arukampulஅருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு கைப்பிடி எடுத்து 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர் ஊற்றி 1 டம்ளராக வற்ற வடித்து, இளஞ்சூட்டில் பனங்கற்கண்டு சேர்த்துத் தினம் இருவேளை பருகிவர, இரத்தம் சுத்தமாகும்; உடல் அரிப்பு,  நமைச்சல்,வியர்வை நாற்றம், வெள்ளை ஆகியன தீரும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Comments

2 comments

2
இரமாபிரபா
அருகு போல் வேரூன்றி ஆல் போல் தழைத்து வாழ்! இது பழமொழி. அருகம்புல்லை வீட்டுக்கு வீடு வளர்க்க வேண்டும். துளசி, அருகம்புல் இவற்றைச் சம அளவு எடுத்து குளிர்நீரில் போட்டு வைத்து அன்றாடம் குடித்து வந்தால் உடல்வெப்பத்தைக் கட்டுப் படுத்த முடியும். நினைவாற்றல் கூடும். சோர்வு வாராது. பகல், இரவு ஆக 24மணி நேரமும் உயிர்க்காற்றைத் {ஆக்சிசன்} தரும் அரிய ஆற்றல் கொண்டது அருகம்புல். ஆகவே தான் அதை அழகுக்காகவும் பயன்பாட்டிற்காகவும் பணக்காரர்கள் வளர்ப்பார்கள். அருகம் புல்லை வளர்க்க செலவு ஏதும் செய்ய வேண்டாம். வாசல் தெளிப்பதைப் போல் ஒரு வாளி நீரை நாள்தோறும் புல்லின் மேல் தெளித்தலே போதுமானது. பச்சைப் பசேல் எனப் பட்டுப்புடவை போத்தியதைப் போல் இருக்கும்.
umamageswari
அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு கைப்பிடி எடுத்து 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர் ஊற்றி 1 டம்ளராக வற்ற வடித்து, இளஞ்சூட்டில் பனங்கற்கண்டு சேர்த்துத் தினம் இருவேளை பருகிவர, இரத்தம் சுத்தமாகும்; உடல் அரிப்பு, நமைச்சல்,வியர்வை நாற்றம், வெள்ளை ஆகியன தீரும். (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.