செடியிலிருந்து மலர்கள்
மட்டும் உதிர்வதில்லை
கூடவே
பனித்துளிகள்,
மழைக்காலமெனில்
நீர்த்துளிகள்,
மேலும்
மலர் நடுவே
ஒரு சொட்டுத்தேன்
கூடுதலாக
நான்கைந்து சிறு எறும்புகள்
அதிலும் கூடுதலாக
உதிர்தல் தாங்காத சில
இதயங்கள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.