தேவையான பொருட்கள்:

எலுமிச்சம் பழம் – 2 அல்லது 3
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வற்றல் மிளகாய் - 4
உளுந்து பருப்பு - முக்கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
கறிவேப்பிலை மற்றும் உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

சாதத்தை பொலபொலவென்று வடித்துக் கொள்ள வேண்டும். அதை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். கடுகு, உளுந்துப் பருப்பு, வற்றல் மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து சாதத்தில் கொட்ட வேண்டும். அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சம் பழங்களை சாறு பிழிந்து கொட்டைகளை நீக்கி, சாதத்தில் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இப்போது எலுமிச்சை சாதம் தயார்

Pin It