தேவையான பொருட்கள்:
• நண்டு இறைச்சி-கால்க் கிலோ
• முட்டை -ஒன்று
• வெங்காயம்-ஒன்று
• நறுக்கிய செல்லரி-கால்க்கோப்பை
• ரொட்டித்துண்டு-ஆறு
• மயோனைஸ்-ஒரு மேசைக்கரண்டி
• பார்ஸ்லி தழை-ஒரு மேசைக்கரண்டி
• எலுமிச்சைசாறு-ஒரு தேக்கரண்டி
• டீஜான் மஸ்டர்ட்-அரைதேக்கரண்டி
• உப்புத்தூள்-அரைதேக்கரண்டி
• மிளகுத்தூள்-அரைதேக்கரண்டி
• ஹாட் பெப்பர் சாஸ்- அரைதேக்கரண்டி
செய்முறை:
• ஒரு கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மயோனைஸைப் போட்டு நன்கு கலக்கவும்.
• பிறகு டீஜான் மஸ்டர்ட், எலுமிச்சைச் சாறு, மற்றும் உப்பு,மிளகு பெப்பர் சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.தொடர்ந்து வெங்காயம்,செல்லரி,பார்ஸ்லி ஆகியவற்றைப் போட்டு சேர்த்து கலக்கி வைக்கவும்.
• பிறகு ரொட்டித்துண்டுகளில் முத்லில் இரண்டு துண்டுகளைப் போட்டு மிக்ஸியில் தூளாக்கி தயாரித்துள்ள கலவையில் போட்டு அதனுடன் நண்டை போட்டு இலேசாக கலக்கி சிறிய உருண்டைகளாகச் செய்து, இலேசாக வட்டமாக தட்டி வைக்கவ்ம்.
• பிறகு மீதியுள்ள ரொட்டிகளை தூளாக்கி தட்டியுள்ள கேக்குகளை அதில் போட்டு பிரட்டி வைக்கவும்.
• இதேப்போல் எல்லா உருண்டைகளையும் செய்துக் கொண்டு நான்ஸ்டிக் சட்டியை அடுப்பில் காயவைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெயையும், இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயையும் கலந்து சிறிது ஊற்றி, நண்டு கேக்குகளை சட்டியின் அளவிற்க்கு ஏற்றவாறு போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.
• இந்த சுவையான கிராப் கேக்குகளை தக்காளி கெர்சப்புடன் அல்லது பிடித்தமான சாஸுடன் சூடாக பரிமாறவும்.
தொடர்புடைய படைப்புகள்
அமெரிக்கன் கிராப் கேக்ஸ்(crab cakes)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மிலிட்டரி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.