முத்தம்
ஒரு நெருப்புக்குச்சியில்
பற்ற வைத்த
இரு சிகரெட்டுகள்.

• 
 
ஓரே ஒரு முத்தத்தையுண்டு
பசியாறிக்கொள்கிறார்கள் காதலர்கள்

• 

மரம் குனிந்து எண்ணிச்சொல்லாம்
தானுதிர்த்த இலைகளை
 
கடலலைகள் கூறி விடலாம்
கரையில் கிடக்கிற மணல் துகள்களின் எண்ணிக்கையை
 
வானம் வரைந்து காட்டிவிடலாம்
தன் மீது பூத்த நட்சத்திரங்களை
 
எப்பொழுதும் சொல்ல இயலாதது
ஒரு காதல் யுவதிக்கும், யுவனுக்கும்
எக்கணத்தில்
ஒரு முத்தம் நிகழக்கூடுமென்று
 
- ரவி உதயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.