1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார்.

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.

அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.

அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.

இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.

கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.

போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.

மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .

தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.

ஆனால், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

- அரவிந்த்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

14 comments

14
mohan
priyanikkum, quatorikku attimai pattu erukkom
mani
for full article please read PUTHIYA KALACHAARAM - 2006 NOVEMBER
Dhayal
More info regarding his article http://groups.google.com/group/sankatamil/browse_thread/thread/a9c5e106e2806f1c
Thaniyan
“கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன். “பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணியம் தமது நூலின் பக். 165 ல். இதனை “கோலார்பட்டியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியுள்ள பகுதியால் அறியலாம். இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனாரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார். ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிடம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன். ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்! வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல? வீரமரணமா? “பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். வணங்காமுடி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். வந்தான் பானர்மேன்: பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காகவும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காகவும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார்கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையும் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள. இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான். பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான். ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான். இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிடம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்காரர் கும்மி: வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம். Under Instruction of Mr.Lousington, Collector of Tinnevelly, The Kattabomman Captured by Thondaman in Sathirapathi Forest on 23/09/1799. (History of Tennevelly – By B.Coldwell P.112) இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார். “புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையானின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” “நயமாகப் பேசி விருந்துபச்சாரங்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்று ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையினர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!) எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம். தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கடமை.
captain
கட்டபொம்மனின் ஒரு தவறான சரித்திரம் நாட்டிலே பரவி வீரவரலாறு ஆயிற்று” என்று எழுதினார் அறிஞர் தமிழ்வாணன். “பானர்மேன்னிடம் அகப்பட்டுத் தொல்லைகளுக்கு ஆளாகாமல், லூசிங்க்டனிடம் சராணாகதி அடைய எண்ணினார் கட்டபொம்மு” என்கிறார் தி.நா.சுப்ரமணியம் தமது நூலின் பக். 165 ல். இதனை “கோலார்பட்டியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் எப்படியும் திருச்சி அடைந்துவிட எண்ணினான். அங்குள்ள கும்பினி அதிகாரிகளிடம் சராணாகதி அடைந்து உயிர் பிச்சைக் கேட்பதே கட்டபொம்மனது நோக்கம்” என்று எடுத்துக்காடியுள்ள பகுதியால் அறியலாம். இந்தக் கருத்தை கட்டபொம்மன் புகழ்பாடிய ஜெகவீரபாண்டியனாரும் மறுக்காமல் உறுதி செய்து தமது நூலின் பக்.297 ல் வெளியிட்டுள்ளார். ஆனால் வரலாற்று அறிஞர் ம.