தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 1/2 கப்
சீனி - ஒரு கப்
முந்திரிப் பருப்பு - 8
ஏலக்காய் - 5
கிஸ்மிஸ் - 12
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை:

அடிக்கனமான ஒரு பாத்திரத்தில் சீனியைக் கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். கடலை மாவில் மஞ்சள் வண்ணப் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் நேரடியாக பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றி பூந்தியை பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு வேறு ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் போட்டு தாளித்து பூந்தியில் போட்டு கிளற வேண்டும். இவை மிக்ஸியில் ஒரு சுற்று விட்டு அரைத்தெடுக்க வேண்டும். வாணலியில் பூந்தியை போட்டு லேசான சூட்டில் வறுக்க வேண்டும். பின் இதில் சீனி பாகை ஊற்றி உருண்டை பிடிக்க வேண்டும்.

Pin It