தேவையானவை:

மடிப்பு குழல் பாஸ்த்தா / முறுக்கு பாஸ்த்தா /நூடுல்ஸ் ...1 /4 கிலோ
பெல்லாரி..........................1
காரட்...................................3
பீன்ஸ்..................................10
உருளை...............................2
பட்டாணி.............................50 கிராம்
இஞ்சி....................................1 இன்ச் நீளம்
பூண்டு...................................10
கறிவேப்பிலை....................கொஞ்சம்
எண்ணெய்.........................50 மில்லி
தேவைப்பட்டால் நெய்.வெண்ணெய்...2 தேக்கரண்டி
உப்பு .....................................கொஞ்சம்

செய்முறை:

பெல்லாரியை நைசாக நறுக்கவும். காரட், பீன்ஸ், மற்றும் உருளைக் கிழங்கை கழுவவும். பின் அனைத்தையும், சுமார் 1 /2 இன்ச் நீளம் நறுக்கவும். பட்டாணியை தோல் உரிக்கவும்/வேகவைத்து எடுக்கவும். இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.

veg_pasta_370குக்கரில் பாஸ்த்தா/நூடுல்ஸ் போட்டு அது முழுகும் வரை நீர் ஊற்றவும். பின்னர் அதனை மூடி ஒரு சத்தம் வருவரை அடுப்பில் வைக்கவும். பின் உடனேயே அதிலுள்ள ஆவியை வெளியேற்றவும். வேறொரு குக்கரில் கொஞ்ச எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் + கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். பின் அதில் தட்டிய இஞ்சி பூண்டைப் போடவும். அதிலேயே அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும். பின் அதில் 4 தேக்கரண்டி நீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். இறக்கிய உடன், அதிலுள்ள ஆவியாய் வெளியேற்றி விடவும்.

பிறகு இதனை வெந்த பாஸ்த்தா மேல் கொட்டவும். அதிலேயே பாஸ்த்தா /நூடுல்ஸ் க்குள் ஒரு சுவை தரும் பொடி இருக்கும். அதனையும் பாஸ்த்தா மேல் போட்டு, கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு,அடுப்பில் வைத்து, கொஞ்சம் நெய்/வெண்ணெய் விட்டு கிளறி விடவும். 2 நிமிடத்தில் அடுப்பிலிருந்து பாத்திரம்/குக்கரை இறக்கவும்.

இதன் துணைக்கு தக்காளி சாஸ் சூப்பராய் இருக்கும். சும்மாவும் சாப்பிடலாம். மடிப்புக் குழல் பாஸ்த்தா அப்படியே குடல் கறி போல இருக்கும்.

Pin It