இனத்தமிழ்

 மாணவர்

 எழுந்து

 விட்டார்!

 பகை

 எரித்திடும்

 தீயென

 கொழுந்து

 விட்டார்!

 ஒரு வழி

 தடுத்தவர்

 கிளப்பி

 விட்டார்!

 மாணவர்

 ஒவ்வொரு

 திசையிலும்

 கிளம்பி

 விட்டார்!

 வடக்கினைச்

 சடக்கென

 மடக்கி

 விட்டார்!

 இன

 வழக்கினில்

 தமிழ்

 அறம்

 தொடக்கி

 விட்டார்!

 அடைத்தவர்

 கதவுகள்

 திறக்க

 விட்டார்!

 ஏறு

 தழுவுதல்

 தடுப்பவர்

 திகைக்க

 விட்டார்!

 இருட்டினும்

 ஒளிக்

 கொடி

 பறக்க

 விட்டார்!

 பார்

 கடற்கரை

 திணறிட

 நிரம்பி

 விட்டார்!

 மாணவர் படை

 இனி

 தூங்காது!

 வட

 ஆரியம்

 தமிழ்

 அடி

 தாங்காது!

 திரிசா

 தங்கையோ

 திருந்துதல்

 நல்லது!

 பிராமணச்

 சங்கம்

 உமக்கென

 உள்ளது!

 இதுவோ

 எங்களின்

 இன

 விளையாட்டு!

 இதற்குள்

 ஏனம்மா

 நூல்

விளையாட்டு?

 காவிரியாற்றிலே

 உழவரின்

 பிணங்கள்!

 திருவையாற்றிலே

 உம்

 இன

 சனங்கள்!

 இதுவே

 மாணவர்

 தொடக்க

 அரசியல்!

 இனிதான்

 இருக்குது

 இவர்களின்

 களச்

 செயல்!

 அரசியல்

 அறிவினை

 எடுப்பார்!

 மாணவர்

 திரண்டினி

 திருடுதல்

 தடுப்பார்!

 ஆற்று மணலை

 அள்ளுதல்

 தடுப்பார்!

 நிலத்தடி

 நீரினை

 நிறைத்துக்

 கொடுப்பார்!

 கடலினில்

 சாமிகள்

 கரைப்பதை

 தடுப்பார்!

 கடல்தமிழ்

 மீன்களைக்

 காத்திடத்

 துடிப்பார்!

 சாதிகள் கடந்த

 தமிழினம்

 படைக்கணும்!

 அதற்கென

 மாணவர்

 அரசியல்

 படிக்கணும்!

 மதவெறி

 அரசியல்

 மாணவர்

 தடுக்கணும்!

 தமிழரின்

 விழுமியம்

 உரிமையில்

 எடுக்கணும்!

 ஏறு

 தழுவுதல்

 மாணவர்

 நடத்தணும்!

 அதில்

 தில்லி

 திருடர்கள்!

 நுழைவதை

 தடுக்கணும்!

Pin It