தமிழ்நாட்டில் முதல்வர்கள், முதல்வராக வருவதற்கு துடிப்பவர்கள் ஊழல் வழக்குகளில் சிறைக்குப் போகிறார்கள். அதற்காக வெட்கப் படுவது இல்லை, இது ஒருபுறம் ஆனால் கொள்கைக்காக, அடக்குமுறைகளை எதிர்த்து சிறை சென்ற தலைவர்கள் தமிழகத்தில் உண்டு. அதிலும் பெரியார் சிறை சென்ற வரலாறுகள் கைகால்விலங்குகளோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளே கடும் வேலை வாங்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஏனைய தலைவர்களோடு பெரியார், இதிலும் தனித்துவமாக நிற்கிறார், கொள்கைக்காக சிறைக்கு போவது கூட தியாகம் அல்ல என்கிறார் பெரியார்.
1932ம்ஆண்டுசோவியத்ரஷ்யாவுக்குபயணம் சென்று திரும்பிய பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் ‘இன்றைய ஆட்சி’ ஏன் ஒழியவேண்டும் என்று எழுதியகட்டுரைக்காக,அவர்மீதுஅடக்குமுறை சட்டம் பாய்ந்தது.
அந்தக் கட்டுரை ஏழை எளிய மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கும், பார்ப்பன மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும், மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது என்ற கருத்தில் எழுதப்பட்ட கட்டுரை. பெரியாரும் குடிஅரசு பதிப்பாளர் என்ற முறையில் அவரது சகோதரி கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட அடக்குமுறைகள் பெரியார், அவரது சகோதரி கண்ணம்மாள் கைது செய்யப் பட்ட முறை, எப்படி இருந்தது என்பதை ‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திகளை இளைய தலைமுறைக்காக ‘நிமிர்வோம்’ வழங்குகிறது.
‘இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்’ என்ற தலையங்கம் குடிஅரசுவில்29-10-1933ல் வெளியானது.சரியாக13ஆவதுநாள்குடிஅரசுக்கு அரசு சார்பில் உத்தரவு அனுப்பப்பட்டது.
அதில் அடங்கியுள்ள வார்த்தைகள் தெளிவான குற்றச்சாட்டை முன்வைத்தது.
கோயமுத்தூர் ஜில்லா ஈரோட்டிலிருந்து பிரசுரிக்கப்படுகின்றதும் 1931ஆம் வருஷத்திய இந்திய பத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டம் பிரிவுகளின்படி செக்யூரிட்டி வழங்கப் படாதது மானஅக்டோபர்29ஆம்தேதிஇதழிலே1932ஆம் வருஷத்திய கிரிமினல்சட்டத்திருத்தச்சட்டத்தில் ((xx111 o ஷீயீ 1932) திருத்தப் பெற்ற சட்டத்தின் 4ஆவது செக்ஷன் (1) சப் செக்ஷனின் (டி) பிரிவில் விவரிக்கப்பட்ட தன்மையுள்ள வார்த்தைகள் (அதன் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு ஒன்று இத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறது)
பிரசுரிக்கப்பட்டிருப்பதாக லோக்கல் கவர்ன்மெண்டுக்கு தெரிய வருகிறபடியால் 1921ஆம் வருஷத்திய இந்தியப் பத்திரிக்கைகள் (அவசர அதிகார) சட்டம் (xx111 of 1932) 7ஆவது செக்ஷனில் (3) சப் செக்ஷன்படி பத்திரிகையின் பிரசுதாராகிய எஸ் ஆர் கண்ணம்மாள் 1932 நவம்பர் 20ம் தேதி அல்லது அதற்கு முந்தி ரூ1000 (ஆயிரம் ரூபாய்) ரொக்க பணமாக அல்லது இந்திய கவர்மெண்டு செக்யூரிட்டி பாண்டுகளாக கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் செக்யூரிட்டி கட்ட வேண்டும் என்று லோக்கல் கவர்ன்மெண்டார் இதனால் அறிவிக்கின்றனர். (கவுன்சிலின் கவர்னர் உத்திரவுப்படி) ஆக்டிங் சீப் செக்கரட்டரி கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டது.
