அலறி அழும் பெண் குரல்
கேட்டு திடுக்கிட்டெழுந்தபோது
"பேசாம படு அறியாப்புள்ளே நீ"
என்றாள் அம்மா

ஏற்கனவே
நிலவு நான் போகுமிடமெல்லாம்
ஏன் வருகிறது என்று
புரியாமலிருந்தது

பாராக்காரர் லத்தி ஒலி
இந்த இரவில் நான்
வெகு நேரம் தூங்கவில்லை
எனப் பதட்டப்படுத்துகிறது
எங்கும் நிசப்தம்

மக்களின் சந்தடியும்
தொலைக்காட்சியும் கலவையாய்
பாதிக்கும் எந்த அரவத்தையும்
விழுங்கி விடும்

கடலுக்கு அப்பால்
அன்றாட
தோட்டா குண்டு
வெடிச்சத்தங்களையும்