கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற பெரிய சரணாலயங்களில் மட்டுமின்றி கொல்லுக்குடிப்பட்டி, கரிக்கிளி உள்ளிட்ட கிராம மக்களும் பறவைகளை ஆழ்ந்து நேசிக்கின்றனர். இயற்கையும், பறவைகளும் நமக்கு உதவுவதை நன்கு உணர்ந்துள்ள இம்மக்கள், பறவைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதைப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. சகஜீவனை புரிந்து கொண்ட உணர்வு மேலோங்குகிறது.

இயற்கையை சுரண்டாமல் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது போன்ற பாரம்பரிய பழக்கங்கள் நம்மிடம் ஓங்கி இருந்ததையே மேற்கண்ட கிராமங்கள் உணர்த்துகின்றன. நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய பண்டைத் தமிழர்கள் அங்குள்ள பல்லுயிரியத்தை காப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.

நவீன வசதிகள் வளர்ந்துவிட்டபோதும், இந்த மக்களின் மனது பெருமளவு மாறவில்லை என்பதையே இந்த நேசம் உணர்த்துகிறது.

மேற்கண்ட சரணாலயங்கள் அமைந்துள்ள கிராம மக்களின் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளால்தான் சரணாலயங்களும், அங்கு வரும் பறவைகளும் பாதுகாப்பாக உள்ளன. உள்ளூர் மக்கள் மனம் மாறிவிட்டால், இயற்கை பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

இந்தப் பாரம்பரியத்தை வேடந்தாங்கல், மேற்கு வங்கத்தில் உள்ள ஜாக்யநகரில் பார்க்க முடிகிறது. உள்ளூர் மக்களே பறவைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவது மட்டுமின்றி, பறவைகள் அவர்களோடு இணக்கமாக வாழ்வதை கூந்தங்குளம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் பார்க்க முடிகிறது.

மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது.” --- சாலிம் அலி.

தமிழக பறவை சரணாலயங்கள் - முக்கிய விபரங்கள்

 

சரணாலயம்

மாவட்டம்

பரப்பு ஹெக்டேர் 

ஆண்டு

1. வேடந்தாங்கல்

காஞ்சிபுரம்

30

1836

2. வேட்டங்குடி

சிவகங்கை

38

1977

3. கரிக்கிளி

காஞ்சிபுரம்

61

1989

4. பழவேற்காடு

திருவள்ளூர்

46,102

1980

5. கஞ்சிரங்குளம்

ராமநாதபுரம்

104

1989

6. சித்ரங்குடி

ராமநாதபுரம்

48

1989

7. உதயமார்த்தாண்டம்

திருவாரூர்

45

1991

8. வடுவூர்

தஞ்சாவூர்

128

1991

9. கரைவெட்டி

பெரம்பலூர்

280

1997

10. வெள்ளோடு

ஈரோடு

77

1997

11. மேல்செல்வனூர்

 கீழ்செல்வனூர்

ராமநாதபுரம்

593

1998

12. கூந்தங்குளம்

திருநெல்வேலி

129

1994

 

Pin It