குடி அரசு பத்திரிகை அச்சடிக்கப்படுகிற உண்மை விளக்க அச்சுக் கூட உரிமையாளர் என்ற முறையில் கண்ணம்மாளுக்கு ரூ.1000 ஜாமீன் கேட்டு மற்றொரு உத்தரவும் அனுப்பப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்ட பெரியார் ’குடி அரசுக்கு பாணம்’ என்ற தலைப்பில்எழுதினார். இதுவரை விட்டு வைத்திருந்தார்களே என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
‘‘குடி அரசு பத்திரிக்கை இந்திய அரசாங்கம் அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர். கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் குடி அரசு பத்திரிக்கையின் பிரசுரகர்த்தாகவும் வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்து ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்ட வேண்டுமென்று நோட்டீஸ் சர்வு செய்யப்பட்டாய் விட்டது.
இதைப் பற்றி நாம் வருத்தமடையவில்லை கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை இது வரையிலும் இப்படிச் செய்யாமல் விட்டு வைத்திருந்ததற்கு நன்றி செலுத்தவு ம் மகி ழ்ச்சிய டையவு மே கட்டுப்பட்டிருக்கிறோம்.
முதலாளி வர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடி அரசு ஆரம்பித்த காலம் முதல் இந்த நிமிஷம் வரை குடி அரசின் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ட விஷயங்கள் குடி அரசைக் கொல்லத்தக்க பாணம் விடக்கூடக் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறதும் ஐயமில்லைஆனால் இந்த அரசாங்கம்இது வரை விட்டு வைத்து அதிசயமேயாகும். குடி அரசு தேன்றி இந்த 8 லு வருஷ காலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்க வேண்டும் என்கின்ற கவலை கொண்டிருக்கிறது என்பதிலும் அக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனீய புரோகிதம் பாதிரிதன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்து வரும் எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்து வந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை. இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதை களை கண்ணாடிபோல் வெளிப்படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை இனியும் அதைத்தான் முதலில் செய்யக் காத்திருக்கிறோம் என்பதையும் தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமில்லை.
சிறிது காலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பது போல் குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடியவில்லை யானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரியன் என்கின்ற முறையில் நமக்குக் கவலை யில்லை.
ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும் பிரசுரகர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்கு ‘குடிஅரசு’ மறைவதில் அதிகக் கவலையிருந்து வருகின்றதாக அறிகிறோம், ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல்நிலை இந்த 5,6 மாதயாய் அதிகமாய் சீர் கெட்டுவிட்டது மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர் ஏறி வீக்கம் கண்டிருக்கிறது.
காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்குப் பாரம் என்றே எண்ணினோம் இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ள வேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின்றதோ பார்ப்போம். நிற்க இதன் பயனாய் குடிஅரசுவின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது. அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டு போகுமோ என்றாவது யாரும் பயப்பட வேண்டியதில்லை, நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றிவிட்டன பிரசாரம் என்கின்ற கொடி எங்கும் பரவி விட்டது குடிஅரேசோ சுயமரியாதைக்காரரோதான் இக்கொள்கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருத வேண்டியதில்லை. குடி அரசும் சு.ம. காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டதே என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடிஅரசுக் கொள்கையைச் சொல்லவும். பிரசுரம் செய்யவும் வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதலால் அவர்களுக்கும் இது சமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும்.
மற்றவை பல தோழர்களைக் கலந்த பிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயம் செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ள வேண்டுமாக பிரத்யேகமாய் வேண்டிக் கொள்கிறோம்.’’ என்று பெரியார் எழுதினார்.
அதற்குஅடுத்தவாரம்வெளியானகுடிஅரசில் அடுத்தவாரம் குடிஅரசு பத்திரிகை வரத்தவறும் பக்ஷத்தில் வேறு பத்திரிகை வெளிவரும் என்று மானேஜர் அறிவித்தார். டிசம்பர் 20ம் தேதி மதியம் இரண்டு மணிக்கு காவல்துறையினர் ஈரோடு ‘புரட்சி’ இதழ் அலுவலகத்துக்கு வந்தார்கள். மூன்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருடன் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் வரும்போது அலுவலகத்தில் பெரியார் இருந்தார்.
அவரிடம் அரைமணி நேரம் விசாரணை நடத்திவிட்டு ’புரட்சி’க்காக வந்திருந்த கடிதங் களைப் புரட்டிப் பார்த்தார்கள் சந்தேகத்துக்கு இடமானதாக சந்தேகப்பட்ட 46 கடிதங்களையும் பிரஸ்-புக்கில் இருந்த மூன்று கடிதங்களையும் காவலர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஈ.வெ. ரா கிருஷ்ணசாமியின் (பெரியாரின் சகோதரர்) மாளிகையைப் பார்க்கவேண்டும் என்று கேட்டபோது அதற்கான அடையாளத்தையும் முகவரியையும் பெரியார் கொடுத்தார்.
