1. அடையாள அணிவகுப்பு காலதாமதமாக நடத்தப்பட்டால் அது செல்லாது (அரிநாத் எதிர் உ.பி. அரசு AIR 1988 SC 345)

2. காவல் நிலையத்தில் எதிரியை சாட்சியிடம் அடையாளம் காட்டினால் செல்லாது (அகமது பின் சலீம் எதிர் ஆந்திர அரசு AIR 1999 SC 1617)

3. புகைப்படம் நாளிதழ்களில் வெளியான பின் நடைபெறும் அடையாள அணிவகுப்பு செல்லாது. (ரவிந்திரா எதிர் மகராஸ்ட்ரா அரசு AIR 1998 SC 3031)

4. எல்லா வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்ய வேண்டியது இல்லை. (ஜோகீந்தர்குமார் எதிர் உ.பி. அரசு 1994 Crl LJ 1981)

5. கைது செய்யப்பட்டவருக்கு நடுவர் உத்தரவு இல்லாமல் கைவிலங்கிடக் கூடாது (ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு எதிர் அசாம் அரசு 1995 (3) SCC 743)

6. பிணையில் வந்தவரின் பிடி ஆணை திரும்பப்பெற அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தேவையில்லை. (வலியுலார் செனிட் எதிர் நல்லூர் சா.நி. 2000(3) MWN Cr 28)

7. பிணையில் வந்தவர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டால் முதல் வழக்கில் தொடர்ந்து சிறையில் வைக்கக்கூடாது (அப்பு (எ) சாந்தகுமார் எதிர் தமிழக அரசு [2004 (1) TNLR 599 (Mad)]

8. குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் 60 நாள் அல்லது 90 நாள் முடிந்தவுடன் பிணை வழங்க வேண்டும். (முகமது காமில் எதிர் ஆய்வாளர் சிறப்புப் புலனாய்வு (2000 (1) MWN Cr 70)

9. இலவச சட்ட உதவி பெறுவது அவரின் அடிப்படை உரிமை. (காட்ரி எதிர் பிகார் அரசு AIR 1981 Sc 928)

10. சிறைக் கைதிகளுக்கு அடிப்படை உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு. சுனில்பட்ரா எதிர் டெல்லி (AIR 1980 Sc 1579), (ராமமூர்த்தி எதிர் கர்நாடகா அரசு AIR 1997 Sc 1739), (அரசு எதிர் சாருலா சோகி AIR 1999 SC 1379)

11. கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிருத்தப்படாவிட்டால் அது சட்டவிரோதம். (பிரவீன்குமார் சந்திரகாந்த் எதிர் குஜராத் அரசு 2002 (1) Crime 277)

12. கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் மட்டுமே காவல்துறை காவலில் விசாரிக்க முடியும். (சி.பி.ஐ. எதிர் அனுபம் குல்கர்னி AIR 1992 SC 1768)

13. பிணை பெற்றவர் பிணையதாரரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தும் போது அதனை ஏற்கும் நீதிமன்றம் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். பிணையதாரர் பற்றி விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நபரை தொடர்ந்து சிறையில் வைக்கக் கூடாது. (ராஜஸ்தான் அரசு எதிர் லால்சிங் 1987 Crl. LJ 269)

14. சிறைக் கைதியை அவரின் உறவினரோ, நண்பரோ பார்க்க அனுமதி மறுக்கக் கூடாது. (நெடுமாறன் எதிர் தமிழ்நாடு அரசு 2001 (2) LW Crl 805) 

Pin It