அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது!
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை;
ஆனாலும்,
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்!
************************
ஒற்றைக் குடைக்குள்
நெருக்கமாகக்
காதலர்கள் நகர்ந்தால்
கோபப்படுகிறான் வருணன்!
மழை பெருக
சாரல் தவிர்க்க
மேலும் நெருக்கமாக
மீண்டும் கோபம்
மீண்டும் சாரல்
மீண்டும் நெருக்கம்
************************
உன் கால்தடத்தில்
தேங்கி இருந்த மழைநீரைத்
தீர்த்தமென்கிறேன்;
அப்படியென்றால்
நீ தேவதைதானே!
************************
கடலுக்குள் விழுந்த
மழைத்துளி போல்
பத்திரப்படுத்திவிட்டேன்
என்னுள் விழுந்த உன்னை!
************************
மழையில் நனைபவளே!
தெரிந்து கொள்
உன் அழகை பிம்பமாக்கிக் கொள்ள
வான் அவன் விடும்
கோடிக் கோடி கண்ணாடிகள் அவை!
- ப்ரியன் (
ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்
More articles by ப்ரியன்
- பலூன் (25 ஏப் 2010)
- புல்லாங்குழல் (25 ஏப் 2010)
- சுடுகாடு (25 ஏப் 2010)
- வர்ணத்துளி (25 ஏப் 2010)
- குறுநகை (25 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.