தேவையான பொருட்கள்:

சிக்கன்: 250 கிராம்
மைதா மாவு: 150 கிராம்
மிளகாய் தூள்: 2 கரண்டி
மஞ்சள் தூள்: சிறிதளவு 
உப்பு: தேவையான அளவு
எண்ணெய்: 500 மி.லி.

செய்முறை:

எலும்பில்லாத கோழிக்கறியாக எடுத்துக் கொண்டு அவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கின துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து  மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். ஒரு தட்டில் மைதா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பவுடராக கலந்து வைக்க வேண்டும். பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மைதா பவுடரில் பிசறி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். இளம் சூட்டில் வைத்து பொரித்து எடுப்பது நல்லது.



Pin It