தொடங்கி வைப்பவர்: இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

நாள்: 05-10-2013, சனிக்கிழமை.
இடம்: ட்ரீம்ஸ் இந்தியா, சர்குலர் ரோட், கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் பூங்கா அருகில்)
நேரம்: மாலை 5 மணி.

நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ சார்பாக தொடர்ந்து நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது. இந்நிகழ்வை கோடம்பாக்கத்தில் உள்ள ட்ரீம்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தமிழ் ஸ்டுடியோ நடத்துகிறது. தினமும் மாலை 7 மணியளவில் திரையிடல் தொடங்கும். 5 ஆம் தேதி (சனிக்கிழமை) மட்டும், தொடக்கவிழா மாலை 5 மணியளவில் தொடங்கவிருக்கிறது.

இதில் திரையிடப்படும் முதல் கட்டப் படங்கள்:
----------------------------------------------
05-10-2013 சனிக்கிழமை - தி கிரேட் ட்ரைன் ராபரி & ராஜா அரிச்சந்திரா (மௌனத் திரைப்படம், இந்தியாவின் முதல் திரைப்படம்)
----------------------------------------------
06-05-2013 ஞாயிறு - தோ பிகா ஜாமீன் (Do Bigha Zamin), இந்தியாவில் இருந்து முதல் முறையாக வெளிநாட்டு விருதை வென்ற திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற திரைப்படம். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகளை எவ்வித ஜோடனைகளும் இன்றி, எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் திரைப்படம்)
----------------------------------------------
07-10-2013 திங்கள் - அவன் அமரன் (தமிழில் வெளிவந்த முதல் கம்யுநிசத் திரைப்படம்)
----------------------------------------------
08-10-2013 செவ்வாய் - மர்மயோகி (தமிழின் முக்கியமான இயக்குனரான கே. ராம்னாதின் திரைப்படம், இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
----------------------------------------------
09-10-2013 புதன் - திக்கற்ற பார்வதி ( சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் முதல் திரைப்படம் இது. தமிழக முதல்வர் ராஜாஜி அவர்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம்)
----------------------------------------------
10-10-2013 வியாழன் - ஒரே ஒரு கிராமத்திலே (தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடைவிதித்த திரைப்படம், இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கிளைமேக்ஸ் மாற்றப்பட்டதும், அனுமதி வழங்கப்பட்டது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை வாலி எழுதியிருந்தார்)
----------------------------------------------
11-10-2013 வெள்ளி - சாசனம் (இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளிவரவில்லை. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் நிதியுதவி செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். கந்தர்வனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
12-10-2013 சனிக்கிழமை - யாருக்காக அழுதான் (எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கிய திரைப்படம், நாகேஷின் பிரமாதமான நடிப்பிர்காகவே போற்றப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
13-10-2013 ஞாயிறு - ஏழை படும் பாடு - கே. ராம்நாத் இயக்கிய இந்த திரைப்படம் தமிழின் முக்கியமான திரைப்படம். லெஸ் மிசரப்லஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம்.

14-10-2013 திங்கள் - ஓர் இரவு - அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.

15-10-2013 செவ்வாய் - மதன காமராஜன் (நிகழ்கால பார்வையாளர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத இந்த திரைப்படம், பழங்கால வாழ்க்கை முறை, தெரிந்துக் கொள்ள உதவும்.

16-10-2013 புதன் - நந்தனார் - நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
----------------------------------------------
இந்த படங்கள் அனைத்தும், ஏதோ ஒரு வகையில் அதிர்வை ஏற்படுத்திய திரைப்படங்கள். எல்லாருக்கும் பரிச்சயமான, எப்போதும் பார்க்க கிடைக்கக் கூடிய திரைப்படங்களை இந்த திரையிடலில் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறோம். சில அரிய திரைப்படங்கள், சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் என இந்த பட்டியல் எல்லாரும் அவசியம் பார்த்தாக வேண்டும் என்பதை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தப் பட்டியல் விரைவில்.
----------------------------------------------
திரையிடலுக்கு அனுமதி இலவசம். அனைவரும் வருக..
----------------------------------------------
நண்பர்கள், தங்களின் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து, இந்த நூற்றாண்டை கொண்டாட்டத்தை வெற்றிபெற செய்யுங்கள்.

ஏற்பாடு: தமிழ் ஸ்டுடியோ & ட்ரீம்ஸ் இந்தியா.

Pin It