உலகத்திலேயே எவ்வளவோ கொடிய குற்றங்கள் நடக்கின்றன. அதற்குக் காரணமான குற்றவாளிகள் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை அடைகின்றனர் அல்லது விடுதலை ஆகின்றனர். ஆனால், குற்றச்சாட்டே எழுப்ப முடியாத பாது காப்பான குற்றவாளிகள் - மிக மிக அபாயமான குற்றவாளிகள் பார்ப்பனர்கள் தான். அதை மிகத் திமராக - வீடியோவாக வெளியிட்டுள்ளார் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர்.  

ஊர்கூடித் ‘தர்மஅடி’ கொடுப்பதைப்போல, சமூக வலைத்தளங்களில் ஒன்றுகூடி அவருக்குச் சிறப்புச் செய்தனர். கூடுதலாக,  எஸ்.வி.சேகருக்கு மட்டுமல்லாமல், அனைத்துப் பார்ப்பனர்களுக்கும் புரியும்படி, இந்துத்தும், திராவிடம் என்று ஹேஷ்டேக் களை உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கினர். நம் பங்குக்குச் சில தகவல்கள்.

பார்ப்பனர்கள் எங்குமே வன்முறையில் ஈடுபடுவது இல்லை. பார்ப்பனர்கள் மீது எங்கயாவது ஜாதிக்கலவரத்தில் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்களா? எப்போதோ முன்னோர் செய்த தவறுக்கு இப்போது பழிவாங்குவது நியாயமா? - எஸ்.வி.சேகர்.

பகவத் கீதை - கொலைநூல்

இந்தியாவில், எந்தப் பகுதியில் ஜாதியத் தாக்குதல்கள் - மோதல்கள் நடந்தாலும் அவற்றுக்கு முதல் குற்றவாளிகளாக பார்ப்பனர்கள் தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தருமபுரி இளவரசன், கோகுல் ராஜ், மடத்துக்குளம் சங்கர் போன்ற ஜாதி கடந்த காதலர்களின் படுகொலைக்கு அடிப்படைக் காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஜாதி அடிப்படையிலான படுகொலைகள், தீண்டாமை வன்கொடுமைகள், இழிவுகள், தாக்குதல்கள் அனைத்திற்கும் அடிப்படையான காரணம் ஜாதி தானே? இதற்கு எவரும் மாற்றுக்கருத்துக் கூற இயலாது. அப்படியானால், அந்த ஜாதியை உருவாக்கியது யார்? இதோ பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார்.

“ சதுர் வர்ணம் மயா சிருஷ்டம், குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர் தாரம் அவ்யயம் (பகவத் கீதை - அத்தியாயம் 4 - சுலோகம் 13)

ஜாதிகளைப் படைத்தது நானே என்கிறார் கிருஷ்ணன். அதுவும் பகவத் கீதையிலேயே கூறியுள்ளார். அந்த பகவத்கீதை, இந்திய நீதிமன்றங்களிலும், புனிதநூலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான அனைத்துக்குற்றங்களுக்கும் மிக முக்கியக் காரணமான ஒரு நூலை, புனித நூலாகவே அங்கீகரித்துள்ள மக்கள்தான், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள்.

கொலைநூலே புனிதநூலாகிவிட்ட பிறகு, ஜாதிக்குற்றங்களில், முதல் குற்றவாளிகளாக அவசியம் இடம் பெற வேண்டிய பார்ப்பனர்களின் பெயர்கள் – குற்றப் பத்திரிக்கைகளிலும், எஃப்.ஐ.ஆர்.களிலும் இடம் பெறாதது பெரிய வியப்பான செய்தி அல்ல. பகவத் கீதை ஜாதியை உருவாக்கியது நான் என்கிறது. மனுசாஸ்திரங்களோ, அனைத்து ஜாதியக் குற்றங்களையும் இந்துக்களின் சட்டமாக்கி வைத்துள்ளது.

“உயர்ந்த ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்த தாழ்ந்த ஜாதியானுக்கு மரண வரையில் தண்டனை விதிக்க வேண்டியது. தன் ஜாதிக் கன்னிகையைப் புணர்ந்தவன் அவள் தந்தை கேட்கும் பொருளைக் கொடுத்து அக்கன்னிகையைக் கலியாணஞ்செய்து கொள்க.”  - 8 வது அத்தியாயம் 366 வது ஸ்லோகம்

“நற்கருமங்கள் நடைபெறுகையில், இவர்களைக் காண்பதோ, பேசுவதோ கூடாது. இவர்கள் தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும் கொடுக்கவும், கடன் கோடலும் வேண்டும்” ( 10 : 53).

மேற்கண்ட மனு வின் கட்டளைகள் தான் இன்று இளவரசன், சங்கர் படுகொலைகளாக நம் காலத்தில் வடிவம் பெற்றுள்ளன. ஜாதி மறுப்புத் திருமணங்கள் மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமைகள் அனைத்திற்கும் அடிப்படையானவை பகவத்கீதையும், மனு தர்மங்களுமே. இவற்றை நடைமுறைப்படுத்தும் கருவிகள் தான் ஜாதியக்குற்றங்களுக்குக் காரணமான மக்கள்.

