மார்கோட் ராபர்ட்டை புதன் கிழமை இரவு அவளது விடுமுறை காலத்தில் சந்தித்தாள். அவள் அந்த நகரத்தின் இதயத்தில் உள்ள மிகப் பிரபலமான சினிமா தியேட்டரில் உள்ள கேண்டியனில் பகுதி நேரப் பணியாளராக பணியாற்றிக் கொண்டே , கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளிடம் வந்து பெரிய பாப்கார்ன் பாக்கெட்டையும் ரெட் வைன் சாக்லெட்டையும் வாங்கிக் கொண்டு போகும் போது அவள் " இது ரொம்ப விசித்திரமான காம்பினேசன். நான் இந்த தியேட்டருக்கு வந்ததில் இருந்து இது போல ஒரு காம்பினேசனில் , அதாவது பாப்கார்னோடு சேர்த்து ரெட் வைன் சாக்லேட்டை யாரும் வாங்கியதில்லை " என்றாள்.

வாடிக்கையாளர்களோடு சேர்ந்து சிறிது நேரம் அரட்டை அடிப்பது அவளது வாடிக்கை தான் . சில நேரம் அது அவளுக்கு நல்ல டிப்ஸைக் கூட பெற்றுத் தந்துள்ளது . இந்த ஆர்ட் ( கலை படங்கள் மட்டுமே வெளியிடப்படும் தியேட்டர் ) தியேட்டருக்கு வந்ததிலிருந்து , அவளுக்கு அவ்வளவாக டிப்ஸ் வருவதில்லை என்பது உண்மை தான் . ஆனால் அவளுக்கு அதெல்லாம் முக்கியமில்லை . இப்படி யாருடனாவது அரட்டை அடிக்க வேண்டும். இல்லையென்றால் இந்த வேலை சலிப்பு தட்டி விடும். இது தவிர வேறு ஒரு காரணமும் இருந்தது . வந்தவன் அழகாய் இருப்பதாக அவள் நினைத்தாள் . அழகாய் என்றால் உடனே அவனோடு சேர்ந்து ஒரு விருந்துக்கு போகின்ற அளவுக்கு அழகில்லை தான் . ஆனால் போரடிக்கின்ற ஒரு கல்லூரி வகுப்பில் அவன் அவளருகே அமர்ந்திருந்தானென்றால் , அவன் மீது கண்டிப்பாக ஓர் ஈர்ப்பு வரும் . அந்த அளவிற்கு அவன் அழகானவன் என்று சொல்லலாம் தான் . அவன் தோற்றத்தைப் பார்த்தால் , கல்லூரிப் படிப்பையெல்லாம் முடித்து விட்டவன் போல இருந்தான். அதாவது இருபதுகளின் மத்தியில் இருக்கும் இளைஞனைப் போல் தோன்றினான். உயரமாக இருந்தான் . அது அவளுக்குப் பிடித்திருந்தது.

சுருட்டி விடப்பட்டிருந்த சட்டைக்கும் கீழே தெரிந்த அவனது முழங்கைப் பகுதியில் பச்சை குத்தியிருந்தான் . அது அவளது பார்வைக்குப் பட்டதுமே அவன் மீது ஒருவிதமான கவர்ச்சியை உருவாக்கி விட்டது . அவன் நல்ல உடல் எடையோடு தான் இருந்தான் . அவனது தாடி கூட சற்று நீண்டு வளர்ந்து கவர்ச்சியாக காட்சி தந்தது. அவனுடைய தோள்புறங்கள் சற்று முன்புறம் வளைந்து போல் இருந்தன. அவன் எதையோ பாதுகாப்பதை போல அவைகள் தோற்றம் தந்தன . அதுவே அவனுக்கு கவசம் போலவும் இருந்தது .

ராபர்ட் அவளுடன் அதிகமாக உரையாடலை நீட்டிக்கவில்லை. ‘ ஓகே " என்ற படி பாக்கெட்டில் மீதி சில்லறையை நிரப்பிக் கொண்டு சீக்கிரம் கிளம்பி விட்டான். அவன் அப்படி அவளை புறக்கணித்துச் சென்றது கூட அவளுக்கு அவன் மீது மேலும் ஈர்ப்பை உண்டு பண்ணி விட்டது என்று சொல்லலாம் .

அவன் அடுத்த வாரமும் அதே தியேட்டருக்கு வந்து , அதே போலவே ஒரு ரெட் வைன் சாக்லேட்டை வாங்கிக் கொண்டு அவளிடம் " இந்த முறை நீங்கள் என்னைக் கேலி செய்ய மாட்டீர்களென்று நம்புகிறேன் " என்றான் . அது அவளுக்கு தர்மசங்கடத்தை உண்டு பண்ணி விட்டது . அவள் தோள்களை குலுக்கிக் கொண்டு " நான் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காகத்தான் இங்கே இருக்கிறேன். அதனால் தான் அன்று அப்படி சொன்னேன் " என்றாள்.

படம் முடிந்த பிறகு அவன் அவளருகில் வந்து கிண்டலாக " வாடிக்கையாளருக்கு உதவும் பெண்ணே ! உன்னுடைய கை பேசி எண்ணை கொடு " என்று கேட்டான். அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது . உடனே அவள் தன்னுடைய கை பேசி எண்ணை கொடுத்து விட்டாள்.

கை பேசி விசயத்தில் மிகவும் புத்திசாலியாக இருந்தான் . அவள் அவனை கவர்வதற்கு கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டியதிருந்தது . அவனிடமிருந்த இன்னொரு விசேசமான விசயத்தையும் கவனித்தாள் . பொதுவாக அவள் செய்தி அனுப்பினால் , உடனே அதற்கு பதிலளித்து விடுவான். மாறாக அவள் மறந்து விட்டாலோ , அல்லது பதிலளிப்பதற்கு சில மணி நேரங்கள் எடுத்துக் கொண்டாலோ , அவன் மிகக்குறுகிய செய்தியொன்றை முதலில் அனுப்புவான். அதில் கேள்விகளே இருக்காது. அதோடு சரி , அதற்குப் பிறகு எதுவும் அனுப்ப மாட்டான் . அது எப்படி இருக்குமென்றால் அவனுடனான உரையாடலை அவள் தான் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது போல இருக்கும். உண்மையில் அது அப்படித்தான் நடந்தது.

சிலநேரங்களில் அவனது செய்திகளுக்கு பதிலளிக்க முடியாத அளவுக்கு அவளது கவனம் திசை திருப்ப்பபட்டிருக்கும். அது ஓரிரு நாட்கள் வரையிலும் கூடதொடரும். அப்பொழுதெல்லாம் அவர்களின் அலைபேசி நட்பு முறிந்ததென்றுதான் அவள் நினைத்துக் கொள்வாள் ஆனால் அந்த நேரம் பார்த்து இணையத்தில் அவர்களது உரையாடலுக்கு உகந்ததாக ஒரு புதியபடம் அவளது கண்ணில் பட்டு விடும் . அவ்வளவு தான் மறுபடியும் அவர்களது செய்தி பரிமாற்றம் தொடர்வதற்கு அதுவே போதுமானதாக ஆகிவிடும்.

இன்னும் அவனைப் பற்றி ஒன்றும் அவளுக்கு முழுமையாக தெரியாது. அவர்கள் இருவரும் தங்களது அந்தரங்கத்தைப் பற்றி அதிகம் பேசிக்கொள்வதில்லை. ஆனால் அவர்கள் இரண்டு மூன்று நகைச்சுவை துணுக்குகளை வரிசையாக சொல்லும் போது , நடனமிடுவது போல , இருவருக்கும் இடையே ஒருகொண்டாட்டமான மனநிலை வந்துவிடும்.

ஒருநாள் இரவு அவள்தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தபோது , உணவுக்கூடமெல்லாம் அடைத்து விட்டதாகவும் , அவளது பிரத்யேகமான நொறுக்குத்தீனி வகைகளை அவளது அறைத் தோழி வேட்டையாடி விட்டதாகவும் அவனுக்குச் செய்தி அனுப்பினாள் . பதிலுக்கு அவன் ரெட்வைன்ஸ் சாக்லேட் வாங்கித் தருவாக உறுதியளித்தான்.

முதலில் அவள் இதை இன்னொரு நகைச்சுவை என்று நினைத்து தான் கடந்துசென்றாள். ஆனால் அவன் “ நான் நிஜமாகத்தான் சொல்கிறேன். உன்னையே முட்டாளாக்கி கொள்ளாதே உடனே கிளம்பிவா “ என்று செய்தி அனுப்பினான். உடனே அவள் தனது பைஜாமாமீது ஒரு ஜாக்ட்டை எடுத்துப்போட்டுக் கொண்டு , ஏழு முதல் பதினொன்று வரை என்ற பெயர் கொண்ட மாலுக்குச் சென்று அவனை சந்தித்தாள் . அப்போது நேரம் இரவு பதினொரு மணியாகிருந்தது .

அவன் தினம் தினமும் சந்திப்பது போலவே எந்த பந்தாவுமில்லாமல் அவளை வரவேற்று , சில தின்பண்டங்கள் வாங்கித் தருவதற்காக ஷாப்பிங் மாலுக்குள்ளே அழைத்துச் சென்றான். ஆனால் அங்கே ரெட்வைன்ஸ் சாக்லேட் இல்லை. அதனால் அவளுக்கு செர்ரிகோக் குளிர் பானமும் , டொரிடோஸ் சிப்சும் , தவளை வடிவம் கொண்ட சிகரெட்டுடன் கூடிய லைட்டர் ஒன்றையும் வாங்கி பரிசளித்தான்.

கிளம்பும் போது ’பரிசுக்கு நன்றி "என்று அவள் சொன்னாள். அவர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். ராபர்ட் காது வரையிலும் நீண்ட முயல் ரோமத் தொப்பியும் , தடித்த பழைய மோஸ்தரிலான ஜாக்கெட்டும் அணிந்திருந்தான்., அது இன்னும் கொஞ்சம் அழுத்தமான வண்ணத்திலிருந்திருந்தால் இவனுக்கு மிகவும் எடுப்பாக இருந்திருக்குமென்று அவள் நினைத்தாள். அவனது தொப்பி அவனை இன்னும் கொஞ்சம் உயரமாக்கியது போல் தெரிந்தது .அது போலவே அவனது அடர்த்தியான கோட் அவனது வயிற்றையும் இலேசாக முன் நோக்கி சாய்ந்திருந்த அவனது தோள்களையும் கச்சிதமாக மறைத்திருந்தது .

அவளை விட்டு விட்டு , கிளம்பும் போது “ மீண்டும் வருக கேண்டின் பெண்ணே “ என்றான் அவன் . இவ்வளவுக்கும் அவனுக்கு அவளது பெயர் நன்றாகவே தெரியும் தான் . பிறகு அவளை நெருங்கி வந்தான் . முத்தமிடத்தான் போகிறான் என்று அவள் உதட்டைக் குவித்துக் கொண்டு தயாராக காத்திருந்தாள் .ஆனால் அவன் அருகே வந்து , அவளை பொக்கிஷம் போல கைகளில் ஏந்தி , முன் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு " என் இனிய இதயமே முதலில் நன்றாகப் படி , பிறகு உன்னை வந்து நான் பார்க்கிறேன் " என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் .

அவளது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்லும்போது , ​​அவள் ஒரு பிரகாச ஒளியால் நிரம்பியிருப்பதாக நினைத்தாள். அவன் மீதான ஒரு ஆரம்ப ஈர்ப்பின் அறிகுறியாக அதை அவள் உணர்ந்தாள் .

அவள் செமஸ்டர் விடுமுறையில் வீட்டிற்கு சென்ற போது , ஓய்வு ஒழிச்சலின்றி இருவரும் கை பேசியில் செய்திகளை பரிமாறிக் கொண்டேயிருந்தார்கள். வெறும் நகைச்சுவை துணுக்குகள் மட்டும் இப்போது அவர்களின் செய்தியில் இடம் பெறவில்லை . அதையும் தாண்டி வெகுதூரம் முன்னேறியிருந்தார்கள் . காலை வணக்கம் . இரவு வணக்கமெல்லாம் இப்போது சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். அவள் அவனை ஒரு கேள்வி கேட்பாள். அவன் உடனே அதற்கு பதில் அளிக்காவிட்டால் வெகுவாக கவலைப்பட்டாள்.

அவன் இரண்டு பூனைகள் வளர்ப்பதாக ஒரு நாள் தெரிந்து கொண்டாள். ஒன்று “ மு “ மற்றொன்று “ யான் “ அவைகள் இரண்டும் சேர்ந்து அவன் வீட்டில் களேபரமான காட்சிகளை உண்டு பண்ணும் என்று சொல்லியிருந்தான் . அவளிடமும் பிட்டா என்ற ஒரு சின்னஞ்சிறு பூனை இருந்தது . அது அவனது யானிற்கு இப்போது நட்பாகி விட்டது. ஊர் வம்பு கதைகளையெல்லாம் செய்திகளாக அதற்கு அது அனுப்பும் . இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மார்கோட்டின் வளர்ப்புத் தந்தை " ஏன் எப்போது பார்த்தாலும் செய்தி அனுபப்பிக் கொண்டேயிருக்கிறாய்? யாருடனாவது காதலில் உள்ளாயா? ’’ என்று கேட்டார்.

