தேவையானவை:

அ. உருண்டை செய்ய:

துவரம் பருப்பு.................1 /2 ஆழாக்கு
கடலைப் பாருப்பு...........1 /2ஆழாக்கு
பாசிப்பருப்பு.....................1 கைப்பிடி
பச்சை மிளகாய்..............3
இஞ்சி................................சிறு துண்டு
பூண்டு...............................10 பல்
சோம்பு................................1 /4 தேக்கரண்டிடி
சின்ன வெங்காயம்..........100 கிராம்
உப்பு ....................................தேவையான அளவு
கறிவேப்பிலை...................1 தேக்கரண்டி

ஆ.குழம்பு செய்ய:

புளி..........................................எலுமிச்சை அளவு
வெங்காயம்...........................5
மிளகாய் பொடி.....................1 1 /2 தேக்கரண்டி
மல்லி பொடி...................... .2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி.........................கொஞ்சம்
தேங்காய்...................................1 /4 மூடி
சீரகம் ..........................................1 /2 தேக்கரண்டி
கடுகு,உ.பருப்பு..........................1 தேக்கரண்டி
எண்ணெய் ........................ .3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி தழை..1 தேக்கரண்டி
உப்பு ..............................................தேவையான அளவு

செய்முறை:

doll_gravy_370அ. முதலில் உருண்டை செய்ய:

எல்லா பருப்பையும் 1 1 /2 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும். ஊற வைத்த பருப்பை, நீரில்லாமல் நன்கு வடிகட்டி, மிக்சியில் போட்டு சோம்பு போட்டு பரபரவென்று கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவுடன், நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை + உப்பு போட்டு பிசையவும். பின்னர் இதனை, சின்ன எலுமிச்சை அளவு உருண்டைகளாக, தட்டில் உருட்டி வைக்கவும்.

ஆ. குழம்பு செய்ய:
 
புளியை முன்னதாக ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாயகன்ற பாத்திரம்/கடாயை வைத்து,எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு,உ.பருப்பு போட்டு பொரிந்ததும், வெங்காயம் கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுக்கவும். இதிலேயே, மிளகாய்,மல்லி +மஞ்சள் பொடி போட்டு, ஒரு பிரட்டு பிரட்டியதும், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, உப்பு போடவும்.கொஞ்சம் தண்ணீர் அதிகம் ஊற்றவும்.அப்போதுதான், உருண்டை வேக வசதியாய் இருக்கும்.

குழம்பு நன்றாக கொதிக்கும்போது, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாய், உடையாமல், ஒன்றுடன் ஒன்று இடிக்காமல் போடவும்.உருண்டை தாராளமாய் வேக இடம் வேண்டும்.உருண்டை போட்டவுடன், குழம்பை கரண்டி போட்டு கிளறக் கூடாது, அப்படி செய்தால் உருண்டை உடைந்து விடும். பாத்திரத்தை அப்படியே பிடித்து சிலுப்பி/சிலாகித்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் உடைந்து விடும் என நீங்கள் நினைத்தால், உருண்டையை இட்லி சட்டியில் வேகவைத்தும் போடலாம். ஆனால் வேகவைத்த உருண்டை கெட்டியாக இருக்கும். மேலும் இதில் புளிப்பு, காரம் இறங்காது.

குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும், குழம்பை அடுப்பிலிருந்து இறக்கவும். 

புரத சத்து மிகுந்தது இந்த குழம்பு..!

Pin It