தேவையானவை:

பனீர்.........................................100 கிராம்
பட்டாணி..................................100 கிராம்
பட்டன் காளான் .......... .........100 கிராம்
தக்காளி.......................................50 கிராம்/1
பெல்லாரி/பெரியவெங்காயம்.. 100 கிராம்
இஞ்சி.................................1/4 இன்ச் நீளம்
பூண்டு..................................5
தேங்காய் துருவல்.............2 தேக்கரண்டி
சீரகம்................................. .1/4 தேக்கரண்டி
சோம்பு................................1/4 தேக்கரண்டி
பட்டை.................................சிறு துண்டு
கிராம்பு...................................4
மிளகாய்.................................1/2 தேக்கரண்டி
மல்லி தூள்.........................1 தேக்கரண்டி
எண்ணெய் ...........................4 தேக்கரண்டி
மல்லி தழை...................... கொஞ்சம்
உப்பு ...................................தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறு சதுர துண்டுகளாக வெட்ட வேண்டும். பட்டாணியை தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். காளானைத் துடைத்து கழுவி நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பனீரைப் போட்டு வறுத்து எடுக்கவும். பட்டாணியை குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவியை உடனே வெளியேற்றவும். அடுப்பில் கடாயை வைத்து, சூடானதும், எண்ணெய் விடாமல் சீரகம், சோம்பு வறுத்து பின் தேங்காயையும் வறுக்கவும். வறுத்ததை நைசாக அரைக்கவும்.

mushroom_masala_370அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் + கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். பின் அதில் வெங்காயம் + காளான் + தக்காளி போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் மிளகாய் + மல்லி தூள் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த விழுதைப் போட்டு, இரண்டு டம்ளர் நீர் ஊற்றி + உப்பு+ பனீர் போடவும்.

தீயைக் குறைத்து, மசாலா நன்கு கொதித்ததும், இறக்கி, மல்லி தழை தூவவும். இந்த பனீர் பட்டாணி காளான் மசாலா, சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கு நல்ல துணை. இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். பனீர் இல்லாமலும், தேங்காய் போடாமலும் கூட இதனை தயாரிக்கலாம். நன்றாகவே இருக்கும்.

Pin It