நவீன எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை, சிவக்குமாருக்கு மிக எளிதாகக் கைகூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படி துவங்குகிறார், ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் ...... என்று.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துரோகங்கள், குரூரங்கள், மோசடிகள், குற்ற நடவடிக்கைகள், ரத்தத் தோய்தல்கள், எல்லாவற்றுக்கும் பின்னாலும் ஒளிந்திருக்கும் ஒரு சின்ன நகைச்சுவை உணர்வே நம்மை அடுத்த நாளை நோக்கி நகர்த்துகிறது.

சிவக்குமாரின் மனிதர்கள் எளிமையானவர்களாக, பாசாங்கற்றவர்களாக, வெள்ளந்தியாக, கொஞ்சம் விவசாயக் கள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருடனும் மிக அருகாமையில் நெருங்கவும், வாஞ்சையாக கைகுலுக்கவும், சில சமயங்களில் சேர்த்தணைத்துக் கொள்ளவும் முடிகிறது.

- கு.கருணாநிதி

உப்புக் கடலைக் குடிக்கும் பூனை

க.சீ.சிவக்குமார்

வெளியீடு

வம்சி புக்ஸ்,

19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை

பேசி : 9444867023 – 9443222997

 

Pin It