சோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார் அடிப்படையில் இயங்கும் மின்சாரப் பொருட்களும் அதிகரித்த வண்ணம் இருக்கினறன. கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் விமான நிலையம், தனது பணிகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மின்சாரம் மூலம் பெறுகிறது என்பது அதிகரித்துவரும் பயன்பாட்டை குறிக்கிறது. இந்தக் கட்டுரையில் நாம் இரண்டு சோலார் பயன்பாடுகளை குறித்துப் பார்க்கப் போகிறோம்.

  • சோலார் மோட்டர் பம்ப்
  • ஸ்மார்ட் தெருவிளக்குகள்

சோலார் பம்பு எனப்படும் சூரியஓளி பம்பு

கங்கைக் கரையில் இருக்கும் சிறு/குறு விவசாயிகள், கங்கை ஆற்றையே நம்பியுள்ளனர். இவர்கள், கங்கை நதியில் இருந்து மோட்டார் பம்ப் மூலம் எடுக்கும் நீரை வைத்து வருடத்திற்கு ஒரு போகம் மட்டும் விவசாயம் செய்கின்றனர். இந்த மோட்டார் பம்புகள் டீசல்/ மண்ணெண்ணைய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில், துயரம் என்னவெனில், வரும் லாபத்தில் 90% டீசல் செலவுகளுக்கே சென்று விடுகிறது. மீதம் இருக்கும் 10% வைத்து குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை.

solar motor pump

வருமானம் இல்லாத நிலை காரணமாக, விவசாயத்தை விட்டுவிட்டு, கிராமங்களை விட்டு வெளியறி ஆபத்து மிகுந்த சுரங்க வேலைக்கு சென்று விடுகின்றனர். விவசாயிகளின் இந்த நிலை அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான கேத்தரின் டைலர் என்ற பெண்ணை உறுத்துகிறது. விளைவு, அமெரிக்காவை விட்டுவிட்டு, இந்தியா வருகிறார். பூனே நகரில், தனது நண்பர் லெஸ்னிவெஸ்கி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலையை மற்றும் ஆய்வகத்தைத் தொடங்குகிறார். பின்னர், விவசாயிகளை சந்தித்து, பல்வேறு தொடர் சோதனைகளைத் தாண்டி கண்டுபிடித்தது தான் சோலார் மோட்டர் பம்ப். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சாதாரண மோட்டார் பம்புகளுக்குத் தேவையான ஆற்றலைவிட, 1/3 பங்கு ஆற்றலில் இயங்கும். அதாவது, சோலார் பம்புகளை இயக்க சாதாரண பம்புகளுக்கு தேவையான ஆற்றலில் 30% மட்டும் போதுமானது. 

ஸ்மார்ட் தெருவிளக்குகள்

 

கங்கைக் கரையில் தானே இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ.ஐ.டி – கோரக்பூர் இருக்கிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் கங்கைக் கரை விவசாயிகளின் துயரங்கள் புரியவில்லை, ஏன் இப்படிப் பட்ட கண்டுபிடிப்புகள் வருவதில்லை என்ற தோழர்களின் நியாயமான கேள்வி புரிகிறது. அதற்கு நம்மிடமும் பதில் இல்லை. ஆனால், ஐ.ஐ.டி – சென்னை மாண்வர்கள், ஸ்மார்ட் தெருவிளக்குகளைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

சென்னை மாநகராட்சியில் 2,77,902 தெருவிளக்குகள் உள்ளன, இதில், 1,71,229 எல்.யி.டி (LED) தெருவிளக்குகள். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தெருவிளக்குகளுக்காக 331 மெகாவாட் மின்சாரமும், 52 கோடிரூபாயும் ஆண்டு தோறும் செலவிடப்படுகிறன. துயரம் என்னவெனில், இந்த தெருவிளக்கு மின்சாரத்தில் மட்டும் 30-40% பயன்படாமல் வீணாகிறது. இரண்டாவது, இரவு முழுதும் தெருவிளக்குகள் எரிய வேண்டியதில்லை. எனவே, இந்த இழப்புகளை சரிசெய்ய சென்னை ஐ.ஐ.டி, இயந்திரவியல் துறையைச் சேர்ந்த சுசாந்த மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்தது தான் I-Light எனப்படும் ஸ்மார்ட் தெருவிளக்குகள். 

சென்சார் மூலம் செயல்படும் இந்த LED தெரு விளக்குகள், வாகனம் செல்லும் போது மட்டும் முழு அளவில் எரியும். வாகனங்கள் செல்லாத நேரத்தில், தனது முழு கொள்ளளவில் 30% மட்டுமே எரியும். சென்னை ஐ.ஐ.டியில் பல்வேறு இடங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டு, அனைத்து இடங்களிலும், சோதனை வெற்றி பெற்றுள்ளது.

 ஆகவே, தோழர்களே, அதிகரித்துவரும் சூரிய ஓளி மின்சாரமும், அதைத் தொடர்ந்த பொருட்களும், கூடங்குளம் போன்ற அனு உலைகளை இந்த மண்ணில் இல்லாமல் செய்யும் என்று நம்புவோம்.

தகவல் உதவி : எம்.ஐ.டி. டெக்னாலஜி ரிவ்யூ & இந்தியன் எக்ஸ்பிரஸ்

- மா.செ.வெற்றிச் செல்வன்

Pin It