" ஆமா அவர் பெயர் ராபர்ட் அவரை நான் ஒரு சினிமா தியேட்டரில் சந்தித்தேன். நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம் " என்றாள்.

" ஹும் ம்.. அவனிடம் நாங்கள் சில கேள்விகள் கேட்க வேண்டும் வரச் சொல்லு " என்றார் அவர் .

‘ என்னுடைய பெற்றோர்கள் உன்னை விசாரித்தார்கள் என்று செய்தியனுப்பினாள் . பதிலுக்கு அவன் சிரிக்கின்ற ஒரு எமோஜியை அனுப்பி வைத்தான். அதில் பொம்மையின் கண்கள் இதயமாக இருந்தன.

மார்கோட் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்பி வந்த போது உடனடியாக அவனை காண வேண்டுமென்று நினைத்தாள் . ஆனால் அவன் கண்ணிலேயே தட்டுப் படவில்லை. ’ சாரி இந்த வாரம் வேலையில் ரொம்ப பிஸியா இருக்கிறேன் , ஆனா சீக்கிரமாக உன்னை வந்து பார்க்கிறேன் ’ என்று செய்தி அனுப்பினான். மார்கோட்டிற்கு இது பிடிக்கவில்லை. ஒரு வேளை அவனுடைய கவனம் அவளை விட்டு சென்று விட்டது என்று நினைத்து கவலை கொண்டாள். அனால் அவன் அடுத்த ஒரு குறுஞ்செய்தி அனுப்பி , அவளை ஒரு திரைப்படத்திற்கு அழைத்த போது , உடனடியாக ஒத்துக் கொண்டாள் .

 அவள் வேலைபார்க்கும் ஆர்ட் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு தான் முதலில் அவளை கூப்பிட்டான். ஆனால் அவள் நகரத்தை விட்டு சற்று தள்ளியிருக்கும் பெரிய மல்டிபிளக்ஸ் வணிக தியேட்ருக்கு செல்லலாம் என்று யோசனை தெரிவித்ததாள். அங்கே மாணவர்கள் யாரும் செல்வதில்லை என்பது ஒரு காரணம். அங்கே செல்வதென்றால் காரில் தான் செல்ல வேண்டும் என்பது இன்னொரு காரணம்.

ராபர்ட் அவளை அழைத்துச் செல்ல சாம்பல் நிற சிவிக் காரில் வந்திருந்தான். காரெங்கும் சாக்லெட் கப்பிலிருந்த உறைகள் சிதறிக் கிடந்தன. காரை ஓட்டிச் செல்லும் போது அவன் அவளைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஐந்து நிமிடங்கள் கடப்பதற்குள்ளாகவே , அந்தச் சூழல் அவளைப் பயமுறுத ஆரம்பித்து விட்டது. அந்தக் கார் ஹைவே சாலையில் சத்தமில்லாமல் வழுக்கி கொண்டு சென்றது. ஆனால் அவளுக்குள் தான் ஏதேதோ அசாத்தியமான கற்பனைகள் முளைத்தெழுந்த வண்ணமிருந்தன.

அவன் அவளை யாருமற்ற இடத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கே சென்றதும் , அவளைக் கற்பழித்து கொன்று விடுகிறான். இது யாருக்கும் , எதுவும் தெரியப் போவதில்லை , உண்மை தான் அவன் யாரென்று அவளுக்கே கூட இன்னும் முழுமையாகத் தெரியாதே !.

அவள் இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே , அவளது மனதைப் படித்து விட்டது போல அவன் சொன்னான் . “கவலைப் படாதே நான் உன்னை கொலை செய்யப் போவதில்லை ” அவளுக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது . அவனுக்கு எப்படி இவள் நினைப்பதெல்லாம் தெரிந்தது .? அவள் அசௌகரியமாக பட படப்பாக , கொலை செய்யப்படப் போகிறவள் போல நடுக்கத்துடன் காரில் பயணிப்பதை அவன் பார்த்திருக்கிறான் . அதனால் தான் அப்படி கேட்டிருக்கிறான் . அவளுக்கு இப்போது சிரிப்பு வந்து விட்டது . அவள் அவனோடு ஒரு டேட்டிங் போகிறாளா? அல்லது கொலை செய்யப்பட போகிறாளா?

" ஒகே நீங்கள் என்னை கொலை செய்ய விரும்பினால் தாராளமாக கொல்லலாம் ’ என்றாள் . அவன் சிரித்துக் கொண்டே அவளது முழங்காலில் தட்டினான். சிறிது நேரம் கல கலப்பாக இருந்தது. அதற்குப் பிறகு மறுபடியும் அவன் இறுக்கமான அமைதியிலேயே தான் இருந்தான். அவனோடு ஒரு நல்ல உரையாடலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவளும் ஏதேதோ தத்துப் பித்தென்று உளறிப் பார்த்தாள். ம்ஹும் எதனாலும் அவன் அமைதியை அசைக்க முடியவில்லை .

தியேட்டரில் சலுகை ஸ்டேன்ட் கேஷியரிடம் , அவன் ரெட் வைன்ஸ் சாக்லெட்டைப் பற்றி தட்டையாக ஒரு ஜோக் அடித்த போது , அது அங்கிருந்த எல்லோரையும் சிரிக்க வைப்பதற்கு பதிலாக பயமுறுத்தியது . குறிப்பாக மார்கோட்டைத் தான் அதிகமாக பயமுறுத்தியது.

படம் பார்க்கும் போது அவன் அவளது கைகளை தீண்டக்கூட இல்லை. தோளை சுற்றி அவனது கைகளை பரப்பி அணைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அப்படியும் அவன் நடந்து கொள்ளவில்லை . படம் முடிந்து கார் பார்க்கிங்கிற்கு வந்து சேர்ந்த போது அவளை அவன் விரும்பவில்லை என்பது உறுதியாகத் தெரிந்து விட்டது . அவள் லெக்கின்ஸும் மேலே உடலின் மேற்பாதியில் அணிந்து கொள்ளும் நீண்ட கைப்பகுதி உடைய வெது வெதுப்பான பருத்தி ஆடை சட்டையையும் அணிந்திருந்தாள். அதுகூட அவன் அவளை தொடாதற்கு ஒருகாரணமாக இருக்கலாம். அவள் காருக்குள் ஏறி அமர்ந்த போது அவன் “ மகிழ்சி நீ எனக்குப் பிடித்த உடை அணிந்திருக்கிறாய் “ என்றான். அவள் அதை முதலில் ஒருஜோக் என்றுதான் நினைத்தாள். உண்மையிலே அவனுடைனான இந்த டேட்டிங்கை அவள் சிரத்தையாக எடுத்துக் கொள்ளவில்லையோ என்று வருத்தமாக இருந்தது“ அவளுக்கு . அவன் அவளால் நிச்சயமாக காயம்பட்டிருக்க கூடும் . அவன் காக்கிபேண்டும் கழுத்துக் கீழே பட்டன் வைத்த சட்டையும் அணிந்திருந்தான் .

“ சரி நீ கொஞ்சம் மதுபானம் அருந்துகிறாயா “ என்று கேட்டான். அந்த இடத்தில் அவன் கேட்ட தொனி அவளுக்கு வித்தியாசமாக இருந்தது . அப்படி கேட்பது அவனுடைய கடமை போலவும் , அதற்கு அவள் வேண்டாம் என்று மறுக்க வேண்டும் என்பது போலவும் இருந்தது . அவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். மறுபடியும் அமைதியானான். “சரி வேண்டாம் என்கிறாயா? “ என்று கேட்டு விட்டு சிரித்தான் . அவர்கள் இருவரும் காருக்கு சென்றபோது அவளுக்குள் தாங்க முடியாத துயரம் பொங்கியது .

அவன் மீது அவளுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. அவனோடு நிறைய பேசிப் பழக வேண்டுமென்று அவள் நினைத்திருந்தாள். அந்த எதிர்பார்ப்பு அவ்வளவு சீக்கிரம் உடைந்து போவதை அவள் விரும்பவில்லை. இந்த உறவு இவ்வளவு சீக்கிரம் முடிந்து போவது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்குமென்று அவள் நினைத்தாள்.

நீ விரும்பினால் செல்லலாம்’ என்றான் அவன் .

“நீ விரும்பினால்” என்ற பதில் அவளுக்குப் பிடிக்கவில்லை. சட்டென்று அமைதியானாள். அவன் அவள் காலைத்தட்டி “ஏன் சட்டுன்னு அமைதியாயிட்ட? ‘ என்றுகேட்டான். ‘ நான் ஒன்னும் சட்டுன்னு அமைதியாகலை .எனக்கு கொஞ்சம் களைப்பா இருக்குது ‘ என்றாள்

“நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகவா?”

“ இல்லை இது போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு நான் கொஞ்சம் மது அருந்துவேன் " என்றாள் அவள் . அந்த திரைப்படம் நகரின் பிரதான தியேட்டரில் தான் ஒடுகிறது என்றாலும் ரசிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. .அது மன உளைச்சலை உண்டு பண்ணும் படுகொலைகளைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி தொடர் போன்ற வடிவத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் . உண்மையிலேயே அது அவளது பொறுமையை சோதித்து விட்டது . முதன் முதலாக டேட்டிங் போகும் போது இப்படிப்பட்ட படத்தையா பார்ப்பார்கள் என்று அவள் நொந்து கொண்டாள் . அவன் அந்தப் படத்தை முன் பதிவு செய்து விட்டு அவளிடம் தகவல் சொன்னபோதே , அவள் மறுத்தாள். அவளை ஒரு ஹோலோகாஸ்ட் திரைப்படத்திற்கு ( நாஜிக்கள் நிகழ்த்தும் யூத இன அழிப்பை பற்றிய திரைப்படம் ) அழைத்தது , அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கலைப்படங்கள் திரையிடப்படும் ஒரு தியேட்டரில் பணியாற்றும் ஒரு இளம் பெண்ணை ஈர்ப்பதற்காக , இது போன்ற ஒரு திரைப்படத்திற்கு அழைக்கும் அவனது ரசனை மீது அவளுக்கு சந்தேகம் கூட வந்தது. அவன் என்ன மாதிரியான ஆள் என்று அவளால் அனுமானிக்க முடியவில்லை .

அவள் ஒரு ஜாலியான படத்தைப் பார்ப்பது பற்றி அவனுக்கு செய்தி அனுப்பியது உண்மையில் அவனை காயப்படுத்தியிருக்க வேண்டும். அவளது நடத்தையைப் பற்றி சற்று கலவரப்படுத்தியிருக்கவும் வேண்டும்.

இந்த சாத்தியமான பாதிப்பை பற்றிய எண்ணம் அவள் மனதில் தோன்றியவுடன் , அவன் மீது அந்த இரவில் அவளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பரிவு உண்டானது.

அவன் அவளை எங்கே சென்று மது அருந்த விரும்புகிறாள் என்று கேட்டபோது , ​​அவள் வழக்கமாகச் செல்லும் இடத்தின் பெயரைச் சொன்னாள் , ஆனால் அவன் முகம் சுளித்து , அந்த பார் மாணவர் குடியிருப்பில் இருப்பதாகவும், அவளை வேறு ஒரு நல்ல இடத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினான் . பிறகு அவளை இது வரையிலும் செல்லாத ஒரு பாருக்கு அழைத்துச் சென்றான். அது சுரங்கப்பாதை போல தரைத்தளத்திற்கும் கீழாக அமைந்திருந்தது . உள்ளே செல்வதற்கு வரிசையில் நின்று காத்திருந்து தான் செல்ல வேண்டுமாம் .

இப்படி பாரில் .காத்திருக்கும் போது ஏனோ அவளுக்கு அசூசையாக இருந்தது . அவள் அவனிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தாளோ , எப்படி அதை அழகான வாக்கியங்களில் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தாளோ , அப்படி கடைசி வரையிலும் சொல்ல முடியவில்லை . அந்த வாக்கியங்களை மறுபடியும் ஒரு முறை மனதிற்குள் ஓட விட்டாள் . மது பான வாயிற் காப்பாளன் அவளது அடையாள அட்டையை கேட்ட போது , அவள் அந்த நினைப்பிலேயே இருந்ததால் , அலட்சியமாக அவளது அடையாள கல்லூரி அட்டையை எடுத்து நீட்டினாள். அதை வாங்கிப் பார்த்தவுடன் , அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே ‘ இல்லை உனக்கு அனுமதி இல்லை ‘ என்று சொல்லி , அவளை கிளம்பச் சொல்லி பக்கவாட்டுப் பாதையைப் பார்த்து கைகாட்டினான் . அவள் கிளம்புவதற்கும் முன்பே அடுத்த கும்பலை முன்னால் வரச் சொல்லி அவளை வெறுப்பேற்றினான் .

இங்கே இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போது , இது எதைப் பற்றியும் கவனிக்காமல் ராபர்ட் முன்னால் சென்று கொண்டிருந்தான். அவள் ‘ ராபர்ட் ‘ என்று அழைத்தது , அவன் காதிலேயே விழவில்லை. அவனுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த ஒருவர் தான் , அவனது தோளை தட்டி அவள் கூப்பிடுவதாக சொன்னார். இவள் அங்கேயே நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் , அவன் மறுபடியும் அவளிடம் திரும்பி வந்தான். அவளுக்கு அவமானமாக இருந்தது. " மன்னிக்கவும் இது எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கிறது " என்றாள்.

