தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1,
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
தனியா - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
பூண்டு - 3 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி, வில்லைகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய வாழைக்காய், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அரைத்த மசாலாவை கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக விடவும். வாழைக்காய் வெந்து தண்ணீர் வற்றியவுடன், 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1 நிமிடம் கிளறி இறக்கவும்.
வாழைக்காய் மசாலா
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.