போ.சி. “கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. நேரிடையாக மோதி தோற்று, பின் படைபெருக்க வேண்டி, சின்ன மறவர் நாட்டுச் சிங்கங்கள் மருதுபாண்டியரிடம் தஞ்சமானான் ஊமைத்துரை, அவர்களிடம் உதவி வேண்டினான், அவன் வீரன். ஊமைத்துரை போன்று உதவி வேண்டியா கட்டபொம்மன் புதுக்கோட்டை முட்புதர் அடர்ந்த காடுகளின் தஞ்சமானான்? இது தான் விருப்பு வெறுப்பற்ற வரலாற்று ஆராய்ச்சியின் கண்ணோட்டமா? ம.போ.சி சிந்திக்கவில்லை போலும்! வரலாற்று உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு “பிடித்துக் கொடுத்தான் என்பதற்கும், காட்டிக் கொடுத்தான் என்பதற்கும்” வேறுபாடுகள் அறியாது புரியாது புரிந்து கொள்ளச் சக்தியும் இல்லாது தவறாக வரலாற்றினை தீட்டியுள்ளார் என்று நாம் அவரை குறை முடியாது! அவருடைய இயல்பு அது என்றால் யார் என்ன சொல்ல? வீரமரணமா? “பாஞ்சாலங்குறிச்சியை விட்டு வெளியேறாது அக்கோட்டையைக் காப்பாற்றும் புனிதப் போரிலே, வீரமரணம் எய்தாமல் போனேனே” என்று சொல்லி தூக்கு கையிற்றை தானே எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டானாம். இதை ம.போ.சியே தனது நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். வணங்காமுடி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தன்மானி என்றும், பகைவர்களாலும் போற்றத்தக்க மாவீரன் என்றும், தலைகுனியாத வணங்காமுடி என்றும் வீரப்பட்டயம் சூட்டிட ஏதேனும் உள்நோக்கம் இருந்து தான் ஆக வேண்டும் ம.போ.சிக்கு. தான் எடுத்தக் கொண்ட வலுவில்லாத கருத்தை நிலைநாட்ட ம.போ.சி எடுத்துக் கொண்ட முயற்சியும், செயலும் அறிஞர் பெருமக்கள் அறிவர். வந்தான் பானர்மேன்: பாஞ்சை சென்ற ஒரு குறுகிய எல்லைக்கு உள்ளாக இருந்து கொண்டு, சூழ்நிலையால் தன்னை தானே அரசன் என்றும் வீரபாண்டியன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டான் கட்டபொம்ம நாயக்கன். தமது தம்பியின் திருமணத்திற்காகவும், அமைச்சர் சுப்பிரமணியப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காகவும் கும்பினியாரின் நெற்களஞ்சியத்தைக் கொள்ளையடித்தார்கள். காவலாரக இருந்த பாண்டித்தேவனையும் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார்கள. இதனால் கும்பினித்தளபதி பனார்மேன் கட்டபொம்மன் மீது குற்றம் சாட்டி, விசாரணை செய்ய வேண்டி டேவிசன் மூலம் ஆணை அனுப்பினான். பானர்மேன் மிகக் கொடூரமானவன், எதற்கும் அஞ்சாதவன். ஆனால் நீதிமான்! அவன் கையில் அகப்பட்டால் மீளமுடியாது என்பதை அறிந்து திருச்சிக்கு சென்று மேல் அதிகாரிகளை சந்திக்க எண்ணியிருந்தான் கட்டபொம்மன். இந்நிலையில் பானர்மேன் படை நடத்தி, தீவிரத் தாக்குதலுக்குப் பிறகு, பஞ்சை கோட்டையை கைப்பற்றி , கட்டபொம்மனை தேடினான். ஆனால், கட்டபொம்மன் இரவோடு இரவாக தப்பி சென்றுவிட்டான். கோலார்பட்டியில் தஞ்சமானான். இதை ஒற்றர் மூலமாக அறிந்தான் தளபதி பானர்மென். படையை நடத்தினான். கோலார்பட்டியை நோக்கிப் படை வருகிறது என்பதை அறிந்த கட்டபொம்மன் வடக்கு நோக்கி ஓட்டமெடுத்தான். திருச்சிக்குத் தான் போவான் என்று வழி நெடுகிலும் காவால் போட்டான் பானர்மேன். ஆனால் சிவகங்கை ஆளியூர் பகுதியை அடைந்து, திருச்சி செல்லாமல் இடையில் புதுக்கோட்டை மன்னர் ஆட்சிக்குட்பட்ட திருக்களம்பூர் அருகேயுள்ள முட்புதர்கள் அடர்ந்த காட்டிற்கும் மேற்கே உள்ள கலியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பதுங்கிக் கொண்டான். இதையறிந்த பானர்மேன் தமது மேலதிகாரியான கலெக்டர் லூசிங்க்டன்’னிடம் தெரிவித்தான். லூசிங்க்டன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை தொண்டைமான் அவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான்.”வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி வந்து உன்னுடைய எல்லைப் பகுதியில் தங்கி இருக்கிறான். அவனைத் தேடி கண்டுபிடித்து கும்பினிப் படையினரிடம் ஒப்படைக்கவேண்டும்” என்பது ஓலையின் வாசகம்.அம்பலக்காரர் கும்மி: வெள்ளையரின் நட்புக்கு உரித்தாக இருந்து வந்த தொண்டைமான் தமது படைத்தளபதி முத்துவீர பைரவ அம்பலக்காரார் மூலமாக படை அனுப்பித் தேடச் செய்தார். அம்பலக்கரரின் தீவிர முயற்சியால் திருக்களம்பூர்க்காடு, கலியபுரம் கிராமத்தில் பதுக்கி இருந்த கட்டபொம்மனை பாய்ந்து சென்று கைது செய்தனர். அவனுடன் இருந்த ஆறு பேர்களையும் கைது செய்தனர். 