" உனக்கு எத்தனை வயதாகிறது " என்று கேட்டான்.

" இருபது "

" நீ கொஞ்சம் வயதானவள் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம் " என்றான் சிரித்துக் கொண்டே . அவள் ’ இல்லை ’ என்று சொன்னாள் .

 "ஆனா நீ அப்படித் தான் சொன்ன , எனக்கு ஞாபகம் இருக்குது ,, அப்புறம் இடையில படிக்காத அந்த ஒரு வருட இடைவெளி அதையும் இதுல சேர்க்கனும்ல " என்று , அவள் ஏதோ தவறு செய்தது போல அவன் பேசிக்கொண்டே சென்றான். இந்த விவாதத்தில் வெற்றி பெற்றது போல நினைத்துக் கொண்டு முகத்தில் பெருமிதம் காட்டினான்.

‘ நான் என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலை ‘ குரலில் கொஞ்சம் கூட உற்சாகமில்லை அவளிடம். ‘ ஆனா எனக்கு இருபது வயது தான் " என்றாள். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் கண்ணீர் முத்துக்கள் அவள் கன்னங்களில் ஏராளமாக உருண்டோடின. அவள் நினைத்தது எதுவுமே உருப்படியாக நடக்கவில்லை என்று நினைத்த போது துக்கம் , அவளுக்கு தொண்டையை அடைத்தது . எனக்கு மட்டும் ஏன் எல்லாமே மோசமாக நடக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

 அவள் முகம் சுருங்கி வருவதைக் கண்டதும், ராபர்ட்டிடம் ஒருவித மாயாஜாலம் நிகழ்ந்தது. அவனிடம் இருந்த பதற்றம் எல்லாம் உடனே வெளியேறிப் போனது . அவன் நேராக நின்று தன் கரடி போன்ற கைகளால் அவளைச் சுற்றி வளைத்துப் பிடித்தான். “ஓ , அன்பே ! , அவன் சொன்னான். “ஓ, அன்பே , சரி, பரவாயில்லை .இதற்காக நீ இப்படி அழவேண்டியதில்லை ‘ இதை சொல்லி விட்டு அவன் அவளை மறுபடியும் அணைத்துக் கொண்டான்.

அவள் தன்னை அவனுடன் இறுக்கமாகச் சேர்த்துக் கட்டிக் கொண்டாள், மாலுக்கு வெளியே அவள் கொண்டிருந்த அதே உணர்வு மீண்டும் அவளிடம் வந்து நிறைந்தது . அவள் ஒரு மென்மையான , விலைமதிப்பற்ற பொருள் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால் அதை அவன் உடைத்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு இருந்தது . அவன் அவள் தலையின் மேல் முத்தமிட்டான், அவள் சிரித்துக்கொண்டே தன் கண்ணீரைத் துடைத்தாள்.

"நான் ஒரு பாரில் அனுமதிக்கப்படாததால் அழுகிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை," என்று அவள் சொன்னாள். " நான் ஒரு முட்டாள் என்று நீங்கள் நினைக்க வேண்டும்." என்றாள் . ஆனால் அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த விதத்திலிருந்து , அப்படி நினைக்கவில்லை என்பது தெரிந்தது., தெருவிளக்கின் சுண்ணாம்பு போன்ற ஒளியில் , அவளது கண்களிலிருந்து சில பனித் துகள்கள் கீழே விழுந்தன. அந்த நிலையில் , அவன் கண்களில் விழும் அவளது பிம்பத்திலிருந்து அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், எவ்வளவு அழகாக சிரிக்கிறாள் என்பது அவளுக்கே தெரிந்தது. அவள் மகிழ்சியுற்றாள்.

அவன் அவள் உதடுகளில் முத்தமிட்டான் . அது உண்மைதான் . அவன் அவளைத் தேடி ஒருவிதமான மூச்சிரைக்கும் அசைவில் வந்து , கிட்டத்தட்ட தன் நாக்கை முழுவதுமாக அவள் தொண்டைக்குள் நுழைத்தான். அது ஒரு பயங்கரமான முத்தம் . அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மோசமானது . ஒரு வளர்ந்த ஆண் முத்தமிடுவதில் இவ்வளவு மோசமானவனாக இருக்க முடியும் என்பதை நம்புவதற்கு மார்கோட் மிகுந்த சிரமப்பட்டாள்.

அது அவ்வளவு மோசமாகத் தோன்றியது , ஆனாலும் எப்படியோ அவளுக்கு மீண்டும் அவன் மீது அந்த மென்மையான உணர்வு திரும்பவும் வந்தது . அவன் அவளை விட வயதானவனாக இருந்தாலும் , அவனுக்குத் தெரியாத ஒன்றை அவள் அறிந்திருக்கிறாள் என்ற உணர்வு அவளுக்குள் ஏனோ எழுந்தது.

அவளை முத்தமிட்டதும், அவன் அவள் கையை உறுதியாகப் பிடித்து வேறொரு பாருக்கு அழைத்துச் சென்றான். அங்கே தரையில் டேபிள்களும், பின்பால் இயந்திரங்களும், ( விளையாட்டு மேசைகள் ) நிறைய இருந்தன. தரையெங்கும் மரத்துகள்கள் ஏராளமாகச் சிதறிக் கிடந்தன . வாசலில் யாரும் அடையாள அட்டைகளை சரிபார்க்கவில்லை. ஒரு அறையில் , அவள் தனது ஆங்கில டி.ஏ. யில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்த பட்டதாரி மாணவியைப் பார்த்தாள்.

வோட்கா சோடா ஆர்டர் பண்ணி விடவா? என்று அவன் கேட்டான். கல்லூரி மாணவிகள் இந்த சோடாவை குடித்து விட்டுத்தான் பெரிய பெரிய போதை ரகங்களை காலி செய்தது போல பாவனை செய்வார்கள் என்று ஏற்கனவே ஒரு ஜோக் ஒடிக் கொண்டிருக்கிறது. அவள் இது வரை ஓட்கா சோடாவையெல்லாம் தொட்டதில்லை. உண்மையிலேலே அவளுக்கு இப்போது என்ன ஆர்டர் பண்ணுவதென்று குழப்பமாக இருந்தது.

அவள் சென்ற இடங்களிலெல்லாம் , பாரில் உள்ளவர்களுக்கு மட்டுமே அட்டைகள் வழங்கப்பட்டன . அதனால் இருபத்தொரு வயது பூர்த்தியானவர்கள் அல்லது நல்ல போலி ஐடிகள் வைத்திருந்த மாணவர்கள் பொதுவாக பி.பி.ஆர், அல்லது பட் லைட்டின் பீர்களை காலி செய்து விட்டு, அதன் இலச்சினைகளை எடுத்துக் கொண்டு வந்து மற்றவர்களிடம் சொல்லி கெத்து காட்டுவார்கள். அந்த பிராண்டுகளை சொல்லிக் காட்டி , ராபர்ட் கேலி செய்வானா என்று அவளுக்குத் தெரியவில்லை, எனவே, அவள் அவனுக்குப் பதிலாக, "நான் ஒரு பீர் குடிக்கிறேன்" என்று சொல்லி வைத்தாள்.

அவனது கண்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மதுபானம் , பின்னால் காத்திருக்கும் முத்தம் , மேலும் சற்று நேரத்திற்கு முன்னால் அவள் அழுதது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவனுக்குள் ஒரு இனம் புரியாத ஆனந்தத்தை தந்திருந்தது. ஆள் மறுபடியும் கல கலப்பாகத் தோன்றினான். இப்படி இவனைப் பார்ப்பது தான் அவளுக்கும் பிடித்திருந்தது. ஆரம்ப காலங்களில் அவன் அவளுக்கு அறிமுகமான போது இப்படி கல கலப்பான நகைச்சுவை செய்திகளைத்தான் அனுப்பிக் கொண்டிருந்தான்.

அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது அவளுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. தான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு பதட்டத்திலும் குழப்பத்திலும் கிறுக்குத் தனமாக அழுது வைத்து விட்டோம் என்று கூட அவள் நினைத்தாள். சுருக்கமாக அவளுக்கு அன்றைய பொழுது சரியாக அமையவில்லையென்றும் நினைத்துக் கொண்டாள்.

அவன் மீண்டும் அவள் அந்த திரைப் படத்தை ஆரம்பத்தில் நிராகரித்ததைப் பற்றியே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான், அவளைப் பார்த்துக் கொண்டே அவளைப் போலவே நடித்துக் காட்டிக் கொண்டிருந்தான் . அதே நேரத்தில் அவள் எப்படிப் பதிலளிக்கிறாள் என்பதையும் அவள் முக பாவங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் கூட உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதானிருந்தான்

அவளுடைய உயர் ரக ரசனையைப் பற்றிக் கூட கிண்டல் செய்தான் . அவள் சினிமாவில் ஒரே ஒரு கோடைக்கால வகுப்பை மட்டுமே முடித்திருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும் . இந்த அளவுக்கு ஒரு சிற்றறிவை வைத்துக் கொண்டு , உலகத் திரைப்படங்களின் ரசனையைப் பற்றி அவள் எத்தனை வகுப்புகள் அவனுக்கு எடுத்திருக்கிறாள் என்று கேலி செய்தான். அது மட்டுமல்ல அவள் பேசுவதையெல்லாம் எவ்வளவோ பொறுமையாகக் கேட்டும் கூட , அவளைக் கவர்வது எவ்வளவு கடினமாக இருந்தது என்றும் சொன்னான் .அவளும் கலை தியேட்டரில் உள்ள மற்ற ஊழியர்களும், வட்டமாக அமர்ந்து கொண்டு வணிக படங்கள் ஓடும் தியேட்டர்களுக்குச் செல்லும் மக்களைப் பற்றி எவ்வாறு கேலி செய்து பேசினார்கள் என்பதையும் அவன் நகைச்சுவையாகக் கூறினான், அங்கு அவர்கள் மது கூட பரிமாறவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா என்று கேட்டு விட்டு சிரித்தான். , ஐ மாக்ஸ் 3 டி தியேட்டரையும் கூட அவன் விட்டு வைக்கவில்லை.

மார்கோட் அவன் சொல்லும் இந்த கற்பனையான நகைச்சுவையை கேட்டு , ரசித்து சிரிப்பது போல சும்மாவும் சிரித்து வைத்தாள் . ஆனால் அவன் சொல்வது எதுவுமே உண்மையில்லையயென்று அவள் மனதுக்கு தெரியும் .

 அவள் வேறு தியேட்டருக்கு சென்று அந்தப் படத்தை பார்க்கலாம் என்று தான் சொன்னாள். அவன் தான் அதை தவறாகப் புரிந்து கொண்டான் . அவள் வேலை பார்க்கும் தியேட்டரிலேயே அவனோடு டேட்டிங் வேண்டாமென்று நினைத்து தான் அவள் அவ்வாறு கூறினாள். ஆனால் அவன் அதனால் நன்றாக காயப்பட்டிருக்கிறானென்று இப்போது தான் தெரிகிறது . அவனோடு சேர்ந்து அவள் வேலை பார்க்கும் தியேட்டருக்கு செல்வதற்கு அவள் மிகுந்த வெட்கப்படுவதாக அவனாகவே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பது புரிந்தது .

இப்போது தான் அவள் அவனைப் புரிந்து கொண்டதாக நினைக்க ஆரம்பித்தாள். அவன் தான் எவ்வளவு எளிதாக உணர்ச்சி வசப்படும் மனிதனாக இருக்கிறான் ! . இப்படிப் பட்டவனை யாராலும் எளிதாக காயப்படுத்தி விட முடியும். இவனை எளிதாக காயப்படுத்தி விட முடியுமென்பது தெரிந்ததால் , எளிதாக சரிப்படுத்தி விடவும் முடியுமென்று நம்பினாள். இவனை சகஜ நிலைக்கு கொண்டு வர , தான் என்ன செய்ய வேண்டுமென்பது அவளுக்கு இப்போது நன்றாகவே தெரிந்திருந்தது. அவள் அவனுக்கு விருப்பமான திரைப்படங்களைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டாள்.

