய ஒப்பனையைக் கலைத்து எறிந்துவிட்டது ‡ சித்திரையைக் கைவிட்டுத் தைப்புத்தாண்டுக்கு வரத் தொடங்கி விட்டார்கள் தமிழர்கள்!
மூடநம்பிக்கையின் மொத்தக் குத்தகை ‡ சித்திரைப் புத்தாண்டு !
பகுத்தறிவின் முழுவடிவம் ‡ தைப்புத்தாண்டு!
பார்ப்பனியச் சித்திரையைத் தூக்கி எறிவோம் ! தமிழர்களின் தைப்புத்தாண்டைக் கொண்டாடுவோம் ; தமிழர்களாக !