தவிப்பு-1
முற்றிமலர்ந்த
மல்லிகையை
வண்டுதொடுவதை விட
அதை யாரோ
தட்டிப்பறிக்கையில்
மனம் கசக்கும் கண்களை....
தவிப்பு-2
யாரோ என நினைத்து
நீ என்னோடு
Phoneல்
பேசுகையில்
பேர் கேட்கமாட்டாயோ
என தவியாய் தவிக்கும்
என் மனசு...
தவிப்பு-3
தெருவோர
நாய்க்குட்டி
தாய்மடியில்
முட்டிக்கிடக்கையில்
மனமேங்கும்
தாய்தேடி....
தவிப்பு-4
வாசலில்
கிடக்கும் செருப்பு
பிச்சைக்காரரின்
தொடர் கெஞ்சல்
வேண்டுதலறுத்தது மனம்....
தவிப்பு-5
பசியெழுப்பும்
குரலில் குயிலோசை
ரயில்பயண குருட்டுப்பிச்சை
செவிடாய் பிறக்காத நான்
எனக்கும் பசி
செய்வதறியாது
சிதைகிறது மனம்...
தவிப்பு - 6
காற்றில் அலையும்
ஒற்றை மைனா
நீயில்லாத நான்
வீணே கழியும் பொழுதுகள்
என்னசெய்ய
முகம்தடவும் கைகள்...
தவிப்பு-7
நல்ல மழை
கையிலிருக்கும்
குடைதடுக்கிறது
நனையத் துடிக்கும் மனதை...
- ரிஷி சேது (
தவிப்பு
More articles by ரிஷி சேது
- மேகங்களில்லாதது என் வானம் (19 ஜூலை 2010)
- சில ஓவியங்கள்... (17 ஜூன் 2010)
- பூ (25 ஏப் 2010)
- நீ (22 ஏப் 2010)
- முற்றுப்புள்ளி (20 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.