கலை தியேட்டரில் அவள் பார்த்தும் புரிந்து கொள்ள முடியாத நிறைய கலைப்படங்களைப் பற்றி அவள் ஏராளமாகப் பேசினாள். அந்தப் படங்கள் அவளுக்கு மிகுந்த சலிப்பை தருபவைகள். எத்தனை முறை பார்த்தாலும் புரியாதவை . அவளுடன் பணியாற்றிய சீனியர்கள் அவளை சிறிதும் ரசனையற்றவள் என்றும் , ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டு அது எப்படியிருக்கிறதென்று சொந்தக் கருத்து எதுவும் சொல்ல முடியாதவள் என்றும் எவ்வாறெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள் என்றும் பரிதாபமாக அவனிடம் சொன்னாள். அதற்கு உடனடியாக பலன் இருந்தது. ராபர்ட் அசட்டுத்தனமாக புன்னகைத்தான். ஒரு காட்டு விலங்கை, அதாவது குதிரையையோ , கரடியையோ வசக்கி , அதற்கு தன் கையினால் உணவு ஊட்டுவது போல , அவள் அவனை மெல்ல வசப்படுத்தினாள்

மூன்றாவது பீர் குடிக்கும் நேரத்தில் , ராபர்ட்டுடன் உடலுறவு கொள்வது எப்படி இருக்கும் என்று அவள் யோசித்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை அது அந்த மோசமான முத்தத்தைப் போலவே , விகாரமாகவும், அதிகமாகவும் இருக்க கூடும்., ஆனால் அவன் எவ்வளவு உற்சாகமாக இருப்பான், எவ்வளவு ஆர்வமாக, அவளை ஈர்க்க பிரயத்தனப்படுவான் என்பதை கற்பனை செய்து பார்க்கும்போது, ​​அவள் அடி வயிற்றில் ஒரு குறுகுறுப்பை உணரமுடிந்தது . அது ஆனந்தமாகவும் வலி நிறைந்ததாகவும் இருந்தது . கடைசியில் அந்த இச்சை அவளுடைய தோலில் எலாஸ்டிக் பட்டையைப் போல விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டது

அவர்கள் அடுத்த ரவுண்டை முடித்திருந்த போது அவள் தைரியமாக " வெளியே செல்லலாமா? ’’ என்று கேட்டாள் உடனே பாதி டேட்டிங்கிலேயே தன்னை விட்டுப் பிரியப் போகிறாள் என்று அவன் தவறாக நினைத்துக் கொண்டான். அவள் அவனது எண்ணத்தை புரிந்து கொண்டவளாக , அவனது கைகளைப்பிடித்து மேலே தூக்கினாள். அவன் உடனடியாக அவளைப் பின் தொடர்ந்தான். அவர்கள் இருவரும் பாரை விட்டு வெளியே வந்தார்கள்.

இப்போது அவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது உள்ளங்கை அவளது உள்ளங்கைக்கும் கீழே மிகவும் மிருதுவாக இருந்தது. வெளியில் வந்ததும் , அவள் மீண்டும் அவனுக்கு முத்தமிடும் வாய்ப்பை வழங்கினாள். அவன் உதட்டில் ஒரு முத்தத்தோடு நிறுத்திக் கொண்டான். " நீ நிறைய குடித்திருக்கிறாய் " என்றான் குற்றம் சாட்டும் விதமாக. அவள் இல்லையென்றாள். ஆனால் அவள் நிறையத்தான் குடித்திருந்தாள். வேண்டுமென்றே தன் உடலை அவனது உடலோடு சேர்த்து அழுத்தினாள். அப்போது தன்னை மிகவும் சிறிய உயிரினமாக அவள் உணர்ந்தாள். அவன் உடனடியாக மிகப் பெரிய பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான் . அவள் மிகப் பிரகாசமானவளாகவும் அவளை நெருங்குவது வேதனையானது என்பது போலவும் அவனது பெரு மூச்சு இருந்தது. அதே நேரம் தனக்குள் பால் இச்சை ஊறுவதாக அவன் உணர்ந்தான். அதை இனி தவிர்கவே முடியாது என்பதும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

‘ நான் உன்னை என் வீட்டிற்கு தூக்கிச் செல்கிறேன் மெல்லியளே “ என்று அவளை அணைத்த படி காருக்கு அழைத்துச் சென்றான். காருக்குள் சென்றதும் அவன் மீது அவள் நன்றாக சாய்ந்து கொண்டாள். அவன் மீண்டும் தன் நாவை அவளது தொண்டைக்குழி வரைக்கும் இறக்கி முத்தமிட்டான் , அவள் அவனிடமிருந்து தன்னை இலேசாக விலக்கி கொண்டாள். அவன் தன்னை பூப்போல மென்மையாக முத்தமிட வேண்டுமென்று அவள் நினைத்தாள். அது முடியாத போது , அவனை இறுக்கமாகத் தழுவிக் கொண்டாள். பேண்டுக்குள் அவனது ஆண்குறி விரைப்புத்தன்மை அடைந்திருப்பதை அவளால் இப்போது உணர முடிந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் இன்ப வேதனையில் ஒரு அருவெறுப்பான முனங்கைகலை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தான். அது அவளை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியது . அந்த அனர்த்ததை மட்டும் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் விலக முயற்சிக்கும் போதே அவன் அவளை தள்ளி விட்டு , காருக்குள் சாவியை கொடுத்து உயிர்ப்பித்தான்.

சற்று தாமதித்து , முன் சீட்டிலேயே டீன்ஏஜ் வாலிபர்கள் போல செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டான் . அவன் குரலில் கேலி தொனித்தது . “ நான் கூட இதற்கெல்லாம் நீ ரொம்ப சின்னப்பெண் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் உனக்கும் இருபது வயதாகிவிட்டது பரவாயில்லை.” என்று சொன்னான்

அவள் தனது நாக்கை வெளியே நீட்டி “அப்படியென்றால் எங்கே போகலாமென்று நினைக்கிறாய்?” என்றுகேட்டாள்.

உன்னுடைய அறைக்குப்போகலாமா?”

“ஊஹும் அங்க செட்ஆகாது . என்னோட ரூம்மேட் அங்க இருப்பா”

“ஓ நீ தான் விடுதியில தங்கியிருக்கிறியே ” என்று குற்றம் சாட்டும் தொனியில் கூறினான்.

“நீ எங்க இருக்கிற?” என்று அவள் கேட்டாள்

“நான் ஒரு வீட்ல தான் வசிக்கிறேன்?”

“நான் அங்கே ….. வரலாமா?”

“தாராளமா.”

அந்த வீடு விடுதி வளாகத்தில் இருந்து வெகு தொலைவில் இல்லை . மரங்களடர்ந்த பகுதியில் அமைந்த நல்ல அழகான வீடு அது . வாசலை வெள்ளொளி சிந்தும் அழகான வெண்மையான விளக்குகள் அலங்கரித்தன. காரிலிருந்து இறங்குவதற்கும் முன்பாக சற்று கனமான எச்சரிக்கையான குரலில் அவன் சொன்னான்.“என்னிடம் பூனைகள் உள்ளன என்பது உனக்குத் தெரியுந்தானே? ”

“ஓ தெரியுமே , “ ஏற்கனவே நாம் செய்திகளில் பரிமாறிக் கொண்டிருக்கிறோமே , ஞாபகமில்லையா?”

முன் வாசலில் பூட்டில் சாவியை விட்டு அவன் நீண்ட நேரம் துழாவிக் கொண்டிருந்தான் . மேல் மூச்சு வாங்கியது அது அவளை வெகுவாக ஆயாசமடையச் செய்தது. அவள் அவன் முதுகை தடவி விட்டாள். அது அவனை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் பதற்றப்படுத்தியது. இதை உணர்ந்ததும் உடனே அவள் தட்டுவதை நிறுத்தி விட்டாள்.

கதவைத் தள்ளி விட்டு அகலத் திறந்ததும் “இது தான் என் வீடு” என்றான்

அந்த அறையில் சுவிட்சைப் போட்டாலும் கூட மங்கலான ஒளியே பார்வைக்குத் கிடைத்தது . அறையெங்கும் ஏதேதோ பொருட்கள் சிதறிக் கிடந்தன .அவைகளை பழக்கப்படுத்திக் கொள்வதற்கே அவளது கண்களுக்கு நீண்டநேரம் பிடித்தது. அவனிடம் இரண்டு பெரிய முழுப் புத்தக அலமாரிகள் இருந்தன . பொருட்களை வைப்பதற்கு ஒரு வினைல் அலமாரி , தவிர மற்றொன்று . மேலும் பல்வகை விளையாட்டுப் பொருட்களின் தொகுப்பு என நிறைய இருந்தன . இவைகள் தவிர நிறைய கலைப்பொருட்களும் கூடஅங்கே இருந்தன . சுவரில் ஒட்டப்படுவதற்கு போஸ்டர்கள் மற்றும் ஒட்டுவதற்கு டேப் மேலும், பிரேம்களில் தொங்கவிடப்பட்ட சுவரொட்டிகள் என கன்னாபின்னாவென்று நிறைய அயிட்டங்கள் பார்வைக்கு கிடைத்தன “எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது”என்று எப்போதும் போல அவள் சொன்னாள். அவளுக்குள்ளே ஒரு உணர்வு ஓடிக் கொண்டிருந்தது . அது அவளுக்கு ஒரு விடுதலை உணர்வை தந்தது . அவள் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக இதற்கு முன்பு யாருடைய வீட்டுக்கும் சென்றதாக நினைவில்லை. இதற்கு முன்பு டேட்டிங் சென்றதெல்லாம் அவளை ஒத்த வயதுடைய இளைஞர்களோடு தான்.

இது போன்ற விசயங்கள் எப்படி இருந்தாலும் , அவளது அறைத் தோழிகளுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வாள். இது போன்ற சமயங்களில் அவள் வெகு நேரம் வெளியில் சுற்றி விட்டுத்தான் அறைக்கு வருவாள் .

வேறொருவரின் வீட்டிற்கு இப்படி தனியாக வந்திருப்பது அவளுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது . கொஞ்சம் பயமாகவும் கூட இருந்தது . மேலும், ராபர்ட்டின் வீட்டில் இருக்கும் பொருட்களைப் பார்த்தபோது, கலை, விளையாட்டுகள், புத்தகங்கள், இசை போன்ற பரந்த பிரிவுகளில் கூட, அவளுக்கும் அவனுக்கும் பொதுவான ஆர்வங்கள் இருப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது .அது அவளுடைய விருப்பத்தை மேலும் அதிகரித்தது.

அவள் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ராபர்ட் தன்னை நெருக்கமாக கவனிப்பதை உணர்ந்தாள். அந்த அறையில் பாலியல் வேட்கை அதிகரிப்பதை அவளால் உணரமுடிந்தது . பயம் அதன் பிடியிலிருந்து இன்னும் அவளை விடுவிக்காத நிலையில் , அவளுக்கு உள்ளுணர்வில் ஏதேதோ கற்பனைகள் தோன்றின . இது ஒரு அறை போலவே அவளுக்குத் தோன்றவில்லை. அவளை படுக்கையில் விழ வைக்க விரிக்கப்பட்ட வலை அந்த அறையெங்கும் நிறைந்திருப்பதாக அவள் நினைத்துக் கொண்டாள். ராபர்ட் அவளைப் போல ஒரு சாதாரண மனிதன் தான் என்று அவளை நம்பவைப்பதற்கு , எராளமான தடயங்களை அவன் அந்த அறையில் எற்படுத்தியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது .

அந்த வீட்டின் ஏனைய அறைகள் காலியாக இருக்கலாம் அல்லது முழுவதும் திகில் சமாச்சாரங்களால் நிரம்பியிருக்கலாம் ,ஒரு வேளை பிணங்கள் கிடக்கலாம் அல்லது இவனால் கடத்தி வரப்பட்ட கைதிகள் செயினால் கட்டப்பட்டு , அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே , ராபர்ட் அவளை மிகவும் நெருங்கி இறுக்கி அணைத்து முத்தமிட்டான் . அவளது பேக்கை எடுத்து சோபாவில் போட்டான். பின்னர் அவர்கள் இருவரது கோட்டுகளையும் கழற்றி அதன் மேல் எறிந்தான் . அவளை கையோடு அள்ளிக் கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் . அங்கே சென்ற நொடியில் அவளது பெண் உறுப்பைத் தொட்டு அசிங்கமாக மேலும் கீழும் தடவ ஆரம்பித்தான் . அப்படியே அவளது மார்பு காம்புகளை பிடித்து பிசையவும் ஆரம்பித்தான் . அவளுக்கு அவன் கொடுத்த அசிங்கமான முதல் முத்தம் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தது . படுக்கை அறை காலியாக இல்லை . ஆனால் வரவேற்பறையை விட இங்கே காலியிடம் அதிகம் இருந்தது .அவனிடம் படுக்கை என்று ஒன்று முழுமையாக இல்லை. கட்டில் பிரேம் கூட சரியாக இல்லை . ஒரு மெத்தையும் ஒரு மடக்கு நாற்காலியும் அங்கே கிடந்தன. அவனுடைய டிரெஸ்ஸிங் கப்போர்டில் ஒரு பாட்டில் விஸ்கி முழுதாக இருந்தது . அதிலிருந்து ஒரு மிடறு விழுங்கி விட்டு , பாட்டிலை அவளிடம் நீட்டினான். பிறகு அங்கேயே அமர்ந்து அவனது மடிக்கணினியை எடுத்து பிரித்தான். அவனது செய்கை அவளை குழப்பமடையச் செய்தது . சிறிது நேரங்கழித்து தான் தெரிந்தது , அவன் ஒரு இசையை ஒலிக்க விடுவதற்கான முயற்சியில் இருக்கிறான் என்பது .

மார்கோட் மெத்தையின் மீது உட்கார்ந்திருந்தாள் . ராபர்ட் தனது சட்டையைக் கழற்றினான். பிறகு தனது பேண்டையும் அவிழ்த்தான் . அதை முழங்கால் வழியாக கழற்றும் போதுதான் தான் , இன்னும் தான் கால் ஷுவை வாசலில் கழற்றிப் போடவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது . குனிந்து முதலில் ஷுவை கழட்டினான். அவனை அந்தக் கோலத்தில் பார்ப்பதற்கு மார்கோட்டிற்கு மிகவும் அசூசையாக இருந்தது . அவனுடைய அடிவயிறு முரட்டுத்தனமாகவும் அதேநேரம் மென்மையாகவும் , நிறைய முடிகள்அடர்ந்தும் காணப்பட்டது . மார்கோட் சுருண்டு படுத்துக்கொண்டாள் .