23.09.1799 ல் வெள்ளைத் தளபதிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யும் போது அவர்களிடம் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்கிறது. இதனை ‘அம்பலக்காரர் கும்மி’ என்று நாட்டுப் பாடல் மூலம் அறியலாம். ஊன்டெர் ஈன்ச்ட்ருச்டிஒன் ஒஃப் ம்ர்.ளொஉசிங்டொன், சொல்லெச்டொர் ஒஃப் டின்னெவெல்ல்ய், தெ கட்டபொம்மன் சப்டுரெட் ப்ய் தொன்டமன் இன் ஸதிரபதி ஃபொரெச்ட் ஒன் 23/09/1799. (ஹிச்டொர்ய் ஒஃப் டென்னெவெல்ல்ய் – ப்ய் ப்.சொல்ட்நெல்ல் ப்.112) இந்த வரலாறு உண்மையை ம.போ.சி அவர்கள் மறைத்துள்ளார். “புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனின் அருமை நண்பன், ஆம்; ஆங்கிலேயனை கட்டபொம்மன் பகைப்பதற்கு முன் அந்த நிலை நீடிப்பதாக நம்பி மாவீரன் கட்டபொம்மன் புதுக்கோட்டையானின் நட்பை நாடி அவனிடம் சென்றான். கசாப்புக்கடைக்காரனிடம் அடைக்கலம் புகும் ஆடு போன்று, தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்தான் கட்டபொம்மன்.” “நயமாகப் பேசி விருந்துபச்சாரங்கள் நடத்தி, இரண்டு நாட்கள் தங்க வைத்தான். பின் மாடியில் தூங்கும் போது கைது செய்யப்பட்டான் கட்டபொம்மன். காட்டிக் கொடுத்தான் தொண்டைமான்”என்று ம.போ.சி. அவர்கள் தமது நூலின் பகுதி ௧, பக்.52 ல் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று வல்லுநர் என்று பாராட்டுப் பெற்ற ம.போ.சி அவர்கள் எவ்வளவு வன்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். தொண்டைமானும், கட்டபொம்மனும் அருமை நண்பர்கள் என்று வரலாற்றுக்கு செய்தியையும் கூறுகிறார். இது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. “மக்களே நான் வேண்டாமென நினைக்கத் தொடக்கி விட்ட பின்னர் எனக்கெதற்கு ஆட்சியையும் அந்தஸ்தும்” எனக் கூறியவர் புதுக்கோட்டை இளமன்னர். சமஸ்தானக் கணக்குப்படி இருப்புத் தொகை கருவூலத்தில் இருக்கிறது, அந்தத் தொகையை ஒப்படைக்கிறேன் என்று கூறி 1948 ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடம் சென்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் மன்னர் இராஜகோபால தொண்டமான் அவர்களேயாவர். புதுக்கோட்டை சென்னையுடன் இணைக்கப்பட்டது என்பதை வரலாறு பக்.159 ல் அறிஞர் சஞ்சீவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தியக் கண்டத்திலேயே எவருக்கும் ஏற்படாத துணிவு புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அவர்களுக்குத் தான் ஏற்பட்டது. தமிழத்தின் மானம் காத்த வீரப்பரம்பரையினர் புதுக்கோட்டை மன்னர்கள். அப்படிப்பட்ட அவர்களா காட்டிக் கொடுத்த பரம்பரை…? இது தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட சரித்திர ஆராய்ச்சி என்றால், அப்படிப்பட்ட ஆராய்ச்சி திறன் நாட்டில் வேருடன் அழிக்கபடத்தக்க ஒன்றாகும் என்பது சரி. மக்கள் கருத்தும் அதுவாகத் தான் இருக்கும். (இனிமேல் எவனாவது தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொன்னால் அவன் நாவை கட்டி விடலாம். சரி தானே!) எனவே, தொண்டைமான் அவர்கள் காட்டிக் கொடுத்தாரா? கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தாரா? உண்மை நிகழ்ச்சிகளை எடுத்துக் கட்டியுள்ளோம். தீர்ப்பு வழங்க வேண்டியது மக்கள் கட
mathan
கட்டபொம்மன் இயர்பெயர் வீரன் மகேந்திரராஜ்
Senthil
யார் காட்டி கொடுத்தார்கள் என்பது முக்கிய ஆல்ல. ஆனால் காட்டி கொடுக்க ஒர் தமிழன் இருந்தான் என்பது உண்மை தான்
k.pommaiya
about the veerapandia kattapomman history i need for my mail pls send me.
Murugan
THE great freedom fighter veerapandiya kattabomman
Perumal Naicker
ஆங்கிலேய ஏகாபத்தியத்தை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் என்னாளுமே ஒரு வரலாறு தான்
ram
எதனையோ காரனங்கல் சொன்னாலும் வீரன் கட்டபொம்மன்
Mani.j
Veera Thirumagan veerapandiya kattabomman varalaru oru veera varalaru ethai yarum maruga mudiyathu
Vinoth
கட்டபொம்மன் ஒரு சிங்கம்
Raj
வீரத்தின் மறுப்பெயரே கட்டபொம்மன் தான்...... The Greatest Veeran Of Mass

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.