ஆனால் அவரையும் தங்களுடன் வரச் சொன்னார்கள். காவலர்கள் அங்கு போய்விட்டு எஸ்.ஆர்.கண்ணம்மாள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று காவலர்கள் சொல்ல அங்கும் அழைத்துச் சென்றார். பெரியார் கண்ணம்மாளை காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்ற பிறகு பெரியார் கண்ணம்மாள் ஆகிய இருவரிடமும் கம்யூனிஸ்ட் பிரசாரம் செய்ததாகவும் ராஜநிந்தனையில் ஈடுபட்டதாகவும் இபிகோ 124 பிரிவின்படி நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் எனறு அறிவிக்கப்பட்டது. மாலை 5,30 மணி இவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு கோவை சென்றது புகை வண்டி.. மூன்று காவலர்கள் இவர்களுக்கு காவல். கோவை நகர காவல் நிலையத்தில் அன்று இரவு இவர்கள் வைக்கப்பட்டார்கள். மறுநாள் காலை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.டபிள்யூ. வெல்ஸ் ஐ,சி,எஸ். முன் இருவரும் நிறுத்தப்பட்டார்கள் ஜனவரி 4 (1934) வரை காவலில் வைக்க அவர் உத்தவிட்டார்.
4ஆம் தேதி விசாரணை தொடங்கியது. பெரியார் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நஞ்சுண்டய்யா வழக்கு பதிவு பற்றிய ஆவணங் களைக் கேட்டு விண்ணப்பம் செய்தார். அரசு தரப்பு வழக்கை 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்க கேட்டுக்கொண்டது.
சிறையில் படிக்க பெரியாருக்கு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வழக்கறிஞர் நஞ்சுண்டய்யா கேட்டபோது ஏற்பாடு செய்வதாக நீதிபதி உறுதியளித்தார். பழைய குடி அரசு இதழ்களைப் பார்க்கவும். அதுபற்றி விவாதிக்கவும் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்றுநஞ்சுண்டய்யா கேட்டார். இதுபற்றிசிறை அதிகாரியிடம் கேளுங்கள். அவர் அனுமதி தரவில்லையென்றால் என்னிடம் வாருங்கள் என்று பதிலளித்தார் நீதிபதி. பெரியாரை சிறையில் இருந்து நீதிமன்றம் அழைத்து வரும்போது வண்டியில் அழைத்து வந்தார்கள் ஆனால் சிறைக்கு கொண்டு செல்லும் போது சுமார் ஒரு மைல் தூரம் நடத்தியே கூட்டிச் சென்றார்கள். 12ஆம் தேதி விசாரணை நடந்தது ப.ஜீவானந்தம், கைவல்யம், அ.பொன்னம்பலம்,. கோவை அய்யாமுத்து சி.நடராஜன், எஸ்.வி. லிங்கம், எஸ்.ராமநாதன். ஈ,வெ,கிருஷ்ணசாமி, எஸ்.ராமசாமி. ஏ.ஜி, ராமசாமி. வழக்கறிஞர் ஈ.வி.வேணுகோபால்ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்கள். பெரியார் கண்ணம்மாள் உட்கார நாற்காலி தரப்பட்டது அன்று பெரியார் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
பெரியார். கண்ணம்மாள் கைதை தொடர்ந்து வந்த ‘புரட்சி’யில் ஈ.வெ.கிருஷ்ணசாமி ஒரு தலையங்கம் எழுதினார். பெரியாருக்கும் கண்ணம்மாளுக்கும் ஜே. போட்டது அத்தலையங்கம்.
“காரணம் ரொம்பவும் சப்பை”
எஸ். ஆர் கண்ணம்மாள் மேல்முறையீடு செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி. லட்சுமணராவ் முன் விசாரணை செய்யப்பட்டது பெரியார் மேல் முறையீடும் செய்யவில்லை ஜாமீனும் கெட்டவில்லை.
இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்ற தலையங்கம் ராஜநிந்தனை கொண்டதுதான் என்றும் இதற்காக கோவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதுதான் என்றும் உறுதி செய்த நீதிபதி இதுவரை பெரியாரும் கண்ணம்மாளும் இருந்த சிறைக் தண்டனையே போதும் என்று கூறி விடுதலையும் செய்தார்.
மே15ஆம் நாள் ராஜமகேந்திரம் சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை வழியாக ஈரோடு வந்து சேர்ந்தார் பெரியார்.
அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை சேல ம் புகைவண்டி நிலையங்களில் சுமயரியாதை இயக்கத்தவர் அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.
இது பற்றி ’புரட்சி’ இதழில் ராஜமகேந்திரம் ஜெயிலில் வெயில் கொடுமையில் சிறிது கருத்தும் இளைத்தும் போயிருக்கிறார். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் சமீபத்தில் வெய்யில் கொடுமைக்காக எங்காவது குளிர்ச்சியான இடத்துக்கு போகக் கருதியிருக்கிறார் என்று குறிப்புவந்துள்ளது.நீலகிரிமெயிலில்ஈரோடுவந்த பெரியாருக்கு அன்று மாலையே சுயமரியாதை வாலிபர்சங்கத்தில்பாராட்டுக்கூட்டம்நடந்தது. தோழர் அன்னபூரணி தலைமை தாங்கினார். டாக்டர் கிருஷ்ணசாமி, அ.ரத்தினசபாபதி, ஈஸ்வரர். ராஜம்மாள் முதலானவர்கள் பேசினார்கள் முஸ்லீம் இளைஞர்கள் சார்பாக டி.கே.பாப்ஜான் பாராட்டி வாழ்த்து மடல் வாசித்து கொடுத்தார். தொடர்ந்து பெரியார் பேசியதாவது:
”நான் சிறை வாசம் சென்று விட்டு வந்ததைப் பாராட்டுவதற்காக என்று இக்கூட்டம் கூட்டப்பட்டு என்னைப் பற்றி பலர் பலவிதமாகப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள் இது ஒரு வித பழக்கவழக்கத்தை அனுசரித்திருப்பதாக மாத்திரம் என நான் கருதுகிறேனே ஒழிய இதில் ஏதாவது நல்ல பொருள் இருப்பதாக நான் கருதவில்லை. முதலாவதாக இபபோது நான் மற்றவர்களைப் போல் சிறை செல்ல வேண்டுமென்று கருதி நானாக சிறைக்குப் போகவில்லை. ஆனால் சிறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்காக பயந்து பின்வாங்காமல் அதையும் ஒரு நன்மையாகவே பயன்படுத்துக் கொள்ளலாமென்பதைக் காட்டுவதற்காகவே நான் செல்ல நேர்ந்தது.
அதாவதுகுடிஅரசு பத்திரிகையில்என்னால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமானதும் சப்பை யானதுமான வியாசத்திற்ககாகத்தான் நான் சிறைக்குப் போக நேரிட்டதே தவிர மற்றபடி செய்யத்தக்கஒருசரியானகாரியம்செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் இந்தக் குடி அரசு பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப்பார்த்தால்என்னைவருடக்கணக்காய் தண்டிக்கக் கூடியதும் நாடு கடத்தக் கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காகத் தென்படலாம் ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலெல்லாம் கவனித்தாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் கவனிக்கவில்லை என்பதை இப்போது நான் கவனித்துப் பார்த்தால் காங்கிரஸ§க்கு பாமர ஜனங்களிடத்தில்இருந்தசெல்வாக்கின்பயனாய் நமது வியாசங்களை பொது ஐனங்கள் லட்சியம் செய்ய மாட்டர்கள் என்கிற தைரியத்தால் சர்க்கார் அப்போழுது சும்மா இருந்தார்கள் என்று தோன்றுகிறது.