அவள் ஆரம்பித்து வைத்த இந்த அசம்பாவிதமான விளையாட்டை எப்படி நிறுத்த முடியுமென்று யோசித்துப் பார்த்த்துக் கொண்டிருந்த போது , தலை சுற்றியது . இப்போது உண்மையிலேயே நிறைய புத்திசாலித்தனமும் பொறுமையும் மென்மையும் தேவையென அவள் உணர்ந்து கொண்டாள் . உள்ளபடி சொன்னால் அவைகளெல்லாம் அவளிடம் இப்போது இல்லை . அவன் அவளை வற்புறுத்தி அவளது விருப்பத்திற்கு எதிராக செயல்பட வைப்பான் என்பதுகூட அவளுக்குப் பயமில்லை . ஆனால் இது போன்ற ஒரு நிகழ்வைத் தானே ஆரம்பித்து விட்டு இப்போது தானே நிறுத்த வேண்டுமென்று சொன்னால் அது எவ்விதம் முடியும் என்ற பயம்தான் அவளை ஆட்டுவித்தது . அவளை மோசமானவளாகவும் மேலும் அறுவெறுப்பானவளாகவும் காட்டும். ஒரு உணவுவிடுதியில் வகைவகையான உணவுகளை ஆர்டர் பண்ணிவிட்டு அது கைக்கு வந்து சேர்ந்ததும் வேண்டாமென்று சொல்வது போல இருக்கிறது தனது நிலைமை என்று அவள் நினைத்துக் கொண்டாள் .

அவன் அவள் மேல் விழுந்து , மிகப் பெரிய மோசமான முத்தங்களால் அவளை நனைக்க முயன்றபோது அவளால் உண்மையில் தாங்க முடியவில்லை. அவனுடைய கை இயந்திரத்தனமாக அவளது இடுப்பிற்கு கீழேயே சென்றது. அது அங்கே அசிங்கமான சில சைகைகளை செய்தது . அதை அவளால் சகிக்க முடியவில்லை . குமட்டிக் கொண்டுவந்தது .

அவனுடைய உடல் பாரத்திலிருந்து சாதுர்யமாக வெளியேறி அவனை தாங்கிப் பிடித்தபடி இருந்தாள். ஏழு முதல் பதினொன்று வரை மாலில் , அவன் அவள் முன் நெற்றியில் கொடுத்த முத்தங்களை மறுபடியும் நினைத்துப் பார்த்தாள். அவளது செயலை அவன் ஊக்கு விப்பதாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறி அவளுடைய சட்டையை தலை வழியாக கழற்றி வீசினான். அவளது பிரேசியரைக் கழற்றி அவளது மார்பு காம்புகளை விடுவித்தான். அது பாதி உள்ளேயும் பாதி வெளியேயும் இருக்கும் போதே தன் சுட்டு விரலையும் ஆட்காட்டி விரலையும் குவித்து வைத்து , நுனி முலைக் காம்புகளை உருட்ட ஆரம்பித்தான். அது அவளுக்கு மிகுந்த அசௌகரியத்தை கொடுத்தது . அதனை தடுக்கும் பொருட்டு அவள் தன் உடல் முழுவதையும் முன்னால் வளைத்து அவன் மேல் சாய்ந்தாள். இப்பொழுது அவன் முற்றிலும் அவளது பிரேசியரைக் கழற்றி எறிந்து விட்டு அவளது மார்புகளை விடுவித்தான். ஆனால் முன் போல அவனால் அவளது முலைக் காம்புகளை கசக்கி விளையாட முடியவில்லை. வீட்டிற்குள் வந்தபோது கதவில் சாவியை விட்டு திருகி கொண்டு எப்படி பதற்றமானானோ , அது போலவே இப்போதும் பதற்றமாகி “ அதைக் கழற்றி அப்பால் எறி “ என்றான். அவள் அப்படியே செய்தாள் .

அவளை அவன் பார்த்த பார்வை அவ்வளவு மிகையாகவும் அறு வெறுப்பாகவும் இருந்தது . அவள் இதுவரை மொத்தம் ஆறு ஆண்களுடன் இதுபோல நிர்வாணமாக இருந்திருக்கிறாள். அவர்களது விழிகளும் இதுபோல் அகல விரிந்திருக்கின்றன. ஆனால் ஏழாவது ஆளான இவனது கண்களைப் போல இவ்வளவு ஆபாசம் கலந்ததாக எவைகளையும் இவள் கண்டதில்லை. அவன் அவளது முழு உடலையும் பார்த்து அப்படியே அசையாமல் சிலையாக நின்று விட்டான். பிறகு முட்டாள் தனமான சந்தோசத்தில் திளைத்தான். ஒரு முலைப்பால் அருந்தும் குழந்தை எப்படி நடந்து கொள்ளுமோ , அப்படியே அவளிடம் நடந்து கொண்டான். உண்மையிலேயே அவளுக்கு அவனுடைய இந்த அப்பாவியான தோற்றம் மட்டும் தான் அவன் மீது பெரும் ஈர்ப்பை கொடுத்தது. அந்த கருணை ஒன்று தான் இப்போது இப்படி இவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமளவு கொண்டு வந்து விட்டது.

இது நடக்கும் போது ராபர்ட் வெளிப்படையாகவே நிறைய பாலியல் தேவைகளை நிறைவேற்றுமாறு தன்னுடைய இச்சையை அவளுக்கு தெரியப்படுத்தினான். உண்மையை சொன்னால் அவளோடு உறவு கொண்ட அத்தனை பேர்களிலும் அவன் மட்டும் தான் வயதில் மிகவும் பெரியவன். உண்மையிலேயே அவன்தான் இவர்களைவிட அதிகமான நிர்வாண உடல்களையும் ஆடைடயற்ற மார்புகளையும் பார்த்திருப்பான். அதுவே அவனுடைய இந்த கிளர்ச்சிக்கு காரணமாகவும் இருக்ககூடும் என்று நினைத்தாள் . அவள் இளையவள் அவன் வயதாவன் அதுதான் அவன் இப்படி ஆலாய் பறப்பதற்கு காரணமாக இருக்கும். அவன் அவளைப் பற்றி இப்போது என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பான் என்ற எண்ணம் அவளது மனதிற்குள் ஓடியது. அதை நினைத்துப் பார்ப்பதற்கே ஆனந்தமாக இருந்தது.

இந்த சின்னப் பெண் எவ்வளவு அற்புதமாக இருக்கிறாள். அவளது வாளிப்பான உடலில் ஒரு சுருக்கமும் இல்லை. துடைத்து வைத்த பளிங்கு போல் இருக்கிறாள். இதுவரை நான் விரும்பிய பெண்களை விட இவளைத்தான் அதிகம் விரும்புகிறேன். இவள் எனக்கு எப்போதும் வேண்டுமே வேண்டும் இவள் இல்லையென்றால் நான்இறந்துவிடுவேன். ” ஒரு வேளை அவன் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பான் என்று அவளுக்குத் தோன்றியது.

அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்த போது அவள் இனம்புரியாத பரவசத்தில் பறந்து கொண்டிருந்தாள். இது நாள் வரை தென்படாமல் அவளுக்குள்ளிருந்த ஈகோவை இப்போது தான் அவள் முதன் முதலாகப் பபார்க்கிறாள்.

அவனுடைய தூண்டுதலை அவள் கற்பளை செய்ய செய்ய மேலும் மேலும் கிளர்ச்சியடைந்து கொண்டேசென்றாள். விரைவிலேயே அவர்கள் ஒருவர் உடலை மற்றவர் தழுவி , ஒரு சுகமான லயத்தில் முன்னும் பின்னும் அசைத்தனர். அவள் அவனது உள்ளாடைக்குள் கையை விட்டு அவனது ஆண் குறியைப் பிடித்து அதன் நுனி மொட்டை தடவிப் பார்த்தாள் .அதில் சிறிய முத்துக்களைப் போல துளிகள் திரண்டிருந்தன. சுற்றிலும் ஈரமாக இருந்தது . அவன் உணர்ச்சியின் உச்சத்தில் ஒரு அவலமான முனங்கல் ஒலியை வெளிப்படுத்தினான். அது பெண் முனங்கும் ஒலி போலவே அது அவளுக்கு கேட்டது. ஏதோ ஒரு வகையில் அவனது இந்த ஒலியை அவள் உடனே நிறுத்திவிட வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அவளால் அது முடியவில்லை. அவனிடம் நேரடியாகச் சொல்ல வேண்டுமெனறு நினைத்தாள். அதுவும் முடியவில்லை. அதற்குள் அவனது கை அவளது உள்ளாடைக்குள் இறங்கிவிட்டது . அவனைப் போலவே அவளுக்கும் அந்தப்பகுதி ஈரப்பதமாக இருந்ததை அவன் உணர்ந்த நொடி நிம்மதியானான். .மீண்டும் அவனது விரல்களை அவளது பெண் குறிக்குள் நுழைத்து நுழைத்து இலேசாக ஆட்டினான். அவள் இன்ப வேதனையில் உதட்டைக் கடித்துக் கொண்டு அவனுக்கு வாகாக ஒத்துழைத்தாள். அவன் முன்பை விட வேகமாக அவனது விரல்களை இயக்கினான். அவளுக்கு வலியெடுத்தது . அவள் உடனடியாக திடுக்கிட்டு அவனது கைகளை விலக்கினாள். அவன் உடனடியாக கைகளை விலக்கிவிட்டு “ சாரி “ என்றான் பிறகு ““ இது போல இதற்கு முன்பு இப்படி நடந்துகொண்டிருக்கிறாயா? “ என்று கேட்டான்.

அன்றைய இரவில் அந்த நேரத்தில் அவளது முதல் உள்ளுணர்வு அவளை இல்லையென்று சொல்ல சொன்னது. பிறகு அவன் என்ன கேட்க வருகிறான் என்பதை அவள் உணர்ந்து கொண்ட போது , தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சப்தமிட்டு சிரித்து விட்டாள். அவள் வேண்டுமென்றே சிரிக்கவில்லை தான் . ஆனால் சிரிப்பு வந்து விட்டதை தவிர்க்கவும் முடியவில்லை. ராபர்ட் மென்மையானவன்தான். கேலி , கிண்டல் ரசனையுள்ளவன்தான் . ஆனால் அவனைப் பார்த்து ஒரு பெண் சிரிப்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவன். அவளுக்கோ சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் இந்த கற்பு , பரிசுத்தம் , கன்னித் தன்மையை இழப்பது , இவைகளெல்லாம் அவளைப் பொறுத்தவரை எப்போதோ முடிந்து போன பழைய விசயங்கள். அவள் அவளது ஆண் நண்பனோடு அந்தரங்கமாகப் பழகிய இரண்டாண்டுகளில் இதைப் பற்றி எத்தனையோ மாதங்கள் விவாதங்கள் நடத்தியிருக்கிறாள். ஏன் அவள் ஒரு மகப்பேறு மருத்துவரைக் கூட சென்று பார்த்திருக்கிறாள். மேலும் இதைப் பற்றிய அர்த்தமுள்ள , அர்த்தமற்ற மிகக் கடுமையான விவாதங்களை தன்னுடைய அம்மாவோடு நிகழ்த்தியிருக்கிறாள். அம்மா அந்த நிகழ்விற்குப் பிறகு அவளோடு பேசுவதில்லை. கார்டில் மட்டும் எழுதி அனுப்புவாள். அவளுக்கு நல்ல படுக்கை வசதியுள்ள ஒரு அறையை வீட்டில் தனியாக கொடுத்துவிட்டாள். இந்த நிகழ்ச்சியை எல்லாம் இவள் நினைத்துப் பார்க்கும் போது மிகவும் அலுப்பாக இருந்தது .

 இப்படியொரு விவகாரத்தில் மாட்டிக் கொண்டதற்குப் பதிலாக பேசாமல் வரலாற்றுப் படுகொலையை வலியோடு உணர்த்தும் ஒரு ஹாலோஹாஸ்ட் மூவிக்கு கூட மறுபடியும் சென்றிருக்கலாம் . அதுவும் தவிரை அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்ப்பதாக பாவனை பண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது மூன்று பியர் பாட்டில்களை ஒரேநேரத்தில் அமர்ந்து காலி செய்திருக்கலாம். அல்லது தியேட்டரில் சந்தித்த ஒரு பையனோடு செக்ஸ் வைத்துக் கொள்ள முன்பின் அறிமுகமில்லாத ஒருவீட்டிற்கு சென்றிருக்கலாம். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது , அவளுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு பீறிட்டு எழுந்து விட்டது .என்ன அது கொஞ்சம் வெறி பிடித்த சிரிப்பாக அளவுக்கு அதிகமாகப் போய்விட்டது அவ்வளவு தான்.

“மன்னிச்சுக்கோ“ என்றான் ராபர்ட்“ உண்மையிலேயே எனக்குத் தெரியாது“ என்றான் . உடனே அவள் சிரிப்பதை நிறுத்திவிட்டாள் .

“நீங்க என்னை செக் பண்ணது நல்லதுதான்” என்றாள் .“நான் ஏற்கனவே செக்ஸ் வச்சிருக்கேன் எனக்கு அந்த அனுபவம் இருக்குது , நான் வேணும்னு சிரிக்கலை . “ஆனா ஐயாம் சாரி” என்றாள் .

