தேவையானவை:

பரங்கிக்காய்..................1 துண்டு
பட்டாணி.....................100 கிராம்
தேங்காய்......................4 ஸ்பூன்
சீரகம்.............................1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய்...........1
சின்ன வெங்காயம்......6
கடுகு,உ.பருப்பு..............1/4 ஸ்பூன்
எண்ணெய்.....................1 ஸ்பூன்
கறிவேப்பிலை..............கொஞ்சம்
உப்பு...............................தேவையான அளவு

செய்முறை:

பரங்கிக்காயை சின்ன துண்டுகளாக வெட்டவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும். சீரகம்,தேங்காய், ப.மிளகாயை நைசாக அரைக்கவும்.

green_pease_gravy_370அடுப்பில் கடாயை வைத்து,எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு, வதங்கியதும், பரங்கிக்காய், பட்டாணி + உப்பு போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் 1 டம்ளர் நீர் ஊற்றவும். நீர் வற்றி, கெட்டியாக வந்ததும், இறக்கி விடவும்.

இந்த கூட்டு லேசான பச்சை நிறத்தில், சுவையுடன் இருக்கும்.

Pin It