விடியல் எப்பொழுது?
‘காணி’ நிலத்தை வச்சு
காலமெல்லாம் பாடுபட்டேன் - என்
கஷ்டமெல்லாம் தீரவில்லை
கடனுங் கூட அடையவில்லை…
உர விலையும் ஏறிப்போச்சு,
உழவு கூலி ஏறிப்போச்சு
உழுத கணக்கு பார்க்கையில,
உழக்கு கூட மிஞ்சலையே!....
வட்டிக்கு பணம் வாங்கி,
வயலுக்கு உரமும் போட்டேன்,
‘விதி’யும் சதி பன்ன
‘வெள்ளை நோய்’ பட்டதய்யா!......
‘கரண்டு’ பஞ்சமுன்னு,
கவருமெண்டு சொன்னதால,
ராத்திரி தூங்காம
நீர் பாய்ச்ச நான் போனேன்……
பாதையோரம் ‘பாம்பு’ ஒன்னு படுத்து உறங்குதய்யா!.......
வரப்போரம் தேள் ஒன்னு வழிமறிச்சு நிக்குதய்யா!......
ஐப்பசி மாசத்தில அடைமழையும் வந்ததால……
அடியோடு வெள்ளத்துல அத்தனையும் சாய்ந்ததய்யா……
நெல்லும் வெளஞ்சாச்சு,
அறுவடையும் முடிஞ்சாச்சு……
கவருமெண்டு கமிட்டியின்னு
‘கனவோடு’ கொண்டு போனேன்….
‘ஆயிரம்’ போகுமுன்னு அடிமனசு சொன்னதால,
ஆசையோடு நானிருந்தேன்……..
அடிமாட்டு விலை போல,
‘ஐந்நூறு’ சொன்னாங்க…..!
ஆத்திரமும் வருதய்யா……!
கண்ணில் நீர் பெருகுதய்யா….!
வாங்கின கடனுக்கு ‘வட்டி’ கட்ட வேணுமய்யா!
விதியேன்னு நினைச்சுக்கிட்டு,
வந்த விலை வித்துப்புட்டேன்…….
விளையவச்ச பொருளுக்கு – நாங்க
‘விலை’ சொல்லும் நாள் வருமா……….?
- கவிஞர். நா.’பாரதி’கிருஷ்ணன்.
பைசா கோபுரம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: வரலாற்றுத் துணுக்குகள்
இத்தாலியில் உள்ள பைசா கோபுரத்திற்கு இப்போது வயது 700 ஆகும். அது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். அது கட்டிய நாளிலிருந்தே அதன் புவி ஈர்ப்பு ஸ்தாபனத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்தது. அதாவது மில்லி மீட்டராக சாய்ந்து கொண்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டு மில்லி மீட்டர் மேலும் சாய்ந்தது. இப்போது அது கீழே சாயும் ஆபத்தில் உள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.