“நீ இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” என்றான். ஆனால் அவள் அவன் முகத்திற்கு நேராக மன்னிப்புகேட்டாள். அப்படி கேட்பதால் அவன் அவளிடம் இன்னும் கொஞ்சம் மென்மையாக அணுக கூடும் என்று நினைத்தாள்..

" மன்னிக்கவும்," அவள் மீண்டும், அனிச்சையாகச் சொன்னாள், பின்னர், உத்வேகத்தின் வெடிப்பில், "நான் பதட்டமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன், அல்லது வேறுஏதாவது?" என்றுகேட்டாள்.

இந்தக் கூற்றில் சந்தேகம் இருப்பது போல் அவன் அவளைப் பார்த்து கண்களைச் சுருக்கினான், ஆனால் அது அவனை அமைதிப்படுத்துவது போல் தோன்றியது. "நீ பதட்டப்பட வேண்டியதில்லை," என்று அவன் சொன்னான். "நான் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை." என்றான்.

ஆமா சரி தானே என்று அவள் நினைத்தாள். அவன் மறுபடியும் அவளை கீழே அழுத்தி அவளுக்கு மேலே படர்ந்தான். மறுபடியும் அவளை முத்தமிட ஆரம்பித்தான். இந்தப் போராட்டத்தின் கடைசி முயற்சியும் தோற்றுப் போனதை அவள் நன்றாக உணர்ந்தாள். ஆனால் இந்த கூடல் இடையில் முறிந்து விடாமல் கடைசி வரையிலும் கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்ததாக அவன் நிர்வாணமாக தன் ஆண் குறியில் பாதுகாப்பு உறையை மாட்டிக் கொண்டிருந்தான் . அவனது அடிவயிற்றில் மயிர்களடர்ந்த பகுதிக்கும் கீழே அவனது பாதி ஆண்குறி அவளது பார்வைக்கு கிடைத்தபோது அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது .இனம் புரியாத ஒரு வெறுப்பு அவளது உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் ஊடுருவி பரவியது. அதிலிருந்து ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்குள் அவன் அவளது பெண் உறுப்புக்குள் விரல்களை விட்டுஅசைக்க ஆரம்பித்தான் . இந்த முறை முன்பு போல் மெதுவாக இல்லை . மிகவும் முரட்டுத் தனமாக விரல்களை விட்டு முன்னும் பின்னும் ஆட்டினான். அவள் அவனை ஒருகணம் பார்த்தாள். நிர்வாணமாகவும் கழுகு போன்ற முகத்துடனும் உள்ள இந்த முதியவன் இவளது குறிக்குள் விரல்களை விட்டு அசைத்துக் கொண்டிருக்கிறான் . இதை நினைத்தபோது அவள்மீதே அவளுக் கு ஒரு வெறுப்பு எகிறியது . அவமானத்தால் குன்றிப்போனது போலானாள். எப்படிப் பார்த்தாலும் இது வக்கிரகமான உணர்வு தான் என்று முடிவு கட்டி விட்டாள்.

உடலுறவின் போது, ​​அவன் அவளை பல நிலைகளில் அசைத்து , கவிழ்த்து, தள்ளி அலைக்கழித்தான். அவள் தன்னை மீண்டும் ஒரு முறை பொம்மையைப் போல உணர்ந்தான், அதாவது அவள் எழு முதல் பதினொன்று வரை மாலிற்கு வெளியே எப்படி தன்னை ஒரு அசடாக உணர்ந்தாளோ , அது போலவே இப்போதும் உணர்ந்தாள். அவள் தன்னை ஒரு விலை மதிப்பற்ற அபூர்வமான , உயிராகவே எப்போதும் நினைத்திருந்தாள். இப்போது அவளை அவன் விலைமதிப்பற்ற பொருளாக பார்க்காவிட்டாலும் , ரப்பரால் ஆன நெகிழ்வான ஒரு பொம்மையைப் போல நடத்தாமல் இருக்க வேண்டும். அவனைப் பொருத்தவரை அவள் மீள்தன்மை கொண்ட ஒரு பொம்மை, அவன் தலையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு படத்திற்கு அவன் செயல் முறை வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தான். அவள் மேல் அமர்ந்ததும், அவன் அவள் தொடையில் அறைந்து, "ஆமாம், ஆமாம், உனக்கு அது பிடிக்கும்" என்று சொன்னான், அது ஒரு கேள்வியா, ஒரு கவனிப்பா அல்லது ஒரு கட்டளையா என்று சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது அவனது வார்த்தைகள் . மீண்டும் அவன் அவளைத் திருப்பியபோது, ​​" நான் எப்போதும் நல்ல மார்பகங்களைக் கொண்ட ஒரு பெண்ணைப் புணர்ந்திருக்கவே விரும்பினேன்" என்று அவள் காதில் உறுமினான் . சிரிக்காமல் இருக்க அவள் தலையணையில் முகத்தை புதைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இறுதியில், அவன் அவள் மேல் அமர்ந்து இயங்கிய போது , ​ விறைப்புத்தன்மையை இழந்து கொண்டே இருந்தான், ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் ஆக்ரோஷமாக, "நீ என் பின்புறத்தை மிகவும் கடினமாக்குகிறாய்" என்று கூறினான், அந்தப் பொய்யை உண்மையாக்குவது போல அப்படி சொல்லிக் கொண்டிருந்தான்.

கடைசியில், ஒரு வெறித்தனமான துடிப்பிற்கு பிறகு, நிலை குலைந்து நடுங்கி, ஒரு மரம் விழுவது போல அவள் மீது சரிந்தான், அவனுக்கும் கீழே நசுங்கி கிடந்த போது அவள் இப்படி நினைத்தாள் " இது தான் நான் வாழ்க்கையில் எடுத்த மிக மோசமான முடிவு !" இந்த வினோதமான , விவரிக்க முடியாத அசிங்கமான காரியத்தைச் செய்த இந்த நபரை அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள் . எப்படி இப்படி முட்டாள் தனமான காரியத்தை செய்யும் இவனோடு சேர்ந்திருக்க நான் இசைந்தேன் என்று அவள் தன்னையே நினைத்து சிறிது நேரம் ஆச்சரியப்பட்டாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ராபர்ட் எழுந்து, தன் வளைந்த கால்களுடன் குளியலறைக்குள் சென்றான் . ஆணுறை விழாமல் இருக்க அதைப் பிடித்துக் கொண்டான். மார்கோட் படுக்கையில் படுத்த படி கூரையைப் பார்த்தாள் , அதில் ஸ்டிக்கர்கள் ஒட்டி இருப்பதை முதல் முறையாகக் கவனித்தாள், இருட்டில் ஒளிர வேண்டிய அந்த சிறிய நட்சத்திரங்களும் சந்திரன்களும் அமைதியாக இருந்தன .

ராபர்ட் குளியலறையிலிருந்து திரும்பி வந்து வாசலில் நிழலாடினான் . "இப்போது நீ என்ன செய்ய விரும்புகிறாய்?" என்று அவளிடம் கேட்டான்.

" நம்மை நாமே கொன்றுவிட வேண்டும் என்று விரும்புகிறேன் ‘ என்று அவள் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் , பின்னர் இந்த பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு பையன் எனக்காக இருப்பான் அவன் என்னை புரிந்து கொண்டவனாக இருப்பான் என்று கற்பனை செய்து பார்த்தாள், இந்த தருணத்தைப் பற்றி பின்னர் பேசும் போது இது பயங்கரமானது , ஆனால் வேடிக்கையானது என்று அந்த கற்பனை நண்பன் நினைப்பான், எதிர்காலத்தில் எப்போதாவது, அவள் இந்தக் கதையை அவனிடம் சொல்வாள். " உடலுறவின் போது அவன், 'நீ என் பின்புறத்தை இவ்வளவு கடினமாக்குகிறாய்' என்று சொன்னான்," என்று அவனிடம் கூறுவாள் , அதற்கு அந்த அந்தப் பையன் விழுந்து விழுந்து சிரிப்பான். சிரிப்பை அடக்க முடியாமல் ஊ ஊ என்று காற்றில் கத்துவான் . அவள் காலைப் பிடித்து, " ஓ, என் கடவுளே, நிறுத்து, தயவுசெய்து, இல்லை, என்னால் இனி தாங்க முடியாது" என்று கூறுவான், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளில் விழுந்து சிரிப்பார்கள், சிரிப்பார்கள் . ஆனால் நிச்சயமாக அப்படி ஒன்றும் நடக்கப் போவது இல்லை, ஏனென்றால் அத்தகைய பையன் உலகில் இல்லவே இல்லை, ஒருபோதும் இருக்க மாட்டான். ஏனென்றால் எல்லாம் அவளது கற்பனை தான்.

சிறிது நேரம் சம்மந்தம் சம்பந்தமில்லாமல் அவள் மேல் அவனுக்கு இருக்கும் மையலைப் பற்றி பேசினான். அவள் கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்ற போது அவன் எ;வ்வாறு பயந்து போய் விட்டான் என்பதை அவளுக்கு விளக்கி சொன்னான் . ’ ஒரு வேளை உனக்கு ஊரில் பழைய பள்ளி நண்பன் இருந்து , நீ அவனோடு மறுபடியும் சேர்ந்து விட்டாயோ என்று கூட நினைத்தேன் ’ என்றான் . அவள் இல்லாத இரண்டு வாரங்களில் அவன் மனதில் ஏதேதோ கற்பனைகள் கட்டுக்கடங்காமல் ஓடியதாம் . ஒன்று அவள் ராபர்ட்டுக்காக , அவனைப்பற்றி பேசுவதற்காகத்தான் கல்லூரி வளாகத்தை விட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அடுத்ததாக அவள் வீட்டுக்குச் சென்றவுடன் , ராபர்ட்டை மறந்து விட்டு , அவளது பழைய பள்ளி நண்பனோடு மறுபடியும் ஈருடல் ஓருயிராகச் சேர்ந்து விட்டாள். அவளுடைய அந்த நண்பனைப் பற்றி இவனுக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயங்கள் ஏதும் இல்லை. அவளது பழைய நண்பனிடம் , சொல்லிக் கொள்வது போல நல்ல குணங்கள் ஏதும் இல்லை. ஆனால் விஷமத்தனங்கள் ஏராளம் உண்டு. ஆள் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகானவனாக இருக்கிறான். ஆனால் அவளுக்கு அவன் எந்த விதத்திலும் ஈடானவன் இல்லை. ஆமாம் எந்த விதத்திலும் அவளுக்கு அவன் பொருத்தமானவன் இல்லை. ஆனால் கனிசமான வருமானம் வரும் வகையிலான தகுதி பெற்றிருக்கிறான். அவளது சொந்த ஊரான ஷாலினில் நல்ல நிலையில் உள்ளான் . இது போதாதா பழைய நட்பு துளிர் மீண்டும் விடுவதற்கு? ’ நீ இங்கே திரும்பி வரும் போது , வேறு விதமான முடிவை எடுத்திருப்பாய் என்று தான் நினைத்தேன் அல்லது நமக்குள் பேசித் தீர்க்க வேண்டிய விசயங்கள் நிறைய இருக்குமென்று கூட நினைத்தேன் ’. என்றான் . பிறகு ’ ஆனால் நான் உன்னை நம்பியிருக்க வேண்டும் ’ என்று அவனாகவே சமாதானம் சொல்லிக் கொண்டான் .

’ என் உயர்நிலைப் பள்ளி காதலன் ஓரினச்சேர்க்கையாளன், ’ மார்கோட் அவனிடம் இப்படி பதில் சொல்வதாக கற்பனை செய்தாள். நாங்கள் உயர்நிலைப் பள்ளியில் இந்த மாற்றத்தைப் பற்றி மிகவும் உறுதியாக இருந்தோம், ஆனால் அவன் கல்லூரியில் என்னுடன் ஒரு வருடம் ஒன்றாகத் படுத்து உறங்கிய பிறகு , தன் சுபாவத்தை ஒத்துக் கொண்டான் . உண்மையில், அவனை இனி ஒரு ஆணாக அடையாளம் காண்பதற்கு நூறு சதவீதம் நேர்மறையான வாய்ப்பில்லை . எங்கள் பிரிவின் போது இதைப் பற்றி ஏராளமாகப் பேசினோம் அவன் இப்படி ஆண் பெண் தன்மை இரண்டும் சமமாக கொண்டவனாக வெளியே வந்தால் என்ன ஆகுமென்று பேசிக் கொண்டிருந்தோம் . அவனுடன் எப்படியும் உடலுறவு நடக்கப் போவதில்லை, நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட்டிருந்தால் , என்னிடம் கேட்டிருக்கலாம் .’ அவள் இப்படியெல்லாம் ராபர்ட்டுக்கு பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள் , ஆனால் அப்படி எதுவும் அவனிடம் சொல்லவில்லை . வெறுமனே அமைதியாகக் கிடந்தாள். ஆனால் வெறுக்கத்தக்க கருப்பு ஒளி வட்டத்தை வெளிப்படுத்திய படியே படுத்திருந்தாள் . , இறுதியாக ராபர்ட் பின்வாங்கும் வரை அப்படியே தான் கிடந்தாள் அவன் . "நீ இன்னும் விழித்திருக்கிறாயா? " என்று கேட்டான், அவள் ’ ஆம் ’ என்றாள், அவன், "எல்லாம் சரியா? " என்றான்.

