தேவையான பொருட்கள்: கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அத்துடன் 4 மேசைக்கரண்டி கார்ன்ஸ்டார்ச், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதனை நன்கு பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். வெங்காயத்தை தோலுரித்து மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினையும் தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கோழிக்கறி - 400 கிராம்
முட்டை - ஒன்று
கார்ன்ஸ்டார்ச் - 6 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - 2
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டிக் கொள்ள வேண்டும். மீதமுள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து விட வேண்டும். மற்றொரு வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கின இஞ்சி பூண்டினைப் போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, ஸ்டாக், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலக்கி வேகவிட வேண்டும். அதில் நறுக்கின குடை மிளகாய், வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.
சிக்கன் மஞ்சூரியன்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.