nethili_bajji_370தேவையானவை:

நெத்திலி மீன்...............1/4 கிலோ
பஜ்ஜி மாவு..................50 கிராம.
சோளமாவு.....................4 தேக்கரண்டி
மிளகாய் பொடி.......... 1 தேக்கரண்டி
சீரகப் பொடி .................1/2 தேக்கரண்டி
சோம்பு.பொடி..................1/4 தேக்கரண்டி
உப்பு...............................தேவையான அளவு
எலுமிச்சை....................1/2 மூடி
எண்ணெய் ...................100 மில்லி

செய்முறை:

மீனை நன்கு கழுவவும். தலையை எடுத்து விடவும். பஜ்ஜி மாவில் சோளமாவு, மிளகாய் பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி, உப்பு + எலுமிச்சை சாறு போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி நன்கு பிசையவும். நெத்திலியை இதனுடன் கலக்கவும்.  இதனை கொஞ்ச நேரம் குளிர் பதனப் பெட்டியில், உறைபனி அறையில் வைக்கவும்.

பின்னர், அடுப்பில், கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் மசாலா தடவிய மீனை எடுத்துப் போடவும். சிறிது நேரம் போன பின், திருப்பி விடவும். சிவந்ததும் எடுத்து விடவும்.

நெத்திலி பஜ்ஜி வறுவல் சுடச் சுட சாப்பிட்டால் சூப்பராய் இருக்கும்.

Pin It