சரி தான்?” என்றாள் பிறகு திடீரென்று அவனிடம் திரும்பி ,

’ சரியாக இப்பொழுது உங்கள் வயதென்ன? ’ என்றாள்.

’ முப்பத்தி நான்கு ’ என்றான் பிறகு ’ ஏன் உனக்கு ஏதாவது பிரச்சினையா?’ என்றான்

’ இல்லை , ஒன்றும் பிரச்சினை இல்லை ’ என்றாள் அவள்.

தன் அருகில் இருட்டில் படுத்திருக்கும் அவனது உடல் பயத்தில் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது .

" சரி, " அவன் சொன்னான். " அதைப் பற்றி நான் உன்னிடம் பேச விரும்பினேன் , ஆனால் நீ அதை எப்படி எடுத்துக்கொள்வாய் என்று எனக்குத் தயக்கமாக இருந்தது " இதை சொல்லிய படி உருண்டு வந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான், அவன் மீண்டும் அவள் உதட்டுக்குள் தந்த முத்தத்தினால் உப்பு ஊற்றிய ஒரு நத்தையைப் போல தன்னை உணர்ந்தாள், இன்னும் சொல்வதென்றால் அந்த முத்தத்தினால் அவள் சிதைந்து போனாள்.

 கடிகாரத்தைப் பார்த்தாள் . அதிகாலை மூன்று மணியாகியிருந்தது . ’ நான் உடனடியாக அறைக்குப் திரும்ப போக வேண்டும் ’ என்றாள் . அவன் ’ அப்படியா , நீ இங்கே தங்கி இருப்பேன்னு நான் நினைச்சேன் . உனக்காக சுவையான முட்டை வறுவல் தயாரிக்கலாம்னு கூட நினைச்சிருந்தேன் ’ என்றான்.

" நன்றி ," அவள் தன் லெகின்ஸில் நுழைந்து கொண்டே சொன்னாள். " ஆனால் என்னால் இங்கே தங்க முடியாது. என் ரூம்மேட் கவலைப்படுவாள் அதனால் நான் …. ."

" நான் அறைக்குத் திரும்பிப் போகணும்," என்று அவன் அவளைப் போலவே கிண்டல் நிறைந்த குரலில் சொன்னான் .

"ஆமாம்," அவள் சொன்னாள் " நான் அங்கேதான் வசிக்கிறேன்."

பயணம் முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்றது . பனிப் பொழிவு இப்போது மெல்ல மழையாக மாறியிருந்தது. அவர்கள் பேசவில்லை. இறுதியில், ராபர்ட் ரேடியோவை இரவு தேசிய பண்பலைக்கு மாற்றினான் . அவர்கள் முதன்முதலில் திரைப்படத்திற்குச் செல்ல நெடுஞ்சாலையில் ஏறும்போது, ​​ராபர்ட் தன்னைக் கொலை செய்யலாம் என்று கற்பனை செய்ததை மார்கோட் நினைவு கூர்ந்தாள், இப்போது அவன் என்னைக் கொலை செய்வானா என்று நினைத்துப் பார்த்தாள் . அவன் அவளைக் கொலை செய்யவில்லை.

“நன்றி,” அவள் சொன்னாள் . அவள் தன் பையை தன் கைகளில் பற்றிக் கொண்டாள். “‘

’ நானும் கூட.” “நாம் இறுதியாக ஒரு டேட்டிங் செல்ல முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவன் சொன்னான்.

“ ஒரு டேட்டிங்,” அவள் தன் கற்பனை காதலனிடம் சொன்னாள். அவன் “ அதை ஒரு டேட்டிங் என்று சொல்லாதே , வெறும் ’டேட் என்று மட்டும் சொல் ‘ என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான் . அதை நினைத்து அவள் சிரித்தாள் அவனும் சிரித்தான் .அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். “

’ தேங்ஸ் ’ என்றாள் அவள் . கார் கதவின் கைப்பிடியை திறக்கப் போனாள். ’ திரைப்படத்திற்கும் மற்ற அனைத்து விசயங்களுக்கும் ’ நன்றி என்றாள் . அவன் ’ வெல்கம் ’ என்றான். பிறகு ’ இங்கே வா ’ என்றான் . மீண்டும் அவளை வளைத்துப் பிடித்து இழுத்து அணைத்தான் . அப்படியே அவளை சீட்டின் பின்னால் தள்ளினான் . கடைசி , கடைசி முறையாக தன்னுடைய நாக்கை அவளுடைய இதழ்களுக்குள் விட்டு துழாவ ஆரம்பித்தான். அய்யோ ! அதே உப்பு ஊற்றப்பட்ட நத்தை , அவளுக்கு ஆயாசமாக இருந்தது ’ ’ அடக் கடவுளே இது எப்போது முடியும்? ’ என்று அவளது கற்பனை நண்பனை கேட்டாள் . அவன் இந்த முறை பதில் சொல்லவேயில்லை.

"குட் நைட்," என்று அவள் சொன்னாள், பின்னர் கதவைத் திறந்து தப்பித்தாள். அவள் தன் அறைக்குச் செல்வதற்குள் , , அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது . அதில் வார்த்தைகள் இல்லை, இதயங்களும் , இதய வடிவத்தில் முகங்களும், மற்றும் ஒரு டால்பினும் இருந்தன .

அவள் பன்னிரண்டு மணி நேரம் தூங்கினாள் , எழுந்ததும் சாப்பாட்டு அறையில் அதிகமான வாஃபிள்ஸ் கேக்குகளை சாப்பிட்டாள் . அடுத்ததாக நெட்ஃபிளிக்ஸில் துப்பறியும் நிகழ்ச்சி தொடர்களை தொடர்ந்து பார்த்தாள், இனி அவளை துரத்தாமல் அவன் மறைந்துவிடுவான் என்ற நம்பிக்கையான சாத்தியத்தை , கற்பனை செய்ய முயன்றாள் ஆனால் தோற்றுப்போனாள் . எப்படியாவது அவள் அவனை விட்டு விலக விரும்பினாள் . இரவு உணவுக்குப் பிறகு, அவனிடமிருந்து அடுத்த செய்தி வந்தது . ​​அது ரெட் வைன்ஸ் பற்றிய ஒரு தீங்கற்ற நகைச்சுவை , ஆனால் அவள் அதை உடனடியாக நீக்கிவிட்டாள். அவன் செய்த செயல்களை நினைத்த போது அவளது தோல் மீது அருவெறுப்பான ஒரு ஜந்து ஊர்ந்து செல்வது போல இருந்தது அவளுக்கு . இப்போது இந்த விசயத்தை ஆரம்பித்தால் , இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ இதை நிறுத்துவதற்கு , என்ற நினைப்பு வந்ததும் பயம் பீடித்துக் கொண்டது . அவன் செய்திகளை , குறுஞ் செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருப்பான் முடிவற்று . ’ இந்த உறவை முறித்துக் கொள்வதற்கான சமிஞ்ஞையை , ஒரு செய்தியை அவள் தான் துணிந்து அவனுக்கு அனுப்ப வேண்டும் . அது வரை அவனிடம் தொடர்வது , பேசுவது முட்டாள் தனமானது , குழந்தைத் தனமானது கொடுமையானது. ’ அவள் இப்படி நினைத்தாள் . அது தாங்காது , இப்போதே ஒரு செய்தியை அனுப்பி விட்டாலென்ன என்று தோன்றியது. ஒரு பிரிவுச் செய்தியை திரையில் எழுதத் தொடங்கினாள் ’ நல்லது , எல்லாவற்றிற்கும் நன்றி , ஆனால் எனக்கு இப்போது ஒரு உறவில் ஆர்வம் இல்லை . ஆனால் இடை இடையே தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தாள் . அவள் நழுவ முயற்சிப்பதாக அவன் கற்பனை செய்யும் ஓட்டைகளை சாதுர்யமாக அடைக்க முயன்றாள் ("சரி, எனக்கும் ஒரு உறவில் ஆர்வம் இல்லை, சாதாரணமான ஒன்று பரவாயில்லை !"), இப்படியாக அவள் எழுத ஆரம்பித்த செய்தி , நீளமாகி, மிக நீளமாகி கடைசியில் , அனுப்ப சாத்தியமற்றதாகப் போய் விட்டது .

இதற்கிடையில், அவனது குறுஞ்செய்தி தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது, அவற்றில் எதுவும் அதன் விளைவைப் பற்றி சொல்லவில்லை, ஒவ்வொன்றும் முந்தையதை விட மிகவும் தீவிரமாகவே இருந்தன. அவன் வெறும் மெத்தையாக இருந்த தனது படுக்கையில் படுத்துக் கொண்டு, ஒவ்வொன்றையும் கவனமாக வடிவமைத்துக் கொண்டிருப்பதை அவள் கற்பனை செய்து பார்த்தாள்.

 அவன் முன்னதாக தனது பூனைகளைப் பற்றி நிறையப் பேசியிருந்ததை அவள் நிறையக் கேட்டிருந்தாள். ஆனால் தான் அவன் வீட்டிற்கு சென்ற போது , வீட்டில் எந்தப் பூனைகளையும் அவள் பார்த்ததில்லை என்பது இப்போது நினைவுக்குள் வந்தது . மிகவும் வியப்பாக இருந்தது. அவன் இல்லாத பூனைகளை அவளுக்காக உருவாக்கினானா என்று அவள் யோசித்துப் பார்த்தாள்.

அடுத்த நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் , எதிலும் ஆர்வமற்று ,ஒரு பகற்கனவு மனநிலையில், இருப்பதைப் போல் இருந்தாள் . மனதில் வெறுமை குடி கொண்டு விட்டது. எதையோ தவறவிட்டிருப்பதைப் போல் உணர்ந்து கொண்டாள், கடைசியில் அது என்னவென்றும் அவள் கண்டு கொண்டாள். அவள் தவறவிட்டது ராபர்ட்டைத் தான், ஆனால் உண்மையான ராபர்ட்டை அல்ல , அவள் கல்லூரி விடுப்பில் , ஊருக்குச் சென்றிருந்த போது, தனது குறுஞ்செய்திகளின் வழியே அன்பை , சுவாரஸ்யத்தை பொழிந்த அந்த நேசமான ராபர்ட்டைத்தான் அவள் இப்போது தவற விட்டிருக்கிறாள் . ஆனால் அவன் கற்பனையான ராபர்ட். உண்மையில்லை.

"ஏய், நீ ரொம்ப பிஸியா இருக்க போல இருக்கே, இல்லையா? " ராபர்ட் கடைசியாக இப்படி எழுதினான். இது அவர்கள் உறவு கொண்ட மூன்றாவது நாளில் வந்திருந்தது. பிரியா விடை பெறுவதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதற்கு , இதுதான் சரியான வாய்ப்பு என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அதற்குப் பதிலாக " ஹாஹா சாரி ஆமா ", "சீக்கிரமே உனக்கு குறுஞ்செய்தி அனுப்புறேன் " என்று பதில் எழுதி முடித்துக் கொண்டாள் . பிறகு தலையில் அடித்துக் கொண்டாள் ’ அய்யோ , "நான் ஏன் அப்படிச் செய்தேன்? " அவளுக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாது .

. "உனக்கு ஆர்வம் இல்லைன்னு அவனிடம் சொல்லு!" மார்கோட்டின் அறைத் தோழி தமரா, கத்தினாள். மார்கோட் ஒரு மணி நேரம் தன் படுக்கையில் படுத்திருந்த பிறகு, ராபர்ட்டுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பிப் போன விரக்தியில் எல்லாவற்றையும் அவளிடம் சொல்லியிருந்தாள்.

" உண்மையில் நான் அதை விட அதிகமாகத்தான் சொல்ல வேண்டும். அனால் நாங்கள் உடலுறவு கொண்டு விட்டோமே என்ன செய்வது? ," என்று மார்கோட் கேட்டாள் .

"என்ன சொல்ற? " தமரா அலறினாள் " நீ சொல்றது உண்மையா? "

"அவன் ஒரு நல்ல பையன்," என்று மார்கோட் சொன்னாள், உடனே அது எவ்வளவு உண்மை என்று அவள் யோசித்துப் பார்த்தாள். ,

அவ்வளவு தான் திடீரென்று, தமரா பாய்ந்து வந்து , மார்கோட்டின் கையிலிருந்து கைபேசியைப் பிடுங்கி கொண்டு , அதை அவளிடமிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்றாள் . இவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே , தமராவின் விரல்கள் திரையில் பறந்தன. எல்லாம் முடிந்த பிறகு , தமரா திரும்பவும் வந்து கை பேசியை இவள் படுக்கையில் வீசினாள் , மார்கோட் அதை தேடி எடுத்து படித்துப் பார்த்தாள். அதில் தாமரா இப்படி எழுதியிருந்தாள் "ஹாய், எனக்கு உன் மீது விருப்பமில்லை , குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தி விடு " என்றிருந்தது.

" ஐயோ, கடவுளே," என்று மார்கோட் கத்தினாள், திடீரென்று மூச்சு விடுவது கடினமாக போய் விட்டது அவளுக்கு .