இவை மட்டுமல்ல; இந்து மதத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற ‘சூத்திரர்கள்’ மீதும் - இந்து மதத்திற்கு வெளியே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், பார்ப்பனர்கள் கடும் தீண்டாமைக் கொடுமைகளை ஏவிவிட்டனர்.  எடுத்துக் காட்டாக,

‘சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். - (அ.8.சு281).

“பாக்கிய ஜாதியினருக்கு (தாழ்த்தப்பட்டவர்) நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது” (10 : 54).

இந்த மனுவின் சட்டம்தான், கொங்கு மண்டலத்தில், ‘செகுடந்தாளி முருகேசன் படுகொலை’யாக வடிவம் பெற்றது. தமிழ்நாடு முழுவதும் டீக்கடைகளில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி டம்ளர், பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி டம்ளர் என்று, ‘இரட்டைக்குவளை’களாக வடிவம் பெற்றுள்ளது.

இதுபோன்ற சாஸ்திரங்கள் தான் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களாக மாறி இன்று நடக்கும் அனைத்து ஜாதி மோதல்களுக்கும், தாக்குதல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளன. ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டில் கி.பி.1857 ல் கிரிமினல் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அதுவரை நம்மை ஆண்டது இந்த மனுசாஸ்திரங்கள் தான். அவற்றின் அடிப்படையில் தான் குற்றங்களுக்குத் தண்டனைகளும், சிவில் நிர்வாகமும் நடைபெற்றது.

வடநாட்டின் சுங்கப் பேரரசு, குப்தப் பேரரசுகளிலிருந்து தமிழர்களின் இராஜராஜ சோழன் போன்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களும், தெலுங்கு விஜயநகரப் பேரரசுகளும், இஸ்லாமிய மன்னர்களும் இந்த மனுசாஸ்திரங்களின் அடிப்படையில் தான் நீதிமன்றங்களை நடத்தினர்.

இந்த மனுசாஸ்திரங்களையும், வேதங்களையும் முறையாகக் கற்று, அவற்றைத் தம் வாழ்நாளில் தவறாமல் பின்பற்றுபவன் தான் முழுமையான பிராமணன். அப்படி, பிராமணன் இந்து தர்மங்களைத் தவறாமல் பின்பற்றத் துணையாக இருப்பவன் தான் உண்மையான Bத்திரியன். அப்படிப் பட்டவர்களுக்குத்தான் ‘மனுநீதிச் சோழன்’ என்ற அடைமொழிகள் வழங்கப்படும். அதனால்தான், தோழர் பெரியாரும், தோழர் அம்பேத்கரும் 1927 லேயே மனுசாஸ்திரத்தை எரித்தனர்.

எனவே, அனைத்து ஜாதியக்குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள், முதன்மைக் குற்றவாளிகள் பகவத்கீதை - மனுசாஸ்திரம் - இந்து வேதங்கள் - இவற்றைப் பரப்புவதையே குலத்தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் என்பது தான் வரலாற்று ரீதியான உண்மை.

இந்தியாவில் இன்றுவரை நடந்த அனைத்து ஜாதியத் தாக்குதல்களிலும், முதல் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய பார்ப்பனர்களை இதுவரை எவருமே, எங்குமே குற்றப்பத்திரிக்கையில் சேர்த்தது இல்லை.

இனியாவது, எங்கு ஜாதியக்குற்றங்கள் நடந்தாலும் எஃப்.ஐ.ஆரிலும், குற்றப் பத்திரிக்கையிலும், அந்தந்தப் பகுதிப் பார்ப்பனர்களையும், அந்தக் குற்றத்துக்குத் தூண்டிய ‘குற்ற நூல்’ என்று பகவத்கீதையையும், மனுசாஸ்திரத்தையும் எஃப்.ஐ.ஆரிலேயே சேர்க்க முயற்சி செய்ய வேண்டும்.  இது சட்டப்படியும், நடைமுறை வழக்கங்களின் படியும் ஆகக்கூடிய காரியமா? என்பது வேறு செய்தி. ஆனால் முயற்சிக்க வேண்டும்.

முன்னோர்கள் செய்த பாவத்திற்கு இப்போது பழிவாங்கலா?

இன்றும், இப்போதும் பார்ப்பனர்கள் பூணுாலை அணிந்துதான் உலாவுகின்றனர். அவர்கள் பூணுால் அணிந்தால், ‘முழு பிராமணர்’ ஆகிறார்கள். அவர்கள் பிராமணர் என்றால், நாம் ‘சூத்திரர்’ என்று ஒத்துக்கொள்கிறோம் என்றுதான் பொருள். ‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று பொருள். ஆம். அப்படித்தான் இந்து மனுசாஸ்திரம் கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415)

பூணுால் அணியும் பார்ப்பனர்கள் அனைவரும், இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவின் படியும் - இந்து சாஸ்திரங்களின் படியும் நம்மைத் ‘தேவடியாள் மக்கள்’ என்று கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதைவிட வன்முறை வேறு என்ன இருக்க முடியும்? வேறு யார், இவர்களை விடப் பெரிய வன்முறையாளர்களாக இருக்க முடியும்? பார்ப்பன முன்னோர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, இன்று நடமாடும் பார்ப்பனர்களும் கடும் குற்றவாளிகளே!

Pin It