தேவையான பொருட்கள் 

ஜவ்வரிசி - 100 கிராம்

சர்க்கரை - 250 கிராம்

சேமியா - 100 கிராம்

முந்திரி - 15

ஏலக்காய் - 5 (பொடி செய்தது)

திராட்சை - 15

நெய் - 50 கிராம் 

செய்முறை 

ஜவ்வரிசியை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சேமியாவை சுடு தண்ணீரில் போட்டு வேகவைத்து பின்பு வடிகட்டி சேமியா சூடாக இருக்கும் போது பாதி அளவு சர்க்கரையை இதில் கலந்து வைக்க வேண்டும். பிறகு ஜவ்வரிசி வேகவைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்த சேமியாவை கொட்டி கிளறி விட வேண்டும். பிறகு சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும். முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்க வேண்டும். பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்க வேண்டும்.

Pin It