ஆனால் உண்மையிலேயே அது ஒரு பெரிய விஷயம் தானென்று அவர்கள் இருவருக்குமே தெரியும் . மார்கோட்டின் வயிற்றில் ஒருவித பயம் நிறைந்த முடிச்சு எப்போதும் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது . அவள் வாந்தி எடுக்கக் கூடும் என்று நினைத்தாள். ராபர்ட் தனது தொலைபேசியை எடுத்து, அந்தச் செய்தியைப் படித்துப் பார்ப்பான். அப்படியே அவன் கண்ணாடித் துண்டங்களைப் போல உடைந்து சிதறிப் போவதை அவள் கற்பனை செய்து பார்த்தாள் . அப்படியாக இல்லையென்றால் அவன் கை பேசியை சுக்கு நூறாக உடைத்துப் போடுவான் . ஆம் அப்படியும் நிகழலாம் .

"அமைதியா இரு . நாம போய் கொஞ்சம் பானகம் குடிச்சிட்டு வரலாம் " என்று தமரா சொன்னாள், அவர்கள் இருவரும் ஒரு பாருக்குச் சென்று , ஒரு சிறிய மதுக் குடத்தைப் பகிர்ந்து கொண்டார்கள் . அந்த நேரத்தில் மார்கோட்டின் கைபேசி அவர்களுக்கு இடையே மேசையில் இருந்தது . அதை அவர்கள் புறக்கணிக்க முயன்றாலும், அதில் ஒரு செய்தி வந்த போது அது பீப் ஓசையுடன் ஒலித்தது . அவர்கள் பெரிதாக கத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக் கொண்டனர். கை பேசியை இருவருமே எடுக்கவில்லை.

"என்னால் அதை வாசிக்க முடியாது . நீயே வாசி ," மார்கோட் சொன்னாள். அவள் தொலைபேசியை தமராவை நோக்கித் தள்ளினாள். "நீ தானே அப்படிச் செய்தி அனுப்பினாய். அது உன் தவறு " என்றாள் .

"ஆனால் வந்த செய்தி வேறு விதமாக இருந்தது . "சாரி , மார்கோட், உன் செய்தியைப் பார்த்து , எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் உன்னை வருத்தப்படுத்தும் எதையும் செய்யவில்லை என்று நம்புகிறேன். நீ ஒரு இனிமையான பெண், நாம் ஒன்றாகக் கழித்த நேரத்தை நான் மிகவும் ரசித்தேன் . உன் மனதை மாற்றிக்கொண்டால் எனக்குத் தெரியப்படுத்து" இவ்வாறு தான் அவன் செய்தி அனுப்பியிருந்தான்.

மார்கோட் மேஜையில் சரிந்து, தன் தலையை கைகளில் பிடித்துக் கொண்டாள். தன்னை ஒரு அட்டையைப் போல் அப்போது அவள் உணர்ந்தாள் . அட்டை இரத்தத்தை உறிஞ்சி , கனமாகி , இரத்தத்தால் வீங்கி, கடைசியில் தோல் உரிந்து, ஒரு மென்மையான, சிராய்ப்புள்ள இடத்தை விட்டுச் செல்வது போல் அவள் தன்னை உணர்ந்தாள். ஆனால் அவள் ஏன் அப்படி உணர வேண்டும்? ஒருவேளை அவள் ராபர்ட்டிடம் அநீதி இழைத்திருக்கலாம், அவனும் உண்மையில் அவளைப் போலவே எந்தத் தவறும் செய்யவில்லை , அவன் படுக்கையில் மோசமாக நடந்திருக்கலாம், ஒருவேளை பூனைகள் இருப்பதாக பொய் சொல்யிருக்கலாம் , ஒருவேளை அவைகள் வேறொரு அறையில் கூட இருந்திருக்கலாம் அல்லவா? .

ஆனால், ஒரு மாதம் கழித்து , அவள் மறுபடியும் அவனைப் பார்க்க நேர்ந்தது . அதே பாரில் தான் மறுபடியும் பார்த்தாள் . அதாவது அவர்கள் டேட்டிங் சென்ற போது , அவனை எந்த பாருக்கு போகச் சொல்லி அவள் பரிந்துரை செய்தாளோ , அதே பாரில் தான் அவனை மீண்டும் பார்த்தாள் . அவன் பின் வரிசையில் உள்ள ஒரு மேஜையில் தனியாக அமர்ந்திருந்தான், அவள் பார்த்த போது அவன் படித்துக் கொண்டோ , தொலைபேசியைப் பார்த்துக் கொண்டோ இல்லை . அமைதியாக உட்கார்ந்து , ஒரு பீர் குடித்துக்கொண்டிருந்தான்.

அவள் தன்னுடன் இருந்த ஆல்பர்ட் என்ற நண்பனின் தோளைப் பிடித்துக் கொண்டு அவனது காதுகளில் மெதுவாக "ஐயோ கடவுளே ! அது அவன்தான் அவனேதான் ," என்று கிசுகிசுத்தாள் . யார்? என்று கேட்டான் ஆல்பர்ட் . அவள் " திரைப்படக் கூடத்திலிருந்து நட்பாகி வந்தவன் ! " என்றாள் . ஏற்கனவே ஆல்பர்ட் இந்தக் கதையின் ஒரு பதிப்பை தன் நண்பர்கள் மூலம் கேட்டிருந்தான் . ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை . கிட்டத்தட்ட அவளுடைய எல்லா நண்பர்களும் அதையே கேட்டிருந்தார்கள். இப்போது ஆல்பர்ட் அவள் முன்னால் ஒரு கேடயம் போல் நின்று கொண்டு , ராபர்ட்டின் பார்வையில் படாமல் அவளைக் காப்பாற்றினான். அவர்கள் அப்படியே தங்கள் நண்பர்கள் இருந்த மேசைக்கு சென்றனர் .

ராபர்ட் அங்கே இருப்பதாக மார்கோட் அறிவித்ததும், அவளது நண்பர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வெடித்துப்போனார்கள் ., அவர்கள் அவளை ஏதோ ஒரு ஜனாதிபதி போலவும் , அவர்களெல்லாம் அவளுக்கு ரகசியச் சேவகர்கள் போலவும் பாவித்துக் கொண்டு , அவளை கும்பலாக சூழ்ந்து கொண்டு , பத்திரமாக பாரிலிருந்து வெளியே கொண்டு வந்து சேர்த்தனர் . மார்கோட்டிற்கு இது எல்லாம் சற்று மிகையோ என்று தோன்றியது . உண்மையிலேயே தான் ஒரு மோசமான பெண்ணைப் போல நடந்துகொள்கிறோமா என்று அவள் யோசித்துப் பார்த்தாள். அப்படி யோசிக்கும் போதே சோர்வையும் பயத்தையும் தனக்குள் உணர்ந்தாள்.

அன்று இரவு மார்கோட் , தமராவுக்கு அருகில் தன் படுக்கையில் சுருண்டு படுத்திருந்தாள் , அப்போது நெருப்பு போல ஒளிர்ந்த கைபேசியின் பிரகாசம் அவர்களின் முகங்களை ஒரு கணம் ஒளிரச் செய்தது . அது அவன் அனுப்பிய செய்தி தான் மார்கோட் செய்திகளை வாசித்தாள்:

“ஹாய் மார்கோட் , இன்றிரவு உன்னை பாரில் பார்த்தேன். உனக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம் என்று சொன்னாய் என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது . ஆனால் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று நான் சொல்ல விரும்பினேன். நீ நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன்!”

மறுபடியும் மற்றொன்று

’ நான் இதைச் சொல்லக் கூடாதுன்னு எனக்குத் தெரியும், ஆனா நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்”

“ஏய், எனக்குக் கேட்க உரிமை இல்லன்னா கூட , நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன்னு நீ எனக்கு சொல்லணும் ”

செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமேயிருந்தன.

“*தவறுதானா? ” “

’ நீ அப்படி உணரலேன்னா ’

, நமக்குள்ள ஒரு உண்மையான தொடர்பு இருக்குற மாதிரி எனக்குத் தோணுது. . . .”

“ஒருவேளை எனக்கு வயசாயிடுச்சுன்னு நினைச்சிட்டியா? , இல்லன்னா வேற யாரையாவது உனக்குப் பிடிச்சிருக்குதா? ”

“இன்றிரவு உன்னோடு நான் பார்த்த அந்தப் பையன் தான் உன் ஆண் நண்பனா? காதலனா? ’

“அல்லது அவனோடு தான் இப்போது நீ படுக்கிறியா அதாவது உடலுறவு கொள்றியா ”

“மன்னிக்கவும்”

“ ஓ கதை இப்பிடி போகுதா? நீ பல பேரு கூட படுக்குறவளா? அதான் , நான் அன்னிக்கு நீ இன்னும் கன்னியா இருக்கியான்னு கேட்டதுக்கு அவ்வளவு சிரிப்பு சிரிச்சியா? சரி இப்போ அந்தப் பையனோட படுத்துகிட்டு இருக்கிறது யார்? நீ தானே?

 ’ நீ தானே?’

“ நீ தானே ’?

“நீ தானே ”?

எனக்குப் பதில் சொல்லுடி ”

“ தேவிடியா .”

மூலம் : கிறிஸ்டேன் ருபேனியன்

மொழி பெயர்ப்பு : தங்கேஸ்

 ஆசிரியர் குறிப்பு -  கிறிஸ்டேன் ருபேனியன் ( 1982 - )

 இவர் அமெரிக்கப் பெண் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது இந்தப் பூனை மனிதன் என்ற சிறுகதை முதன் முதலா 2017 ஆம் ஆண்டு ’ தி நியு யார்க்கர் ’ என்ற பத்திரிகையில் பிரசுரமானது . பிரசுரமான அடுத்த நாளிலிருந்தே , இது பரந்த வாசகப் பரப்பை சென்றடைந்தது . இவரது கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் ஊடகங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. அமெரிக்க இளம் பெண்கள் இந்தக் கதையில் வருகிற மார்கோட் என்ற பெண் பாத்திரத்தோடு , தங்களை அடையாளம் கண்டு கொண்டு , இவருக்கு முழு ஆதரவை அளித்தனர் . வளர்ந்த நாடாகவே இருந்தாலும் , அமெரிக்காவிலும் கூட , இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரமும் , தன் வாழ்க்கை சார்ந்த முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் வாய்க்கப் பெறவில்லை என்பதை இந்தக் கதையில் மிகவும் கூர்மையாக இவர் சித்தரித்து இருக்கிறார். இருபது வயது இளம் பெண்ணின் நுண்ணிய மனவோட்டங்களையும் , பாலியல் சமத்துவத்தை எதிர் நோக்கிய அவளது செயல் பாடுகளையும் , அவளுக்கு நேர்கிற ஒரு பாலியல் அத்து மீறலையும் மிக மிக நுண்ணிய மனவோட்டத்தின் பிண்ணனியில் அற்புதமாக சித்தரித்திருக்கிறார் என்று பத்திரிகைகள் பாராட்டின . இது இவருக்குத் தெரிந்த ’ நோ விக்ஸ் ’ என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை சித்தரிப்பு என்று பரபரப்பாக பேசப்பட்டது . ஊடகங்களில் பகிரப்பட்ட நோ விக்ஸின் வாழ்க்கை நிகழ்வுகளை , கதையின் உருவாக்கத்திற்கு மட்டும் பயன்படுத்தியதாகவும் , கதை முழுக்கவும் தனது கற்பனையால் பிறந்தது , என்றும் தன்னுடைய வாழ்க்கையின் தாக்கம் கூட அதில் சிறிது கலந்திருப்பதாகவும் அவர் ஒரு முறை அந்தப் பெண் ’ நோ விக்கிற்கு ’ பதில் எழுதியிருந்தார் . இடங்களை மாற்றாமல் அப்படியே எழுதியதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார்.

 பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்து மீறல்களை பேசும் இயக்கமான ’ மீ டு ’ இயக்கம் அடுத்ததாக தோன்றி வளர்வதற்கு , இந்தச் சிறுகதை தான் உந்து சக்தியாக இருந்ததாக பல பெண்களின் அமைப்புகள் கருத்துக்களை தெரிவித்தன .

ருபேனியன் முறையாக ஆங்கில இலக்கியமும் , உளவியலும் இளங்கலையில் படித்தவர் . கவின் கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கில இலக்கியத்தில் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தச் சிறுகதையை உள்ளடக்கிய இவரது சிறுகதை தொகுப்பான ’ You know You want This ‘ என்ற புத்தகத்தை வெளியிட அமெரிக்கப் புத்தகச் சந்தையில் அத்தனை போட்டி இருந்தது. பதிப்பகங்களுக்குள் ஒரு யுத்தமே நடந்ததாக ஊடகங்கள் போட்டி போட்டு எழுதின. இறுதியாக அவர் அந்த தொகுப்பை வெளியிட ‘ Scout press ’ என்ற பதிப்பகத்திடம் சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை ( இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ பத்து கோடிகளுக்கும் மேலே ) முன் பணத் தொகையாக மட்டுமே பெற்றுக் கொண்டார் என்பது ஆச்சர்யமான செய்தியாகும் ( முழுமையாக எவ்வளவு பெற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை ) புத்தகம் 2019 ஆம் ஆண்டு வெளியானது . உலகின் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக பேசப்படும் இந்த ’ பூனை மனிதன் ’ என்ற சிறுகதை , குறும் படமாகவும் , திரைப்படமாகவும் , இணைய தொடராகவும் படமாக்கப்பட்டு பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.