கோவில்

 

வாசலில் கழட்டி போட்ட

செருப்பு திருடப்பட்டு விடுமோ

உள்ளத்தில் செருப்புடன் தெய்வ வழிபாடு.

 

ஹைக்கூ

 

பொட்டலம் போடுபவனின்

ஒரு நிமிட சந்தோஷம்

ஆங்கில தினசரி நடிகை படம்

 

டிராபிக் சிக்னல்

 

முன் நின்ற கார்க் கண்ணாடியில்

முகம் பார்க்கும் பேருந்து

 

பேருந்து

 

காலி இருக்கை பிடிக்க

தள்ளிவிட்டு ஓடினான் சக பயணி.

பின் நின்ற பெரியவரிடம்

'உட்காரீங்களா?' எனக் கேட்க

கோபம் நட்பானது

 

விவாதங்கள்

 

சிலருக்கு இவை

திறமை காட்டும்

சந்தர்ப்பங்கள்

சிலருக்கு இவை

பிறரை மாற்ற

உதவும் கருவிகள்

சிலருக்கு இவை

அரிதாரமேற்கும்

அரங்கங்கள்

சிலருக்கு இவை

போதி மரங்கள்

இவற்றால் சில

உறவுகள் வலுப்பெறும்

சில உறவுகள்

அருப்பெரும்

இவை இருமுனை

கூர் ஆயுதஙகள்

கவனம் இருந்தால்

கனிகள்

கவனம் சிதறினால்

காயங்கள்

விளைவுகள்

கையாள்பவர் கையில்.

 

-தாமோதர கண்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by தாமோதர கண்ணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.