ஆனால் இப்பொழுது இப்படிப்பட்ட சிறிய வியாசங்களையும் கண்டு இவ்வளவு வல்லமை பொருந்தியசர்க்கார்பயப்படும்படியானநிலைமை ஏற்பட்டு விட்டதென்பது நன்றாய்த் தெரிகிறது. இதிலிருந்து நாம் என்ன நினைக்க வேண்டும் இருக்கிறதென்றால் நமது அபிப்பிராயத்தை மக்கள் மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் சுயமரியாதைக் கொள்கையை ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும் சர்க்கார் இப்போது உணர்வதாகத் தெரிகிறது மற்றும் பல புதிய புதிய தீவிரக் கொள்கைகளையும் ஜனங்கள் வரவேற்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
இப்பொழுதுள்ள நிலையில் ஜெயிலில் அதிக கஷ்டமில்லை முன்பு சிறிது கஷ்டம் இருந்தது உண்மைதான் 1921ம் வருடத்தில் நானும் இங்குள்ள தோழர்கள் ஈஸ்வரன். ஜெயா முதலியவர்கள்கைதியாக்கப்பட்டபோதுகையில் சூட்டை போடுவதும் துன்பப்படுத்துவதுமான தொல்லைகள் மிகுந்திருந்தன அந்தக் காலத்தில் பட்ட கஷ்டங்கள் இப்பொழுதொன்றுமில்லை. அப்பொழுது இங்குள்ள தோழர் ஜெயாவை ஜெயிலில்இருந்துவண்டியில்போட்டுவெளியில் அழைத்து வரப்பட்டது. உயிர் பிழைப்பாரோ என்று கூட சந்தேகிக்கப்பட்டது. இப்பொழுது ஜெயிலில் கஷ்டமில்லை என்பதோடு என் போன்றவர்கள் அங்கு வெகுமரியாதையாக சாமி பாபுஜி என்று உள்ளிருப்பவர்களாலும் அழைக்கப்படுவதோடு கூட ஜெயில் அதிகாரிகள் பயந்து நடுங்கும் படியான நிலைமையிலேயும் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் நான் பி.வகுப்பில்இருந்தாலும்எனக்குவெண்ணையும் பாலும் பழமும் சில சமயங்களில் மாமிசமும் கிடைத்து வந்ததது அது போல் இங்கு எனக்கு வீட்டில் கூடி திரேக நிலைமைக்கு ஏற்ற சாப்பாடு கிடைக்க மாட்டாது.
வெய்யிலில் கொடுமைதான் தாங்க முடிய வில்லை ராஜமகேந்திர ஜெயில் எவ்வளவு கேவலமான நிர்வாக முடையதாய் இருந்தாலும் கஷ்டமான ஜெயில் அல்ல. Habititual Prisoneers என்னும் கருப்புக் குல்லாய்க்கார திருடர்கள் ஜெயிலாய் இருந்த போதிலும் கைதிகள் எவ்வித கேள்வி கேட்பாடு இல்லாமல் இஷ்டப்படி உள்ளே திரியலாம். கைதிகளுக்கு வேலையும் கிடையாது. அங்கும் கஞ்சா குடியும் பீடி சிகரெட்டு குடிப்பழக்கம் வெற்றிலைபாக்கு புகையிலை போட்டு ஆனந்தப்படுவதும் சர்வ சாதாரணம். ஜெயிலுக்குள்ளேயே கைதிகள் கஞ்சா செடிகள் வளர்க்கிறார்கள். அந்தச் செடியில் ஏதாவதுசிலபூக்களை சொருகிவைத்து பூச்செடி மாதிரி செய்து விடுகிறார்கள் அதை ஜெயில் சூப்பிரண்டு கவனிப்பச்தில்லை. மற்ற சில்லரைஅதிகாரிகள்வழக்கம் போல்அதனால் லாபமடைகின்றார்கள். நான் பல ஜெயிலில் பார்த்திருந்தாலும் ராஜமகேந்திரபுரம் ஜெயில் போல் பொருப்பற்றதும். அதிக குற்றங்கள் நடப்பதுமான ஜெயில் பார்த்ததில்லை.
சூப்பிரண்டு நல்லவர் என்று சொல்லலாம் ஆனால் நிர்வாகத் திறமை போராது. சிப்பந்தி களுக்கு பணமே பிரதானம் அவர்கள் அடிக்கடி கைதிகளால் அவமானப்படுவதை லட்சியம் செய்வதில்லை.
அங்குள்ள டாக்டர்களும் அப்படியே, மற்றபடி நான் இப்போழுது வெளியில் வந்ததில் இந்த இரண்டு நாளிலேயே ஏன் வந்தோம் என்றே தோன்றுகிறது இப்போழுது என்ன சொல்வதேன்றே புரியவில்லை மற்றும் சிவில் விவகாரத்துக்காக அரஸ்ட் செய்யப்பட்டேன் ஆனால் காயலா நிமித்தம் இரண்டு மாதத்திற் குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டேன் என்றாலும் இவைகளால் எல்லாம் தேசபக்தன் என்ற பெயர் அடைய முடியவில்லை ஆனால் இப்பொழுது சர்க்கார் அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டடார்கள் இதன்பயனால் அறியாமை மிகுந்த பாமர ஜனங்களால் நான் பாராட்டட்டக் கூடும். மற்றபடி அறிவாளிகள் நான் ஜெயில் சென்றதைப் பாராட்ட யாதொரு விஷயமுமில்லை”. பெரியார் விடுலையாகி வெளியே வந்த பிறகும் காவல் துறை நெருக்கடிகள் தொடர்ந்தன.