தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 4
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
ஏலக்காய் - 5
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறுதுண்டு
மல்லிவிதை - ஒரு தேக்கரண்டி
உலர்ந்த மிளகாய் - 2
மிளகு - 8
பிரிஞ்சி இலை - 2
தயிர் - முக்கால் கப்
நெய் - 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய், மல்லி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். தவாவில் நெய் ஊற்றி சூடேறியதும் அதில் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே நெய்யில் பிரிஞ்சி இலை, மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு மசாலாவினை இட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். பிறகு வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு, தயிரினையும் ஊற்றி, தயிர் மணம் கோழி இறைச்சியில் இறங்கும் வரை மிதமான தீயில் வேகவிட வேண்டும். தேவையான உப்பு மற்றும் கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியினைத் தூவி குறைந்த தீயில் மேலும் வேக வைக்க வேண்டும். மசாலாத் தூள் நன்கு கரைந்து, இறைச்சியிலும் படிந்த பிறகு இறக்கி கொத்தமல்லித் தழைத் தூவி பரிமாற வேண்டும்.
பஞ்சாபி சிக்கன்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.