நாள் : 01.10.2011 மாலை 6 மணி முதல் 02.10.2011 காலை 6 மணி வரை
இடம் : தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகம், மதுரை

இராசிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருபதாண்டுகளாக கொடும் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை விலக்கி அம்மூவரையும் விடுதலை செய்யக்கோரியும் மரண தண்டனை என்பது நாகரிகச் சமூகத்திற்கு எதிரான ஒரு செயல் என்பதாலும் உலகின் பல நாடுகள் தூக்குத்தண்டனைகளை ரத்து செய்துவிட்ட நிலையில் இந்திய அரசு மரண தண்டனைகளை தொடர்ந்து நிறைவேற்றிவருவது கண்டனத்திற்குரியதாகும். எனவே மேற்குறிப்பிட்ட மூவர் மட்டுமல்லாமல் மரண
தண்டனையை எதிர்நோக்கி இந்தியச் சிறைகளில் காத்திருக்கும் எவருக்குமே மரணதண்டனை கூடாது எனும் கருத்தை வலியுறுத்த அரசியல் கட்சிகள், சமூகக் குடியுரிமை அமைப்புகள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில ஆளுநரை வலியுறுத்தியும் குரல் கொடுக்க வேண்டியது ஜனநாயகக் கடமையாகும்.

கோரிக்கைகள்

 ‘தடா’ சட்டமே அரசியல் சட்டத்திற்கு முரண்பட்டதென கைவிடப்பட்ட பிறகு அச்சட்டத்தின் கீழ் காவல் துறையால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாகக் கொண்டு தூக்குத்தண்டனை விதிப்பது நியாயமா?

 உயிரைப் படைக்கும் ஆற்றலற்ற மனிதன் ஒர் உயிரைப் பறிக்க முடிவெடுப்பது என்ன நியாயம்?

 நாளை, தூக்கிலிடப்பட்டவர் நிரபராதி எனத் தெரியவருமெனில் எடுத்த உயிரை மீண்டும் கொடுப்பது எங்கனம்?

 தண்டனையின் நோக்கம் சீர்திருத்தம் எனில் உயிரைப்பறிக்கும் அரசு யாரை சீர்திருத்தப் போகிறது?

 மற்றவர்களை அச்சுறுத்த இவர்கள் உயிரைப்பறிப்பதேன்? அஃது உண்மையெனில் குற்றங்களின் எண்ணிக்கை கூடுவதேன்?

 உலகில் பல நாடுகள் தூக்குத்தண்டனையை இல்லாமல் செய்த பிறகு இந்தியா மட்டும் பிடிவாதம் செய்வது ஏன்?

 தண்டனைச் சட்டங்களில் இனி தூக்குத்தண்டனை என்பது இல்லை என்று அறிவித்துள்ள உலக நாடுகளின் அணியில் சேர இந்திய அரசை வலியுறுத்துவோம்.

 கொல்லப்பட்டவர் தேசியத்தலைவர் என்பதற்காக போதிய ஆதாரங்கள் இல்லாமலே தூக்குத்தண்டனை வழங்குவது யாரை திருப்திப்படுத்த?

 இராசிவ் கொலைக்கான பின்னணி குறித்த விசாரணைகள் முடிவடையாத சூழலில் இவர்களைத் தூக்கிலிட ஏனிந்த அவரசம்?

 இருபதாண்டு சிறைவாசத்திற்குப் பின்னும், தூக்குத்தண்டனை கைதிகளாக 10 ஆண்டுகளில் நடைப்பிணமாகிவிட்டவர்களுக்கு மீண்டுமோர் தூக்குத் தண்டனையா?

இரவு முழுக்க இயக்கத் தலைவர்களின் உரை, கலை நிகழ்வு, ஆவணப்படம்

அனைவரும் குடும்பத்தினரோடு வருக! ஆதரவு தருக!!

- மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு

எண்-6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை-2.
தொடர்புக்கு : 9994368521, 9994368519

Pin It