உங்களுக்கு உகுக்கவேண்டிய
கண்ணீர்த்துளிகள்
ஆவியாகிவிடுகின்றன
உங்கள் உரிமைக்கு
உயர்த்தபடவேண்டிய கைகள்
ஒன்றையொன்று கழுவிக்கொள்கின்றன
உங்களை ஆற்றுப்படுத்தச்
சொல்லவேண்டிய சொற்கள்
சிறுமூச்சாய் வெளியருகிறது
உங்களுக்குச் சிந்தப்படவேண்டிய
சகோதரக்குருதி
உள்ளுக்குள் உறைந்துவிடுகிறது
இதுவரை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பது
வீழ்ந்த எங்களின்
நிழல்களின் பேரழிவை
செவிட்டூமையாகப்பிறந்து
தன் பார்வையையும்
இழக்கத்தொடங்குகிறது
இந்தகவிதையும் எங்களைப்போல
- ரவி உதயன் (
கழுவும் கைகள்
More articles by ரவி உதயன்
- மலர்கள் மட்டும் உதிர்வதில்லை (24 மே 2013)
- ஆட்டம் (18 நவ 2010)
- இரண்டும் ஒன்றுதான் (09 நவ 2010)
- முத்தம் - சில குறிப்புகள் (19 ஆக 2010)
- மிகு வலி (13 ஆக 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.