வளர்ந்து விட்டதாய்
இருமாந்து கொள்கின்றன‌
ஏடுகள்...

ramprasath-picகண்டுபிடிப்புகளின் மூலம்
கண்விழிப்பதாய் கூறுகின்றன...

இத்தனை காலம்
பற்பல சுழற்சிகளை
நசுக்கியாகிவிட்டது...

அவற்றின் பிரேதங்களின் மேல்
நர்த்தனமாடியாகிவிட்டது...

இன்னும் வளர்ச்சி
சலிக்கவில்லை அவைகளுக்கு...

செல்லும் திசையெங்கும்
இருளை ஒளியூட்டுகின்றன‌...
அமைதி வெளியெங்கும்
மயானமாக்குகின்றன...

சூன்யத்தைக் மொழியாக்கி
வளர்க்கின்றன...
உலகை வெல்லப்போவதாய்
எக்காளமிட்டு
அழிவை உமிழ்கின்றன‌
எந்நேரமும்...


- ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.