1995ல் நடைபெற்றது அந்த விபத்து.
ஒரு பெரிய லாரிவிபத்தில் பெங் ஷுலினின் உடல் இரண்டு துண்டுகளாகிப் போனது. ஆனால் அந்த மனிதர் உயிர்பிழைத்து டாக்டர்களையே அதிசயப்படுத்தினார். விந்தை நிகழ்வு இத்துடன் நின்றுபோகவில்லை. அந்த “அரை” மனிதர் இப்போது நடக்கத் தொடங்கிவிட்டார்!
20 டாக்டர்கள் தங்களுடைய சலிப்பறியா உழைப்பைக் கொடுத்து பெங் ஷுலினின் உயிரைக் காப்பாற்றினார்கள்.
வெட்டுப்பட்ட கீழுடலை காப்பாற்ற முடியாமல் போனது. பெங் ஷுலினுக்கு மிஞ்சிய உயரம் வெறும் 78 செண்டிமீட்டர்கள்தான். துண்டிக்கப்பாட்ட உடல்பகுதியை மூடுவதற்காக தலைப்பகுதியில் இருந்து தோல் வெட்டி எடுக்கப்பட்டது.
ஆண்டுக்கணக்கில் படுக்கையில் இருந்துவிட்டார் பெங் ஷுலின். ஆனால் சீன டாக்டர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். பெங் ஷுலினுக்கு சாதாரண வாழ்க்கையை கொடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அது.
கைகளுக்குப் பயிற்சியளித்து வலிமையேற்றிக் கொண்டார் பெங். இப்போது அவரால் முகத்தைக் கழுவிக்கொள்ளவும், பல்துலக்கவும் முடியும்.
பெய்ஜிங்கில் உள்ள சீன புனர்வாழ்வு ஆய்வு மைய மருத்துவர்கள் பெங்கின் முயற்சியால் உற்சாகமடைந்திருக்கிறார்கள். அவரை மீண்டும் நடக்க வைக்க இப்போது முயற்சிகள் தொடங்கியுள்ளன.
முட்டையின் ஓடு போன்ற ஒரு அமைப்பை டாக்டர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த அமைப்பு அவருடைய உடலை தாங்கிப்பிடித்துக் கொள்கிறது. கிண்ணப்பகுதியில் அமைந்த செயற்கைக் கால்களின் உதவியால் மருத்துவமனையின் உட்புறம் தன்னுடைய முதல் சில அடிகளை பெங் எடுத்து வைத்துவிட்டார்.
தகவல்: மு.குருமூர்த்தி
தொடர்புடைய படைப்புகள்
அரைமனிதனாக்கிய விபத்து
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தகவல் - பொது
More articles by மு.குருமூர்த்தி
- ஒளிரும் புரதங்கள் (08 ஆக 2011)
- மின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள் (23 ஜூலை 2011)
- புற்றுநோயின் பத்து பகைவர்கள் (28 ஜன 2011)
- குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்... (24 ஜன 2011)
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010 (05 டிச 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.